9th tamil விண்ணையும் சாடுவோம்
9th tamil விண்ணையும் சாடுவோம்
- இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது.
- அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி போன்றோர் வரிசையில் மற்றுமொரு வைரம் தமிழ்நாட்டை சேர்ந்த அறிவியலாளர் சிவன்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இஸ்ரோ தலைவர் சிவன்
- இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் = சிவன்.
- இஸ்ரோவின் எத்தனையாவது தலைவராக சிவன் பொறுப்பேற்றார் = ஒன்பதாவது.
- இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்ற முதல் தமிழர் = சிவன்.
- இஸ்ரோவின் தலைவராக சிவன் பொறுப்பேற்ற ஆண்டு = 2015.
- இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்கும் முன்னர் சிவன் அவர்கள் வகித்த பதவி = விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் பதவி.
- ISRO = இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.
இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்புகள்
- சிவன் அவர்களின் சொந்த ஊர் = நாகர்கோவில் அருகே சரக்கல்விளை என்ற கிராமம்.
- இவர் தமிழக அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்.
- இவரின் தந்தை = கைலாச வடிவு.
- இவரின் தந்தையின் தொழில் = மாங்காய் வியாபாரம்.
- இளங்கலைப் பிரிவில் “கணினி அறிவியல்” படிப்பை முடித்தார்.
- எம்.ஐ.டியில் “வானூர்தி பொறியியல்” பிரிவில் எம்.இ பயின்றுள்ளார்.
- பின்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்த ஆண்டு = 1982.
சித்தாரா செயலி
- முதன் முதலில் பி.எஸ்.எல்.வி (PSLV = POLAR SATELLITE LAUNCH VEHICLE) திட்டத்தை துவங்க மத்திய அரசு அனுமதி அளித்த ஆண்டு = 1983.
- விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சிவன் அவர்கள் உருவாக்கிய செயலி = சித்தாரா
- சித்தாரா செயலியை உருவாக்கியவர் = சிவன்.
- சித்தாரா (SITARA = SOFTWARE FOR INTEGRATED TRAJECTORY ANALYSIS WITH REAL TIME APPLICATION)
- சித்தாரா செயலியின் பணி = செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க (DIGITAL) முறையில் சேகரித்தல்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் சிவன் அவர்களின் முக்கியமான பங்களிப்பு = சித்தாரா செயலியை உருவாக்கியது.
அப்துல்கலாம் பற்றி சிவன் அவர்களின் கருத்து
- தன் அனுபவத்தில் தான் பார்த்த சிறந்த மனிதர் அப்துல் கலாம் தான் என்கிறார் சிவன்.
- யாராவது சிறியதாக செய்தாலே, பெரியதாக பாராட்டக்கூடியவர் = அப்துல் கலாம்.
- அப்துல்கலாம், சிவன் அவர்களை எவ்வாறு அழைப்பார் = “மென்பொறியாளர்
அப்துல்கலாம் குறிப்பு
- இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக பணியாற்றியவர் = அப்துல்கலாம்
- இவர் ஒரு அறிவியலாளர்.
- அப்துல்கலாம் தமில்நாட்டின் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்.
- “இந்திய ஏவுகணையின் நாயகன்” என்று அழைக்கப்படுபவர் = அப்துல் கலாம்.
- இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர்.
- தனது பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
- ”இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் = விக்ரம் சாராபாய் ஆவார்.
- இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான “ஆரியபட்டா” ஏவுதலுக்கு காரணமாக இருந்தவர் = விக்ரம் சாராபாய் ஆவார்.
- செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு கல்வியை எடுத்து செல்ல உதவினார்.
- விக்ரம் சாராபாய் அவர்களின் முயற்சியால் தான் “இஸ்ரோ” துவங்கப்பட்டது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் = கேரளா மாநிலம் திருவனந்தபுரம்.
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், வானூர்த்தியியல் (Aeronautics), வான்பயண மின்னணுவியல் (Avionics), கூட்டமைப் பொருள்கள் (Composites), கணினி – தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடிமக்களுக்கு செயற்கைக்கோள் பயன்படல்
- ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்கோல்களை ஏவத் துவங்கிய ஆண்டு = 1957 முதல்.
- இந்தியாவில் விண்வெளி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மக்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்தித்தவர் = விக்ரம் சாராபாய் ஆவார்.
- மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள் அவசியம் தேவை.
