9TH TAMIL மதுரைக்காஞ்சி

9TH TAMIL மதுரைக்காஞ்சி

9TH TAMIL மதுரைக்காஞ்சி

9TH TAMIL மதுரைக்காஞ்சி

  • மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்றான “மதுரைக்காஞ்சி” முதன்மையானது ஆகும்.
  • இந்நூலில் மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன.
  • காலை தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவது போன்ற வருணனைப் பாடல் இது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மதுரையில் வனவிலங்கு சரணாலயம்

“பொறிமயிர் வாரணம் …

கூட்டுறை வயமாப் புலியொடு குழும”

–    மதுரைக்காஞ்சி (அடிகள் 673 – 677)

  • மேற்கண்ட அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்.
  • இதனை தனது “பத்துப்பாட்டு ஆராய்ச்சி” என்ற நூலில் மா.இராசமாணிக்கனார் தெரிவித்துள்ளார்.
  • “பத்துப்பாட்டு ஆராய்ச்சி” என்னும் நூலின் ஆசிரியர் = மா.இராசமாணிக்கனார்.
9TH TAMIL மதுரைக்காஞ்சி
9TH TAMIL மதுரைக்காஞ்சி

அருஞ்சொற்பொருள்

  • புரிசை = மதில்
  • அணங்கு = தெய்வம்
  • சில்காற்று = தென்றல்
  • புழை = சாளரம்
  • மாகால் = பெருங்காற்று
  • முந்நீர் = கடல்
  • பணை = முரசு
  • கயம் = நீர்நிலை
  • ஓவு = ஓவியம்
  • நியமம் = அங்காடி

இலக்கணக்குறிப்பு

  • ஓங்கிய = பெயரெச்சம்
  • நிலைஇய = சொல்லிசை அளபெடை
  • குழாஅத்து = செய்யுளிசை அளபெடை
  • வாயில் = இலக்கணப் போலி
  • மா கால் = உரிச்சொல் தொடர்
  • முழங்கிசை, இமிழிசை = வினைத்தொகைகள்.
  • நெடுநிலை, முந்நீர் = பண்புத் தொகைகள்
  • மகிழ்ந்தோர் = வினையாலணையும் பெயர்.
9TH TAMIL மதுரைக்காஞ்சி
9TH TAMIL மதுரைக்காஞ்சி

மதுரைக்கஞ்சி நூல் குறிப்பு

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
  • காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
  • இந்நூல் 782 அடிகளைக் கொண்டது.
  • அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
  • இதைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என்பர்.
  • இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

 

 

 

Leave a Reply