8TH TAMIL சொற்பூங்கா
8TH TAMIL சொற்பூங்கா
- மொழி வளரும் தன்மை உடையது.
- ஒவ்வொரு மொழியிலும் காலந்தோறும் புதிது புதிதாக இலக்கியங்கள் தோன்றுவது போலவே புதிய சொற்களும் தோன்றுகின்றன.
- மொழி வளர்ச்சியின் அடையாளம் எனப்படுவது = ஓர் அடிச்சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்துப் பெருகுதல் ஆகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தமிழில் சொல் என்பதன் பொருள்
- தமிழில் “சொல்” என்பதற்கு “நெல்” என்ற பொருளும் உண்டு.
- “சொன்றி, சோறு” என்பவை அவ்வழியில் வந்தவை.
- “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
மொழி வகைகள்
- தமிழில் “மொழி” என்பதற்கு “சொல்” என்ற பொருளும் உண்டு.
- மொழியை (சொல்லை) மூன்று வகையாக பிரிப்பர். அவை,
- ஓரெழுத்து மொழி
- ஈரெழுத்து மொழி
- இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களை உடைய மொழி
தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒரு மொழி
- “நெட்டெழுத்து (நெடில்) ஏழே ஓரெழுத்து ஒருமொழி” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
- குற்றெழுத்து (குறில்) ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதனை “குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே” என்கிறார் தொல்காப்பியர்.
- தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் = ஏழு.
நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி
- நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் = 42.
- நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி 42 இல் = நெடில் எழுத்துக்கள் 40, குறில் எழுத்துக்கள் 2.
40 நெடில் எழுத்துக்கள் + 2 குறில் எழுதுக்கள் (நொ, து) = ஓரெழுத்து ஒருமொழி (42) |
- நன்னூலார் “நொ, து” என்னும் “உயிர்மெய் எழுத்துக்களும்” (குறில்) ஓரெழுத்து ஒருமொளியாக வரும் என்கிறார்.
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்
எழுத்து வரிசை |
மொத்த எழுத்துக்கள் | ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் |
உயிர் எழுத்து | 6 |
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ |
‘ம’கர வரிசை |
6 | மா, மீ, மூ, மே, மை, மோ |
‘த’கர வரிசை | 5 |
தா தீ, தூ, தே, தை |
‘ப’கர வரிசை |
5 | பா, பூ, பே, பை, போ |
‘ந’கர வரிசை | 5 |
நா, நீ, நே, நை, நோ |
‘க’கர வரிசை |
4 | கா, கூ, கை, கோ |
‘ச’கர வரிசை | 4 |
சா, சீ, சே, சோ |
‘வ’கர வரிசை |
4 | வா, வீ, வை, வௌ |
‘ய’கர வரிசை | 1 |
யா |
குறில் எழுத்து |
2 |
நொ, து |
கலைச்சொல் உருவாக்கம்
- பூ, கா ஆகிய ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் இணைந்து “பூங்கா” என்ற சொல் உருவாகியது.
- “யா” என்ற எழுத்துக்கு “வினா” என்று பொருள்.
- ஆ, மா ஆகிய சொற்கள் இணைந்து “ஆமா” என்ற சொல் உருவானது.
- காட்டுப் பசுவிற்கு, “ஆமா” என்ற பெயரும் உண்டு.
- “மா” என்ற எழுத்துக்கு “விலங்கு” என்ற பொருளும் உண்டு.
ஈ என்னும் பொதுப்பெயர்
- ஈ என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பை காட்டி நிற்கிறது.
- ஈ என்பதன் பொருள் = ஈக (வழங்குதல்)
ஏகாரம்
- “ஏய்” என்பதன் பொருள் = என்னோடு கூடு, பொருந்து, சேர்.
- கூர்மையான முல்லை உடைய முள்ளம்பன்றியின் பழைய பெயர் = எய்ப்பன்றி.
செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்
- செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- “செந்தமிழ் அந்தணர்” என அழைக்கப்படுபவர் = இரா. இளங்குமரனார்.
- நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
- இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
- திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
- இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து இங்குத் தரப்பட்டுள்ளன.
- “தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்” என்னும் நூலை எழுதியவர் = இரா. இளங்குமரனார்.
- சந்தை
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- 8TH TAMIL சொற்பூங்கா
- 8TH TAMIL சொற்பூங்கா
- 8TH TAMIL சொற்பூங்கா
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- யசோதர காவியம்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை
- தாய்மைக்கு வறட்சி இல்லை