12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து
12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

  • தமிழ் மொழியை வாழ்த்தி பாடல் இயற்றப்பட்ட நூல் = தமிழரசி குறவஞ்சி.
  • “தமிழரசி குறவஞ்சி” நூலின் ஆசிரியர் = தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

தமிழரசி குறவஞ்சி நூல் குறிப்பு

தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை ஆசிரியர் குறிப்பு

  • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
  • பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
  • விரைந்து கவி பாடுவதில் வல்லவர் = தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை
  • கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர் = தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை
  • “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார் = தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை
  • கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
  • தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்நூலை இயற்றினார்.
  • இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.

அருஞ்சொற்பொருள்

  • நண்ணும் = கிட்டிய, வாய்த்த
  • இசைத்த = பொருந்தச் செய்த
  • வண்ணம் = ஓசை
  • பிறமொழி = வேற்றுமொழி
  • வண்மை = வளமை

இலக்கணக்குறிப்பு

  • அசைத்த, இசைத்த = பெயரெச்சம்
  • உலகம் = இடவாகுபெயர்
  • திருந்துமொழி = வினைத்தொகை
  • வாழிய = வியங்கோள் வினைமுற்று
  • அடிவாழ்த்துவம் = இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • வாழ்த்துவம் = தன்மைப் பன்மை வினைமுற்று

Leave a Reply