12 TAMIL தமிழர் குடும்ப முறை
12 TAMIL தமிழர் குடும்ப முறை
- குடும்பம் எனும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
- குடும்பம் -> குளம் -> கூட்டம் -> பெருங்குழு -> சமூகம் என்று அமைப்பு விரிகிறது
- சமூகத்தின் அடிப்படை அலகு = குடும்பம் ஆகும்
குடும்பம்
- குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை = திருமணம்
- குடும்பம், திருமணம் = ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகின்றன
- குறிப்பு:
- “திருமணம்”, “குடும்பம்” = இவ்விரு வார்த்தைகளும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம் பெறவில்லை
- “குடும்பம்” எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில் (குறள் – 1029, இயல் – குடியியல், அதிகாரம் – குடிசெயல் வகை) தான் பயின்று வருகிறது
- சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் = குடம்பை, குடும்பு, கடும்பு
- “குடம்பை” = என்ற சொல் 20 இடங்களில் சங்க இலக்கியத்தில் வருகிறது
- “குடும்பு” = என்பதன் பொருள் “கூடி வாழ்தல்” ஆகும்
- குடும்பு எனும் சொல்லுடன் “அம்” விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக (Semantic Extension) “குடும்பம்” எனும் சொல் அமைந்தது
- தொல்காப்பியரின் பொருளியல் நூற்பாவில் “இல்”, “மனை” ஆகிய இரண்டு வாழிடங்கள் குறிப்பிடப்படுகிறது
இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிழவி கேட்கும் வழியதுவே மனையகம் புகாஅக் காலை யான – தொல்காப்பிய பொருளியல் – 129 |
வாழிடம்
- சங்க இலக்கியத்தில் குடும்பங்களின் வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளை கூறும் சொற்கள் = இல்லை, மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம்
- மருதத்தினைப் பாடல் ஒன்றில் மகளிர் “தம்மனை”, “நும்மனை” (அகம். 346 : 16 – 17) என மனைவியின் இல்லத்தையும், கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினை காண முடிகிறது
- புக்கில் = தற்காலிகத் தங்குமிடம் (புறம் 221-6)
- தன்மனை = திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம்
- நும்மனை = கணவனின் இல்லம்
- “மனை” எனும் சொல் நம்மனை, தம்மனை, எம்மனை, இம்மனை, உம்மனை, நின்மனை, நுந்தைமனை, நன்மனை, வறுமனை, வளமனை, கடிமனை, தாய்மனை எனச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது
- “மனையோள்” = சங்கப்பாடலில் பயின்று வரும் சொல்லாகும்
- வாழிடத்தை குறிக்கும் முதன்மைச் சொல் = மனை
மணந்தகம்
- குடும்பத்தின் தொடக்கம் = திருமணம்
- மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே = மணந்தகம் (Family of Procreation)
- முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது
- தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது
- இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி “செவிலிக்குரியது” என்று கூறுகிறது தொல்காப்பியம்
தாய்வழிக் குடும்பம்
- சங்ககாலத்தில் கண சமுகத்திற்கு தலைமை ஏற்றது = தாயே
- தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது
- பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- சங்க இலக்கிய தொடர்களில் “அவளது மகன்” என்றே குறிக்கப்பட்டுள்ளது. “அவனது மகன்” என்று கூறப்படவில்லை
தாயமுறை
- சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை (Matrilocal) இருந்துள்ளது
- திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்துக்கு சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது
- தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.குறுந்தொகையில் உள்ள மருதத்திணை பாடலான 295 பாடல், “தாய்வழிச் சொத்துக்கள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன” என்பதை தெளிவாக கூறுகிறது
தந்தைவழிக் குடும்பம்
- ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் (Patrilocal) வாழ வேண்டும்.
- தலைவி, தலைவனின் இல்லத்திற்கு அழைத்து வந்த பொது தலைவனின் தாய் அவளுக்குச் “சிலம்புகழி” செய்திருக்கிறாள்
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நல்மணம் கழிக – ஐங்குறுநூறு 399 : 1-2 |
- இதன்வழி மணமக்களின் வாழ்விடம் கணவன் அகம் என்பதை உறுதிப்படுத்தலாம்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே – குறுந்தொகை 135 |
தனிக்குடும்பம்
- தனிக்குடும்பம் (Nuclear Family) தோன்றுவதற்கான தொடக்கநிலை பற்றி சங்க இலக்கியங்கள் கூறியுள்ளன
- “இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை” பற்றி கூறுவது = ஐங்குறுநூறு
- “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர் என ஐங்குறுநூறு (401) கூறுகிறது
- தனிக்குடும்ப வகை, சமூக படிமலர்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்றாகும்.
விரிந்த குடும்பம்
- சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப” (Extended Family) முறையும் காண முடிகிறது.
- கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப (Lineally Extended Family) முறையை கூறியவர் = ஒக்கூர் மாசாத்தியார் (புறநானூறு பாடல் 279)
குடும்ப உறுப்பினர்கள்
- நற்றாய் (பெற்றத் தாய்)
- செவிலித்தாய்
- செவிலித்தாயின் மகள் (தோழி)
- சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாக சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது
பக்தவத்சல பாரதி
- “தமிழர் குடும்ப முறை” என்னும் இப்பனுவல், இதழில் வெளிவாத கட்டுரையின் சுருக்கம் ஆகும்
- இதனை எழுதியவர் = பக்தவத்சல பாரதி
- இவர் தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை இவர் முன்னெடுத்து வருகிறார்
- பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது ஆகும்
- இவரின் நூல்கள் = இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு
- ஆசிரியர் பக்தவத்சல பாரதி பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
- 12 TAMIL இளந்தமிழே
- 12 TAMIL தமிழ் மொழியின் நடை அழகியல்
- 12 TAMIL தன்னேர் இலாத தமிழ்
- 12 TAMIL தம்பி நெல்லையப்பருக்கு
- 12 TAMIL இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- 12 TAMIL வசனநடை கைவந்த வள்ளலார்
- 12 TAMIL பெருமழைக்காலம்
- 12 TAMIL பிறகொரு நாள் கோடை
- 12 TAMIL நெடுநல்வாடை
- 12 TAMIL முதல்கல்