இஸ்ரோவின் முக்கிய நோக்கம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் = செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் மக்களுக்கு தரமான சேவைகளை கொடுப்பது தான்.
இந்திய செயற்கைக்கோள்
- இந்தியா இதுவரை 45 செயற்கைக்கோள்களை ஏவி உள்ளது.
- இந்தியாவிற்கு தனது தேவையை பூர்த்தி செய்ய இன்னும் 45 செயற்கைக்கோள்கள் தேவை.
அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர்
- வளர்மதி அவர்கள், தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
- தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை வென்ற முதல் அறிவியல் அறிஞர் = வளர்மதி ஆவார்.
- எந்த ஆண்டு வளர்மதி அவர்கள், தமிழக அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார் = 2015.
- வளர்மதி, இஸ்ரோவில் 1894 முதல் பணிபுரிந்து வருகிறார்.
- 2012இல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார்.
- இந்தியாவில், உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் = வளர்மதி.
- இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் வளர்மதி ஆவார்.
நேவிக் செயலி
- கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட செயலி = நேவிக் (NAVIC)
- மீனவர்கள் கடலில் எல்லையை தாண்டினால், இந்த செயலி பொருத்தப்பட்ட கருவி அவர்களை எச்சரிக்கை செய்யும்.
விண்வெளித்துறையில் மூன்று வகை தொழில்நுட்பம்
- விண்வெளித்துறையில் மூன்று வகை தொழில்நுட்பம் உள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார். அவை,
- செயற்கைக்கோளினை ஏவுவதற்கான தொழில்நுட்பம்
- செயற்கைக்கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி
- அந்த ஏவு ஊர்தியில் இருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் செய்திகளைப் பெற்று அதைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல்.
சந்திராயன் – 1
- சந்திராயன் – 1 நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாக கொண்டது.
- சந்திராயன் – 1, நிலவில் செயற்கைக்கோளை இறக்கி ஆராய்ந்து படம் எடுத்துள்ளது.
சந்திராயன் – 2
- சந்திராயன் – 2 இன் பணியில், “ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதலை” (exploration vehicle lander) நிலவின் மேற்பரப்பில் துல்லியமான கட்டுப்பாடுகளின் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதிலிருந்து “ரோவர்” (rover) எனப்படும் ஆராயும் ஊர்தி, ரோபோடிக் (robotic) தொழில்நுட்ப உதவியினால் தானாகவே வெளிவந்து, நிலவில் இறங்கிப் 14 நாட்கள் பயணிக்கும்.
- பல்வேறு பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளும்.
அருணன் சுப்பையா
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனராக பணி புரிந்தவர் = அருணன் சுப்பையா ஆவார்.
- அருணன் சுப்பையா அவர்களின் சொந்த ஊர் = திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி என்னும் ஊர்.
- அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம்சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு = 1984.
- இவர் தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
- 2013 இல் மங்கல்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய “இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக” இருக்கின்றார்.
மயில்சாமி அண்ணாதுரை
- “இளைய கலாம்” என்று அழைக்கப்படுபவர் = மயில்சாமி அண்ணாதுரை.
- மயில்சாமி அண்ணாதுரையின் ஊர் = கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூர்.
- மேல்நிலை வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் இவர்.
- இதுவரை 5 முனைவர் பட்டங்களை பெற்றவர் மயில்சாமி அண்ணாதுரை ஆவார்.
- 1982 இல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது அம்மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
- இந்தியா சார்பில் நிலவுக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் “சந்திராயன்-1” திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் = மயில்சாமி அண்ணாதுரை.
- தற்போது சந்திராயன்-2 திட்டத்திலும் பணிபுரிந்து வருகிறார்.
- சர்.சி.வி.இராமன் நினைவு அறிவியல் விருதை வென்றுள்ளார்.
- மயில்சாமி அண்ணாதுரை எழுதிய புத்தகம் = கையருகே நிலா.
- திராவிட மொழிக்குடும்பம்
- 9th tamil விண்ணையும் சாடுவோம்
- தமிழோவியம்
- தமிழ்விடு தூது
- வளரும் செல்வம்
- தொடர் இலக்கணம்
- நீரின்றி அமையாது உலகு
- 9th tamil விண்ணையும் சாடுவோம்
- பட்ட மரம்
- பெரியபுராணம்
- புறநானூறு
- தண்ணீர்
- துணைவினைகள்
- 9th tamil விண்ணையும் சாடுவோம்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்
- 9th tamil விண்ணையும் சாடுவோம்