TAMIL ONE LINE NOTES FOR TNPSC – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி 602. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர் 603. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது–திரணதூமாக்கினியார் 604. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை- சமதக்கினி 605. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார் 606. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார் 607. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர் 608. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர் 609. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு 610. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி 611. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம் 612. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு 613. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார் 614. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880 615. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் – அரு.இராம நாதன் 616. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன் 617. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம் 618. நம்பியகப் பொருள் எழுதியவர் – நாற்கவிராச நம்பி 619. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் – மாறனலங்காரம் 620. நமர் – ஒற்றர் 621. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர் 622. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு 623. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு 624. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர் 625. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார் 626. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர் 627. நளவெண்பா காண்டங்கள் – 3 628. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம் 629. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல் 630. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம் 631. நற்றிணை அடி வரையறை – 9 – 12 632. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள் 633. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ } 634. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார், 635. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார் 636. நற்றிணையில் அமைந்த பாடல்கள் – 400 637. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7 638. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல் 639. நற்றிணையின் பாவகை – அகவற்பா 640. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர் 641. நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார் 642. நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி 643. நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175 644. நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை – 192 645. நறுந்தொகை எனும் நூல் – வெற்றி வேட்கை 646. நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல் 647. நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர் 648. நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர் 649. நன்னூல் காலம் – 13-ஆம் நூற்றாண்டு 650. நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32 651. நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர் 652. நன்னூலாசிரியர் – பவணந்தி முனிவர் 653. நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர் 654. நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ் 655. நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள் 656. நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள் 657. நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து 658. நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம் 659. நாடகக் காப்பியம் – சிலப்பதிகாரம் 660. நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் – 40 நாடகங்கள் 661. நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம் 662. நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம் 663. நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன் 664. நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர் 665. நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை 666. நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர் 667. நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம் 668. நாமக்கல் கவிஞரின் சுயசரிதை – என் கதை -வே.இராமலிங்கம் பிள்ளை 669. நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப் 670. நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர் 671. நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள் 672. நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி 673. நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311 674. நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் – நம்பி நாயனார் 675. நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார் 676. நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல் 677. நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா. 678. நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் – அறிஞர் அண்ணா 679. நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா 680. நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம் 681. நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம் 682. நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார் 683. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் – முல்லைப்பாட்டு 684. நெஞ்சில் ஒரு முள் நாவலாசிரியர் – மு.வரதராசன் 685. நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர் 686. நெடு நல்வாடை ஆசிரியர் – நக்கீரர் 687. நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183 688. நெடுங்கடை – வீட்டின் முன் 689. நெடுந்தொகை – அகநானூறு 690. நெடுநல்வாடை ஆராய்ச்சி நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை 691. நெடுமொழி – தற்புகழ்ச்சி 692. நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு 693. நேமி நாத இலக்கண நூலாசிரியர் – குணவீர பண்டிதர் 694. நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார் 695. பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை 696. பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி 697. பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் – பதிற்றுப் பத்து 698. பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் — பாரதி 699. பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார் 700. பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்