9TH TAMIL இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
9TH TAMIL இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- இயந்திரங்கள் இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இன்று தொழில்நுட்பம் நம்மைச் சூழ்ந்துள்ளது.
- இணையவழிப் பயன்பாடு வாழ்வை எளிதாக்கி, நேரத்தையும் உழைப்பையும் வீணாக்காமல் தடுக்கிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஒளிப்படி இயந்திரம் (Photo Copier)
- நகல் எடுக்க பயன்படும் இயந்திரம்.
- ஒளிப்படி இயந்திரத்தை “ஜெராக்ஸ்” (Xerox) என்றும் அழைப்பர்.
- ஒளிப்படி இயந்திரத்தை உருவாக்கியவர் = செஸ்டர் கார்ல்சன் (Chester Carlson).
- கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக்கொண்டு, 1938இல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
- கிரேக்க மொழியில் “சீரோகிராஃபி” (Xerography) என்பதன் பொருள் = உலர் எழுத்துமுறை (Dry Writing)
- செஸ்டர் கார்ல்சன், ஒளிப்படி இயந்திரத்தை உலகிற்கு அறிமுகம் செய்த ஆண்டு = 1959.
- 1959இல் செஸ்டர் கார்ல்சன் ஜெராக்ஸ் இயந்திரத்தை உலகிற்கு அறிமுகம் செய்தார்.
தொலைநகல் இயந்திரம் (Fax)
- 1846 இல் ஸ்காட்லாந்துக் கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பார் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.
- குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடும் காப்புரிமையை பெற்றவர் = அலெக்சாண்டர் பெயின்.
- இத்தாலி நாட்டு இயற்பியல் அறிஞர் ஜியோவான்னி காசில்லி (Giovanni Caselli) பான்டெலிகிராஃப் (Pantelegraph) என்ற தொலைநகல் கருவியை உருவாக்கினார்.
- பான்டெலிகிராஃப் (Pantelegraph) என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர் = இத்தாலி நாட்டின் ஜியோவான்னி காசில்லி (Giovanni Caselli)
- உலகில் முதன் முதலில் தொலைநகல் சேவை துவங்கப்பட்ட இடம் = 1865இல் பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு.
- தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்குப் பதினோராண்டுகளுக்கு முன்பே இந்நிகழ்வு நடந்தது.
- 1985இல் அமெரிக்காவின் ஹாங்க் மாக்னஸ்கி (Hank Magnuski) என்பவர் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.
- அந்த இயந்திரத்திற்கு காமா ஃபேக்ஸ் (Gamma Fax) என்று பெயரிட்டு விற்பனைக்குக் கொண்டுவந்தார்.
- கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் = 1985இல் அமெரிக்காவின் ஹாங்க் மாக்னஸ்கி.
தானியங்கி பண இயந்திரம் (Automated Teller Machine)
- தானியங்கி பண இயந்திரத்தை (Automated Teller Machine) கண்டுபிடித்தவர் = இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பாரன் (1967 ஜூன் 27 ஆம் தேதி).
- “நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்துப் பயன்படுத்துவதற்கொரு வழியைச் சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது. அங்கு சாக்லேட்; இங்கே பணம்” என்று கூறியவர் = ஜான் ஷெப்பர்ட் பாரன்.
அட்டை தேய்ப்பி இயந்திரம் (Swiping Machine)
- அட்டை தேய்ப்பி இயந்திரத்தின் (Swiping Machine) வேறு பெயர்கள் = கட்டணம் செலுத்தும் கருவி (payment terminal) என்றும் விற்பனைக் கருவி (point of sale terminal) என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு (Adrian Ashfield) என்பவர் 1962இல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றிருந்தார்.
- தற்காலத்தில் பயன்படுத்தப்படும் அட்டைகளில் சில்லு (chip) என்று சொல்லப்படும் (எண்ணிய) சில்லுகள் மூலம் வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
தமிழக அரசின் நியாயவிலைக் கடை – திறனட்டைக் கருவி (TNePDS)
- தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் “திறன் அட்டைகளாக” (smart cards) மாற்றப்பட்டுள்ளன.
ஆளறிசோதனைக் கருவி (Biometric Device)
- ஆளறிசோதனைக் கருவி மனிதனின் கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றில் ஒன்றையோ அனைத்தையுமோ அடையாளமாகப் பதிவு செய்யவும் பதிவு செய்த அடையாளம் மூலம் மறுபடி ஆளை அறியவும் பயன்படுகிறது.
- நடுவண் அரசின் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்கு நம்முடைய ஒளிப்படத்தையும் விழித்திரையையும் இரு கைகளின் பத்து விரல் ரேகைகளையும் பதிவு செய்கிறோம்.
- வருகைப் பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவுக்காகவும் பயன்படுத்தப்படும் கருவி = ஆளறிசோதனைக் கருவி (Biometric Device)
இணைய வணிகம்
- இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் = இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் (Michael Aldrich) 1979இல் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்.
- 1989இல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.
- இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு = 1991.
- 1990இல் டிம் பெர்னெர்ஸ் லீ (Tim Berners – Lee) வையக விரிவு வலை வழங்கியை (www – server) உருவாக்கினார்.
- “இணையத்தில் இது இல்லையெனில், உலகத்தில் அது நடைபெறவேயில்லை!” என்பது டிம் பெர்னெர்ஸ் லீயின் புகழ் பெற்ற வாசகம்.
இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு (IRCTC)
- 2002ஆம் ஆண்டு இணையவழிப் பதிவு அறிமுகப்படுத்தப்பட்ட போது சராசரியாக ஒரு நாளைக்கு 29 பயணச்சீட்டுகள் இணையவழியே பதிவு செய்யப்பட்டன.
- ஆனால், 13 ஆண்டுகள் கழித்து 2015 ஏப்ரல் 1 அன்று ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது ஒரு சாதனை.
- தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யும் வகையிலும் 3 இலட்சம் பயனர்கள் ஒரே நேரத்தில் இணையவழிச் சேவையைப் பயன்படுத்தவும் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைய வழித் தேர்வுகள்
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசியத் திறனறித் தேர்வு (National Talent Search Exam)
- எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேசியத் திறனறித் தேர்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (National Means-cum -Merit Scholarship Scheme Exam)
- கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனறித் தேர்வு (TRUST – Tamilnadu Rural Students Talent Search Examination)
கலைச்சொல்லாக்கம்
- விரலி = Pendrive
- கோப்பு = Document
- உறை = Folder
- ஒளிப்படி இயந்திரம் = Photo Copier
- உலர் எழுத்துமுறை = Dry Writing
- தொலைநகல் இயந்திரம் = Fax
- தானியங்கி பண இயந்திரம் = ATM (Automated Teller Machine)
- அட்டை தேய்ப்பி இயந்திரம் = Swiping Machine
- சில்லு = Chip
- திறன் அட்டை = Smart cards
- வருடுதல் = Scanning
- ஆளறி சோதனைக் கருவி = Biometric Device
- தேசியத் திறனறித் தேர்வு = National Talent Search Exam
- தேசியத் திறனறித் தேர்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு = National Means-cum -Merit Scholarship Scheme Exam
- ஊரகத் திறனறித் தேர்வு = TRUST – Tamilnadu Rural Students Talent Search Examination.
- தமிழ்விடு தூது
- வளரும் செல்வம்
- தொடர் இலக்கணம்
- நீரின்றி அமையாது உலகு
- பட்ட மரம்
- பெரியபுராணம்
- புறநானூறு
- தண்ணீர்
- துணைவினைகள்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்