புத்த மதம் முக்கிய குறிப்புகள்

புத்த மதம் முக்கிய குறிப்புகள்
- புத்தரின் போதனைகள் எந்த இலக்கியமாக கட்டமைக்கப்பட்டுள்ளது? – திரிபிடகம்
- புத்தரை கடவுளாக வழிபாடும் புத்த மத பிரிவு? – மகாயான பிரிவு
- யாருடைய ஆட்சி காலத்தில் புத்தர் கௌசாம்பி நகருக்கு விஜயம் செய்தார்? – உதயன்
- புத்த மதத்தின் இராமாயணம் எனப் போற்றப்படும் நூல்? – புத்தசரிதம்
- புத்தசரிதம் நூலின் ஆசிரியர்? – அஸ்வகோஷர்
- புத்தர் நேபாளத்தின் லும்பினியின் பிறந்தவர் என அசோகரின் எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது? – நேபாளத்தின் ரும்மினிதேயில் உள்ள லும்பினி கல்வெட்டு
- புத்த மதத்தில் உள்ள ஹீனயானம் மற்றும் மகாயான பிரிவின் அடிப்படை வித்தியாசம்? – கடவுள் வழிபாடு
- புத்தரின் பெரும்பானமையான உருவங்கள் எந்த கலை பாணியில் உள்ளது? – காந்தார கலை வடிவம்
- புத்தரின் முதல் உருவச்சிலை எந்த கலை பாணியில் உருவாக்கப்பட்டது? – மதுரா கலை வடிவம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- புத்தரின் எந்த நிகழ்வு “சக்கர” சின்னமாக கருதப்படுகிறது? – அவரின் முதல் போதனை
- புத்தரின் காலத்திலேயே, புத்த சங்கத்தின் தலைவராக பதவியேற்க விருப்பப்பட்டவர்? – தேவதத்தர்
- யாருடைய ஆட்சிக் காலத்தில் நாலந்தா பல்கலைக்கழகம் கட்டமைக்கப்பட்டது? – குப்த ஆட்சிக் காலத்தில்
- புத்தர், எந்த இடத்தில் புத்த சங்கத்தில் பெண்களை சேர அனுமதித்தார்? – வைஷாலி
- நாகர்ஜுனர் புத்த மதத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்? – மகாயான பிரிவு
- எவ்விடத்தில் உலகின் உயரமான “சாந்தி ஸ்தூபி” (அமைதி ஸ்தூபி) கட்டப்பட்டுள்ளது? – பீகாரின் ராஜகிருகம்
- புத்தகயாவில் புத்தருக்கு 80 அடி உயர சிலையை அமைத்தவர்கள்? – ஜப்பானியர்கள்
- புத்த மதத்தை பரப்ப இலங்கைக்கு, அசோகர் யாரை அனுப்பினார்? – அவருடைய மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை
- அசோகரின் மகன் மற்றும் மகளின் பெயர் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது? – இலங்கை புத்த நூலான மகாவம்சம்
- யாருடைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலாக புத்தரை கடவுளாக வழிபட துவங்கினர்? – கனிஷ்கர்
- யாருடைய ஆட்சிக் காலத்தில், புத்தரின் நின்ற வடிவிலான உருவச்சிலைகள் உருவாக்கப்பட்டன? – குஷானர்கள் காலத்தில்
- சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட புத்த மத துறவி? – நாகர்ஜுனர்
- புத்தர் தங்குவதற்காக “வேலுவனா மகாவிகாரம்” என்ற இடத்தை உருவாக்கிய மகத அரசன்? – பிம்பிசாரர்
- ஆசிய ஜோதி என்று அழைக்கப்படுபவர்? – புத்தர்
- புத்த சங்கத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண்மணி? – பிரஜாபதி கவுதமி
- புத்தர் தனது இறுதி காலத்தை எங்கு செலவழித்தார்? – வைஷாலி
- இந்தியாவில் உள்ள மிகப்பெரிய புத்த மடாலயம்? – தவாங் மடாலயம் (அருணாச்சலப் பிரதேசம்)
- தர்மசக்கரபரிவர்த்தனா என்பது? – புத்தரின் முதல் போதனையை குறிக்கும்
- புத்தரின் வளர்ப்பு தாய்? – பிரஜாபதி கவுதமி
- புத்தரின் தேரோட்டியின் பெயர்? – சன்னா
- புத்தரின் குதிரை? – கந்தகா
- சித்தார்த்தரின் பணிப்பெண்? – சுஜாதா
- இறப்பதற்கு முன்னர் இறுதியாக புத்தர் எடுத்துக்கொண்ட உணவு? – “சுகரா மத்தவா” (இது பால் மற்றும் அரிசியினால் ஆனது. சில நூல்களில் இது பன்றிக் கறி வகை சார்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது)
- புத்தர் இறப்பதற்கு முன்னர் உண்ட கடைசி உணவை வழங்கியவர்? – பாவாவில் இருந்த ஆபரண வியாபாரி ‘சுந்தா கர்மரா’
- புத்தரின் பிரதான சீடர்கள் = உபாலா (முடி திருத்துவர்), சுதைன் (தாழ்த்தப்பட்டவர்), ஆனந்தா (நந்தா)

புத்த மத மாநாடுகள்
| மாநாடு | வருடம் | இடம் | தலைமை | அரசர் | அரச வம்சம் |
|---|---|---|---|---|---|
| முதல் | கி.மு. 483 | ராஜகிருகம் | மகாகசபர் | அஜாதசத்துரு | ஹரியங்க வம்சம் |
| இரண்டாம் | கி.மு. 383 | வைஷாலி | சபாகமி | காலசோகர் | சிசுநாக வம்சம் |
| மூன்றாம் | கி.மு. 246 / 250 | பாடலிபுத்திரம் | மொகாலி புத்ததிசா என்னும் உபகுப்தர் | அசோகர் | மௌரிய வம்சம் |
| நான்காம் | கி.மு. 100 | காஸ்மீரின் குந்தல் வனம் | வசுமித்திரர் மற்றும் அஷ்வகோஷர் | கனிஷ்கர் | குஷான வம்சம் |

புத்த மத பிரிவுகள்
| ஹீனயானம் (தேராவதம்) | மகாயானம் | வஜ்ராயானம் |
|---|---|---|
| ஹினாயனா என்றால் குறைந்த பாதை என்றும், தேரவாடா என்றால் பெரியவர்களின் கோட்பாடு என்றும் பொருள் | இதன் பொருள் பெரிய பாதை. இந்தப் பிரிவைக் உருவாக்கியவர் நாகர்ஜூனர் | இதன் பொருள் மின்னல் வாகனம் என்பதாகும். வஜ்ராயனம் (வைர வாகனம்) மந்திராயணம், தந்திரயானம் என்றும் அழைக்கப்படுகிறது. |
| இதன் வேதங்கள் பாலி மொழியில் உள்ளன | இதன் வேதங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளன | உயர் குறியீட்டு மொழி (சைகை மொழி) |
| இது ஒரு மரபு வழி பள்ளி. தேரவாதமே பௌத்த தத்துவத்தின் அசல் பள்ளியாகும் | இது பௌத்த தத்துவத்தின் பன்முகப் பள்ளியாகும். இது இரண்டு முக்கிய தத்துவ பள்ளிகளைக் கொண்டுள்ளது: மத்யமிகா & யோகாச்சாரா | 8 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்தியாவில் பின்பற்றப்பட்டது, 11 ஆம் நூற்றாண்டில் திபெத்தில் நிறுவப்பட்டது. |