9TH TAMIL நீரின்றி அமையாது உலகு

Table of Contents

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
9TH TAMIL நீரின்றி அமையாது உலகு

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு

  • நீர் மேலாண்மையின் தேவையை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய காலம் இது.
  • நீரே மனித வாழ்வின் அடிப்படை.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

  • “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம்.
  • “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று பாடியவர் = இளங்கோவடிகள்.

உலகச் சுற்றுச்சூழல் தினம்

  • உலகச் சுற்றுச்சூழல் தினம் = ஜூலை 5 ஆம் தேதி.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நீரின்றி அமையாது உலகு

  • “நீரின்றி அமையாது உலகு” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருக்குறள்.
  • “நீரின்றி அமையாது உலகு” என்று கூறியவர் = திருவள்ளுவர்.

நீர்நிலைகளின் பல்வேறு பெயர்கள்

  • நீர்நிலைகளின் பல்வேறு பெயர்கள் = அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி.
  • மழை வழங்கும் நீரினை பாதுகாத்து தருவது = நீர்நிலைகளே.

மாங்குடி மருதனார்

  • “மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” என்று கூறியவர் = மாங்குடி மருதனார்.

கண்மாய்

  • பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர்.
  • “கம்மாய்” என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்.

உறைக்கிணறு என்பது யாது

  • மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு “உறைக்கிணறு” என்று பெயர்.
  • மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு “ஊருணி” என்று பெயர்.
9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
9TH TAMIL நீரின்றி அமையாது உலகு

கல்லணையின் நீளம்

  • கல்லணையை கட்டியவன் = கரிகாற் சோழன்.
  • கல்லணையின் நீளம் = 1080 அடி.
  • கல்லணையின் அகலம் = 40 முதல் 60 அடி வரை
  • கல்லணையின் உயரம் = 15 அடி முதல் 18 அடி வரை.

கல்லணை தொழில்நுட்பம்

  • காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர்.
  • அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.
  • அவற்றின்மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசி, இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர்.
  • இதுவே, கல்லணையைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது.

நீருக்கே முதலிடம் தந்த வள்ளுவர்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்

–    திருவள்ளுவர்

  • இக்குறட்பாவில் நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் நீருக்கே முதலிடம் தருகிறார் திருவள்ளுவர்.

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

  • “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • உணவெனப்படுவது நிலத்தொடு நீரே (புறம் 18) என்று சங்கப்பாடல், நீரின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறது.

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
  • “இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் = சர் ஆர்தர் காட்டன்.
  • சர் ஆர்தர் காட்டன், ஒரு ஆங்கில பொறியாளர்.
  • 1829இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.
  • இவர்தான் பயனற்று இருந்த கல்லணையைச் சிறு சிறு பகுதிகளாய்ப் பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார்.
  • அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்.
  • கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரையும் சூட்டினார்.
  • கல்லனைக்கு “கிராண்ட் அணைகட்” என்று பெயர் சூட்டியவர் = சர் ஆர்தர் காட்டன்.

தௌலீஸ்வரம் அணை

  • கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார், சர் ஆர்தர் காட்டன்.
  • தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு = 1873.
  • தௌலீஸ்வரம் அணையை கட்டியவர் = சர் ஆர்தர் காட்டன்.

நீரும் நீராடலும்

  • தமிழ் மரபில் “நீரும் நீராடலும்” வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறியவர் = பேராசிரியர் தொ.பரமசிவன்.

குளித்தல் பொருள்

  • குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்.
  • சூரியவெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
  • குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று என்று கூறுகிறார் பேராசியர் தொ.பரமசிவன்.

குள்ளக் குளிரக் குடைந்து நீராடி

  • “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்று கூறியவர் = ஆண்டாள்.

திருமஞ்சனம் ஆடல் என்றால் என்ன

  • தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.

நீராடல் பருவம்

  • சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டு.
  • “நீராடல் பருவம்” இடம் பெற்றுள்ள சிற்றிலக்கியம் = பிள்ளைதமிழ்.
  • நாட்டுப்புறத் தெய்வக்கோவில்களில் சாமியாடிகளுக்கு மஞ்சள் நீர் கொடுத்து அருந்தச் செய்வதும் நீராட்டுவதும் இப்போதும் நடைமுறையில் உள்ளன.

கடலாடுதல்

  • திருமணம் முடிந்த முடிந்த பின் அதன் தொடர்ச்சியாய்க் கடலாடுதல் என்பதை மேற்கொள்ளும் வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது.

நீர்மாலை எடுத்து வருதல்

  • இறப்புச் சடங்கிலும் உடலை நீராட்டுவதற்காக நீர்மாலை எடுத்து வருதல் என்பதும் நடைமுறையில் உள்ளது.

சனி நீராடு என்பது யார் வாக்கு

  • “சனி நீராடு” என்பது யார் வாக்கு = ஒளவையார் வாக்கு.

சோழர் காலக் குமிழித்தூம்பு

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
  • மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்குவார்.
  • அடியில் இரண்டு துளைகள் காணப்படும்.
  • மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும்.
  • கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும்.
  • இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தின் நீர்நிலைகள்

  • அகழி = கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
      • கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் எவ்வாறு அழைக்கப்படும் = அகழி
  • அருவி = மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது
      • மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது யாது = அருவி
  • ஆழிக்கிணறு = கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
      • கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படும் = ஆழிக்கிணறு
  • ஆறு = இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு
      • இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும் = ஆறு
  • இலஞ்சி = பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
      • பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் எனப்படுவது = இலஞ்சி
  • உறைக்கிணறு = மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
      • மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு எனப்படுவது = உறைக்கிணறு.
  • ஊருணி = மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
      • மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை எவ்வாறு அழைக்கபடுகிறது = ஊருணி
  • ஊற்று = அடியிலிருந்து நீர் ஊறுவது
      • அடியிலிருந்து நீர் ஊறுவது யாது = ஊற்று
  • ஏரி = வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்.
      • வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம் எனப்படுவது = ஏரி
  • கட்டுக்கிணறு = சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
      • சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு = கட்டுக்கிணறு
  • கடல் = அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு
      • அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு எனப்படுவது = கடல்
  • கண்மாய் = பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்
      • பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் = கண்மாய்
  • குண்டம் = சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
      • சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை எனப்படுவது = குண்டம்.
  • குண்டு = குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
      • குளிப்பதற்கேற்ற சிறுகுளம் = குண்டு
  • குமிழி ஊற்று = அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று
      • அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்றின் பெயர் = குமிழி ஊற்று
  • கூவல் = உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
      • உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலையின் பெயர் = கூவல்
  • கேணி = அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
      • அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு எனப்படுவது = கேணி
  • புனற்குளம் = நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
      • நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலையின் பெயர் = புனற்குளம்
  • பூட்டைக் கிணறு = கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
      • கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணற்றுக்கு பெயர் = பூட்டைக் கிணறு

முல்லைப் பெரியாறு அணை

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
9TH TAMIL நீரின்றி அமையாது உலகு
  • முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்.
  • தனது சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் = ஜான் பென்னி குவிக்.

 

Leave a Reply