11TH TAMIL தாகூரின் கடிதங்கள்

11TH TAMIL தாகூரின் கடிதங்கள்

11TH TAMIL தாகூரின் கடிதங்கள்
11TH TAMIL தாகூரின் கடிதங்கள்

11TH TAMIL தாகூரின் கடிதங்கள்

  • செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது கடிதமாகும்.
  • அதுவே, உரிய வடிவுடன் பொருட்செறிவுவாலும் கற்பனை நயத்தாலும் மொழிவளத்தாலும் கடித இலக்கியமாக உருப்பெறுகின்றது.

தாகூரின் சிதறிய கடிதங்கள்

  • சிதறிய கடிதங்கள் என்னும் இக்கடிதம், தாகூரின் சிதறிய பக்கங்கள் என்னும் தொகுப்பில் உள்ள 113 வது கடிதம் ஆகும்.
  • இது எழுதப்பட்ட இடம் = சிலாயிதக்
  • நாள் = 9 ஆகஸ்ட் 1894
  • கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி = பத்மா

வழியிலும் வழிமுடிவிலும்

  • எழுதப்பட்ட நாள் = 16 செப்டம்பர் 1929
  • இது வழியிலும் வழிமுடிவிலும் என்ற கடித தொகுப்பில் உள்ள 42 வது கடிதம்
  • “ஜாதீ” = முல்லை வகையில் ஒரு பூ (சமேலி)
  • தாகூருக்கு தெரியாத மலரின் பெயர் = ஸேவுந்தி
  • சாந்திநிகேதனில் தாகூர் குறிப்பிடும் மரம் = பியால
  • “கபோதாக்ஷி” என்பதன் பொருள் = புறாக்கண்ணி
  • “மயூராக்ஷி” என்பதன் பொருள் = மயில் விழியாள்
  • “இச்சாமதி” என்பதன் பொருள் = விருப்புடையவள்
  • “பௌ-கதா-கவோ” என்பது = ஒரு வகை புறா இனம்
  • பரிட்சையில் தேற வேண்டி சரித்திரப் பாடத்தை புறக்கணிக்க முடியாது என்கிறார் = தாகூர்

ரவீந்திரநாத் தாகூர்

11TH TAMIL தாகூரின் கடிதங்கள்
11TH TAMIL தாகூரின் கடிதங்கள்
  • ‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் = தாகூர்
  • ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்று அழைக்கப்படுபவர் = தாகூர்
  • தாகூர் தம் இளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
  • 1913ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலையால் மனம் வருந்திய தாகூர், ஆங்கிலேய அரசைக் கண்டித்து அவர்கள் வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் திருப்பி அளித்தார்.
  • இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக்குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார்.
  • அவற்றுடன் அவருடைய ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டால் அவருடைய ஆளுமையின் பேருருவை அறிய முடியும்.
  • குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு 1921இல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
  • ‘குருதேவ்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தாகூரின் ‘ஜனகணமன என்னும் பாடல் இந்தியாவின் நாட்டுப் பண்ணாகவும் ‘அமர் சோனார் பங்களா என்னும் பாடல் வங்காள தேசத்தின் நாட்டுப் பண்ணாகவும் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

தாகூரின் கடிதங்கள்

  • சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் த.நா. குமாரசுவாமி.
  • அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
  • வங்க அரசு, தமிழ்-வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.

 

 

Leave a Reply