8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு

8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு

8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு

8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு

  • அ = வாயை திறந்து ஒலித்தால் ஒலிக்கும்.
  • உ = ஒலிக்கும் பொழுது இதழ்கள் குவிகின்றன.
  • க = நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஓட்டும் போது க என்னும் எழுத்து பிறக்கிறது.
  • ப = இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

எழுத்துகளின் பிறப்பு

  • உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

எழுத்துகளின் பிறப்பு வகைகள்

  • எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு
8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு

எழுத்துகளின் இடப்பிறப்பு

  • எழுத்துகளின் இடப்பிறப்பை ஐந்து பிரிவாக பிரிப்பர். அவை,
    • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
    • வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
    • மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
    • இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
    • ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
  • அதாவது,
    • உயிர் எழுத்துகள் (12) = கழுத்து
    • வல்லின மெய் எழுத்து (6) = மார்பு
    • மெல்லின மெய் எழுத்து (6) = மூக்கு
    • இடையின மெய் எழுத்து (6) = கழுத்து
    • ஆய்த எழுத்து (1) = தலை

உயிர் எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு

அ, ஆ

வாயை திறப்பதால்
 

இ, ஈ, எ, ஏ, ஐ

வாய் திறக்கும் முயற்சி

+

நாக்கின் அடி ஓரமானது மேல் வாய்ப் பல்லைப் பொருந்துதல்

 

உ, ஊ, ஒ, ஓ, ஔ

வாய்திறக்கும் முயற்சி

+

இதழ்களைப் குவிப்பதால்

மெய் எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு

8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு
8TH TAMIL எழுத்துகளின் பிறப்பு
 

க், ங்

நாவின் முதற்பகுதி

+

அண்ணத்தின் அடிப்பகுதியை பொருத்துவதால்

 

ச், ஞ்

நாவின் இடைப்பகுதி

+

நடு அண்ணத்தின் இடைப்பகுதியை பொருத்துவதால்

 

ட், ண்

நாவின் நுனி

+

அண்ணத்தின் நுனியை பொருந்துவதால்

 

த், ந்

மேல் வாய்ப்பல்லின் அடி

+

நாக்கின் நுனி பொருந்துவதால்

 

ப், ம்

மேல் இதழும்

+

கீழ் இதழும் பொருந்துவதால்

 

ய்

நாக்கின் அடிப்பகுதி

+

மேல் வாயின் அடிப்பகுதியை பொருந்துவதால்

ர், ழ்

மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால்

 

ல்

மேல்வாய்ப் பல்லின் அடியை

+

நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால்

ள்

மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதால்

 

வ்

மேல் வாய்ப் பல்லை

+

கீழ் உதடு பொருந்துவதால்

ற், ன்

மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால்

சார்பெழுத்துகள் முயற்சிப் பிறப்பு

  • ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
  • பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.

 

 

← Back

Thank you for your response. ✨

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *