10TH TAMIL ஜெயகாந்தம்

10TH TAMIL ஜெயகாந்தம்

10TH TAMIL ஜெயகாந்தம்
10TH TAMIL ஜெயகாந்தம்

10TH TAMIL ஜெயகாந்தம்

  • கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன்.
  • சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்.
  • சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்.
  • இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்

10TH TAMIL ஜெயகாந்தம்
10TH TAMIL ஜெயகாந்தம்
  • குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன்- திரைப்படம்)
  • சாகித்திய அகாதெமி விருது – சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
  • சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)
  • ஞானபீட விருது
  • தாமரைத்திரு விருது

எதற்காக எழுதுகிறேன் என்று ஜெயகாந்தன் கூறுதல்

  • “எதற்காக எழுதுகிறேன்?” என்ற நூலை எழுதியவர் = சி.சு.செல்லப்பா.
  • “எதற்காக எழுதுகிறேன்” என்ற கட்டுரையை எழுதியவர் = ஜெயகாந்தன்.
  • தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் = ஜெயகாந்தன்.
  • தான் எதற்காக எழுதுகிறேன் என்பதனை ஜெயகாந்தனே கூறுகிறார்.
    • நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.
    • என் எழுத்துக்கு ஒரு லட்சியமும் உண்டு.
    • நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பயனுமாகும்.
    • நூலின் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும் எனக் கூறுகிறது.
    • கலைத்தன்மைக்கு எந்தவிதக் குறைவும் வராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான் நான் எழுதுகிறேன்.
    • அர்த்தமே வடிவத்தை வளமாக்குகிறது அல்லவா? வெறும் வடிவம் மரப்பாச்சி தான்.
    • ஆகையினால் இவற்றைப் பிரித்துக்கொண்டு அவஸ்தைக்கு உள்ளாகின்றார்.
    • நமது அறியாமையால் அவஸ்தைகளுக்குள்ளாகி, பிறரையும் நமது அறியாமையால் அவஸ்தைக்கு உட்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன்.
    • கலைப்பணி என்றாலே அதனுள் சமூகப் பார்வை அடக்கம்.
    • பிரித்துப் பேசும் போக்கு வந்துவிட்டதால் பிரித்துச் சொல்கிறேன். அது சேர்ந்துதான் இருக்கிறது.
    • ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன்.
10TH TAMIL ஜெயகாந்தம்
10TH TAMIL ஜெயகாந்தம்

ஜெயகாந்தன் பற்றி அசோகமித்திரன்

  • “ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை.
  • துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது.
  • அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.” என்று ஜெயகாந்தன் பற்றி அசோகமித்திரன் கூறியுள்ளார்.

ஜெயகாந்தன் பற்றி வாசகரின் கருத்து

  • “கச்சிதமான உருவம், கனமான உள்ளடக்கம், வலுவான நடை, புதுக்கருத்துகள், புதுவிளக்கங்கள், ஆழம், கனம் இந்த அம்சங்களை இவருடைய சிறுகதைகளில் பூரணமாகக் காணலாம்.
  • அதுமட்டுமின்றிப் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் வெற்றிகரமாகச் சித்தரிப்பது இவருடைய அரிய சாதனை” என்று 1967 ஆம் ஆண்டு “தீபம்” இதழில் வாசகர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜெயகாந்தன் பற்றி கா.செல்லப்பன்

  • நேர் கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை.
  • நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் இவைகள்தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளங்கள்.
  • ‘படிக்காத மேதை’ என்று குறிப்பிடப்படும் அவர், முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரெஞ்சு இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமன்றி, வாழ்க்கையையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர்.

ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு

  • குருபீடம்
  • யுகசந்தி
  • ஒரு பிடி சோறு
  • உண்மை சுடும்
  • இனிப்பும் கரிப்பும்
  • தேவன் வருவாரா
  • புதிய வார்ப்புகள்

ஜெயகாந்தன் குறும்புதினங்கள்

  • பிரளயம்
  • கைவிலங்கு ரிஷிமூலம்
  • பிரம்ம உபதேசம்
  • யாருக்காக அழுதான்?
  • கருணையினால் அல்ல
  • சினிமாவுக்குப் போன சித்தாளு

ஜெயகாந்தன் புதினங்கள்

  • பாரீசுக்குப் போ!
  • சுந்தர காண்டம்
  • உன்னைப் போல் ஒருவன்
  • கங்கை எங்கே போகிறாள்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • இன்னும் ஒரு பெண்ணின் கதை
  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
10TH TAMIL ஜெயகாந்தம்
10TH TAMIL ஜெயகாந்தம்

ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்

  • வாழ்விக்க வந்த காந்தி (பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)
  • ஒரு கதாசிரியனின் கதை (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

திரைப்படமான ஜெயகாந்தன் படைப்புகள்

  • சில நேரங்களில் சில மனிதர்கள்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • ஊருக்கு நூறு பேர்
  • உன்னைப் போல் ஒருவன்
  • யாருக்காக அழுதான்

ஜெயகாந்தன் தனது முன்னுரையில்

  • தன்னுடைய படைப்புகளுக்கு தானே முன்னுரை எழுதியவர் ஜெயகாந்தன்,
  • ஜெயகாந்தன் தனது புதினமான “பாரிசுக்கு போ” புதினத்தின் முன்னுரையில் இவ்வாறு எழுதி உள்ளார்.
    • “”ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்…
    • ஓர் எழுத்தாளன் ஆத்ம சுக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல.
    • அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்” (1966).
10TH TAMIL ஜெயகாந்தம்
10TH TAMIL ஜெயகாந்தம்

பட்டுக்கோட்டையார் பற்றி ஜெயகாந்தன் கவிதை

  • ஜெயகாந்தன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி கவிதை எழுதி உள்ளார். அது

எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை

கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்

பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய

மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்

ஜெயகாந்தன் பதில்கள்

  • சிறுகதையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை என்ற கேள்விக்கு, “என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப் பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே” என்றார் ஜெயகாந்தன்.
  • சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை மற்றும் சவால் எது என்ற கேள்விக்கு, “மகத்தான சாதனை – பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே” என்றார் ஜெயகாந்தன்.
  • இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது என கேள்விக்கு, “காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்” என்றார் ஜெயகாந்தன்.

தர்க்கத்திற்கு அப்பால்

  • “தர்க்கத்திற்கு அப்பால்” என்ற சிறுகதையின் ஆசிரியர் = ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் ஆசிரியர் குறிப்பு

  • ஜெயகாந்தன் பேசி, ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் ‘யுகசந்தி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
  • தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு.
  • அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன.
  • இதுவே அவருக்குச் ‘சிறுகதை மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது.
  • “சிறுகதை மன்னன்” என அழைக்கப்படுபவர் = ஜெயகாந்தன்.
  • இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்.
  • தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.
  • தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
  • சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 

 

Leave a Reply