9TH TAMIL அணியிலக்கணம்
9TH TAMIL அணியிலக்கணம்
- செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.
- சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ‘அணி’ இலக்கண இயல்பாகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உவமை அணி என்றால் என்ன
- அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும்.
- மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
- எ.கா:
- மலர்ப்பாதம் – மலர் போன்ற பாதம்
- இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.
- பாதம் – பொருள் (உவமேயம்)
- மலர் – உவமை
- போன்ற – உவம உருபு
- எ.கா:
- இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
- இதில் உவமையணி அமைந்துள்ளது
உருவக அணி என்றால் என்ன
- கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.
- உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே ‘உருவகம்’ எனக் கூறப்படும்.
- உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
- எ.கா:
இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய். |
- இப்பாடலில்,
- இன்சொல் – நிலமாகவும்
- வன்சொல் – களையாகவும்
- வாய்மை – எருவாகவும்
- அன்பு – நீராகவும்
- அறம் கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
பின்வருநிலை அணிகள்
- ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே ‘பின்வருநிலை’ அணியாகும்.
- இது மூன்று வகைப்படும்.
பின்வருநிலை அணிகள் மூன்று வகைப்படும்
- பின்வருநிலை அணிகள் மூன்று வகைப்படும். அவை,
- சொல் பின்வருநிலை அணி
- பொருள் பின்வருநிலை அணி
- சொற்பொருள் பின்வருநிலை அணி
சொல் பின்வருநிலை அணி
- முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை அணியாகும்.
- எ.கா:
- துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
- இக்குறளில்’ துப்பு’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.
- துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.
பொருள் பின்வருநிலையணி
- செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலையணி ஆகும்.
- எ.கா:
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை. |
- இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் “மலர்ந்தன” என்ற ஒரே பொருளை தந்தன.
- எ.கா:
- கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.
- இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.
சொற்பொருள் பின்வருநிலையணி
- முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
- எ.கா:
- எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
- இக்குறட்பாவில் ‘விளக்கு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
வஞ்சப்புகழ்ச்சி அணி
- வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும்.
- எ.கா:
- தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.
- கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது.
- எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.
- எ.கா:
பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே |
- இப்பாடலின் பொருள்: புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைமாறு கருதாமல் கொடுக்கின்றான்? மழையும்தான் கைமாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது. இது பழிப்பது போலப் புகழ்வது ஆகும்.
- இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- 9TH TAMIL அணியிலக்கணம்
- 9TH TAMIL அணியிலக்கணம்
- 9TH TAMIL அணியிலக்கணம்
- 9TH TAMIL அணியிலக்கணம்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி