9TH TAMIL உயிர்வகை

9TH TAMIL உயிர்வகை

9TH TAMIL உயிர்வகை

9TH TAMIL உயிர்வகை

  • கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல உணர்வுகளின் வாயிலாகவே அறிவு என்பதை நாம் பெறுகிறோம்.
  • இதற்குரிய பொறிகளான கண், காது, வாய், மூக்கு, உடல் என்னும் ஐந்து உறுப்புகளில் எது குறைந்தாலும் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை இழந்துவிடுவோம்.
  • ஆறாவது அறிவு மனத்தால் அறியப்படுவது என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பாடல்

          ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

இலக்கணக்குறிப்பு

  • உணர்ந்தோர் = வினையாலணையும் பெயர்
9TH TAMIL உயிர்வகை
9TH TAMIL உயிர்வகை

தொல்காப்பியர் கூறும் ஆறு அறிவுகள்

அறிவுநிலை

அறியும் ஆற்றல்

உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு

ஓரறிவு

உற்றறிதல் (தொடுதல் உணர்வு) புல், மரம்
ஈரறிவு உற்றறிதல் + சுவைத்தல்

சிப்பி, நத்தை

மூவறிவு

உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் கரையான், எறும்பு
நான்கறிவு உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல்

நண்டு, தும்பி

ஐந்தறிவு

உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் பறவை, விலங்கு
ஆறறிவு உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் +பகுத்தறிதல் (மனம்)

மனிதன்

தொல்காப்பியம் நூல் குறிப்பு

  • தமிழ் மொழியில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம்.
  • இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.
  • தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது.
  • இது எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்டுள்ளது.
  • எழுத்து, சொல் அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
  • பொருளதிகாரத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் இந்நூல் விளக்குகிறது.
  • இந்நூலில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
  • குறிப்பாகப் பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.
  • இது தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சிறந்த சான்றாகும்.

 

 

Leave a Reply