8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Table of Contents

8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி
8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

  • மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான்.
  • மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான்.
  • எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன.
  • அவை ஒரே மொழியிலும்கூட, காலந்தோறும் மாறி வருகின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பேச்சுமொழி உருவாக்கம்

  • மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.
  • காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.
  • அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான்.
  • அச்சொற்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டன.
  • காலப்போக்கில் அவை பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.
8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி
8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை

  • மனிதன் தனது கருத்துக்களை தெரிவிக்க பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் “குறியீடுகளை” பொறித்து வைத்தான்.
  • “குறியீடுகளே” = எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

ஓவிய எழுத்து

  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
  • இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

ஒலி எழுத்து நிலை

  • ஒவ்வொரு வடிவமும் ஒரு ஒலி சொல்லாக மாறியது.
  • ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு ஓசையை குறித்தது.
  • “ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து” என்ற உருவான நிலையே “ஒலி எழுத்து நிலை” என்பர்.

ஓவியத்தின் திரிபுகள்

  • இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

அச்சுக்கலை

  • காலந்தோறும் பல்வேறு மாற்றங்களை அடைந்து வந்துள்ள தமிழ் எழுத்துக்கள், “அச்சுக்கலை” தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

கல்வெட்டு, செப்பேடுகள்

  • தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
  • கல்வெட்டுகள் கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
  • கல்வெட்டுகள் எப்பொழுது முதல் கிடைக்கின்றன = கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல்
  • செப்பேடுகள் கி.பி. (பொ.ஆ.) ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
  • செப்பேடுகள் எப்பொழுது முதல் கிடைக்கின்றன = கி.பி. (பொ.ஆ.) ஏழாம் நூற்றாண்டு முதல்

தமிழில் இரண்டு வகை எழுத்துக்கள்

  • கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை கொண்டு இருவகையாகப் பிரிக்கலாம். அவை,
    • வட்டெழுத்து
    • தமிழெழுத்து

வட்டெழுத்து என்றால் என்ன

  • வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும்.
  • வட்டெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.
  • சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன.
  • எந்த நூற்றாண்டு வரை சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன = பதினொன்றாம் நூற்றாண்டு வரை.

கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள்

  • முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.
  • கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் எப்பொழுது முதல் காணப்படுகின்றன = பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு.

கண்ணெழுத்துகள்

  • கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் = கண்ணெழுத்துகள்.
  • இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” (சிலம்பு 5 : 112) என்னும் தொடரால் அறியலாம்.
  • “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்ற தொடர் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம்.

எழுத்துக்களில் மாற்றம் ஏற்படக் காரணம்

  • எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்படக் காரணங்கள்
    • எழுதப்படும் பொருள்களின் தன்மை
    • அழகுணர்ச்சி
  • பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
  • அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன.
  • பாறைகளில் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன.
  • ஓலைகளில் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்.
  • 8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

புள்ளிகளும் எழுத்துக்களும்

  • எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
  • எடுத்துக்காட்டாக “எ்து” என எழுதப்பட்டால் “எது” என்றும் “எது” என எழுதப்பட்டால் “ஏது” என்றும் ஒலித்தனர்.
  • அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா, த. = தா ).
  • ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின்முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க = கை).
  • எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ.. = தௌ ).
  • மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப) இட்டனர்.
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

தற்கால எழுத்து மாற்றம்

  • நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக = துணைக்கால் (ா) பயன்படுத்தப்படுகிறது.
  • ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக = இணைக்கொம்பு (ை) பயன்படுத்தப்படுகிறது
  • ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக = கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.

எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை

  • ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
  • ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
  • புள்ளி இடப்பட்டு எழுதவேண்டிய எழுத்துகள் புள்ளிகள் இல்லாமல் எழுதப்படும்போது அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
  • இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
  • 8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

வீரமாமுனிவர்

  • தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
  • எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார்.
  • எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஓ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
  • அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு (ே), இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து (ே ா) புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்தம்

8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி
8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

பெரியார் எழுத்து சீர்திருத்தம்

8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி
8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழி

  • காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ் மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது;
  • தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

அரச்சலூர் கல்வெட்டு

  • தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என்பதற்கு சான்று = அரச்சலூர் கல்வெட்டு.
  • இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
  • 8TH TAMIL தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழக கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு

  • ‘ஸ’ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
  • மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
  • எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.

 

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *