9TH TAMIL சந்தை

9TH TAMIL சந்தை

9TH TAMIL சந்தை

9TH TAMIL சந்தை

  • வண்டிப் பட்டைகளின் தொடர்ந்த தாளக்கட்டோடு, இழுத்துச் செல்கிற மாடுகளின் கழுத்துமணி ஓசையோடு சந்தைக்குப் பொருள் கொண்டுபோவதும் பொருள் வாங்கிவருவதுமான மகிழ்ச்சி பெருநகரங்களில் தொலைந்துவிட்டது.
  • இருப்பினும், இன்றும் சில இடங்களில் சந்தை மரபு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
  • பல்பொருள் அங்காடிகளின் வருகை, வணிகருக்கும் மக்களுக்குமான உறவைக் குறைத்து வருகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கதை

  • பெரியவர் = தணிகாசலம்
  • ஊர் = பூஞ்சோலை கிராமம்
  • பெரியவரின் பெயரன் = மூர்த்தி (ஒன்பதாம் வகுப்பு)
  • பெரியவரின் பெயர்த்தி = கீர்த்தனா (நான்காம் வகுப்பு)
  • மூர்த்தி, கீர்த்தனாவின் ஊர் = புதுச்சேரி
9TH TAMIL சந்தை
9TH TAMIL சந்தை

நாளங்காடி அல்லங்காடி

  • “ஷாப்பிங் மால்” என்பதன் தமிழ்ச்சொல் = பல்லங்காடி.
  • நாளங்காடி = பகலில் செயல்படும் கடைவீதி கடைகள்
  • அல்லங்காடி = இரவில் செயல்படும் கடைவீதி கடைகள்.

சந்தை என்பது யாது

  • கிராமத்து மக்கள் தங்களோட நிலத்தில் விளையும் காய்கறி, கீரை, தானியம் போன்ற பொருள்களை விற்கவும் தேவையான மாற்றுப் பொருள்களை வாங்கவும் விரும்பி “முச்சந்தி, நாற்சந்தின்னு” மக்கள் கூடும் இடங்களில் கடை விரிச்சாங்க.
  • இது தான் சந்தை எனப்படும் பொது வணிக இடமாக மாறியது.

கிராமச் சந்தையின் அடிப்படை

  • கிராமச் சந்தையின் அடிப்படை = கலப்படம் இல்லாத நேர்மை.
  • கிராமச் சந்தையின் நோக்கம் = மக்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்தல்.

கிராமச் சந்தை

  • உள்ளூர்த் தேவைக்கு ஏற்ற மாதிரி, அங்க விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கிற சிறு வணிகச் செயல்பாடு தான் = கிராமச் சந்தை.
9TH TAMIL சந்தை
9TH TAMIL சந்தை

கால்நடைச் சந்தை

  • மக்கள் நாகரிகம் “குறிஞ்சி” நிலத்தில் வேரூன்றி, “முல்லை” நிலத்தில் வளர்ந்து, “மருத” நிலத்தில் முழுமையும் வளமையும் அடைந்தது.
  • உழவுத் தொழிலில் மக்களுக்கு பக்க பலமாக இருந்தவை கால்நடைகள்.
  • கால்நடைகளின் தேவை அதிகமாகி அதனை வாங்கவும், விற்கவும் தேவை ஏற்பட்டது அதனால் கால்நடை சந்தை உருவாகியது.

மாட்டுத்தாவணி

  • மதுரை அருகே மாட்டு சந்தையை “மாட்டுத்தாவணி” என்று கூறுவர்.
  • “தாவணி” என்பதன் பொருள் = சந்தை.

பிரபலமான சந்தைகள்

  • மணப்பாறை = மாட்டுச்சந்தை
  • அய்யலூர் = ஆட்டுச் சந்தை
  • நாகர்கோவில் தோவாளை = பூச்சந்தை
  • ஈரோடு = ஜவுளிச் சந்தை
  • கடலூர் காராமணி குப்பம் = கருவாட்டுச் சந்தை
  • நாகப்பட்டினம் = மீன் சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தை

  • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிச் சந்தை 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுகிறது.
  • பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தக்காளி முதல் தங்கம் வரை வாங்குவதற்குக் கூடுகிறார்கள்.
  • விற்பவரும் வாங்குபவரும் உறவுகளாய்ப் பேசி மகிழும் ஆரவாரம் அங்கே ஒலிக்கிறது.
  • 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது.
  • கலப்படமில்லாத பொருள்களை வருவாய் நோக்கின்றி அச்சந்தை இன்றும் விற்பனை செய்கிறது.

பாடலாசிரியர் மருதகாசி

9TH TAMIL சந்தை
9TH TAMIL சந்தை

பொதியை ஏத்தி வண்டியிலே

பொள்ளாச்சி சந்தையிலே

விருதுநகர் வியாபாரிக்கு – செல்லக்கண்ணு

நீயும் வித்துப்போட்டுப்

பணத்த எண்ணு செல்லக்கண்ணு.

 – பாடலாசிரியர் மருதகாசி

மாலை நேர சந்தைகள்

  • இன்றைக்கும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், வாரச் சந்தைகளும் மாதச் சந்தைகளும் குறிப்பிட்ட சில பொருள்களை மட்டும் விற்கும் சந்தைகளும் மாலை நேரச் சந்தைகளும் நடந்தவண்ணம் உள்ளன.

 

Leave a Reply