DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021

       DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மினி ஐப் எல்ஐசி எம்டியாக பொறுப்பேற்றார்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய ஆயுள் காப்பீடு கழகம் எனப்படும் எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக “மினி ஐப்” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • எம்.டி.யாக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் எல்.ஐ.சி., சட்டத் துறையின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இம்பாலில் இருந்து ஷில்லாங்கிற்கு முதல் விமானம் இயக்கப்பட்டது:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இம்பால் (மணிப்பூர்) மற்றும் ஷில்லாங் (மேகாலயா) இடையேயான முதல் நேரடி விமான சேவை 3 ஆகஸ்ட் 2021 அன்று பிராந்திய இணைப்புத் திட்டமான “உதான்” திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது / The first direct flight operations between Imphal (Manipur) and Shillong (Meghalaya) was flagged off under the Regional Connectivity Scheme — UDAN (RCS-UDAN).
  • உடான் திட்டத்தின் கீழ் இம்பாலுடன் இணைக்கப்பட்ட இரண்டாவது நகரம் ஷில்லாங் ஆகும்.

முதல் முறையாக லண்டன் மற்றும் பக்ரைனுக்கு ஏற்றுமதியாகும் டிராகன் பழம் (கமலம்):

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • முதல் முறையாக இந்தியாவில் இருந்து லண்டன் மற்றும் பக்ரைனுக்கு டிராகன் பழங்கள் (கமலம்) ஏற்றுமதி செய்யப்பட்டன / Consignments of dragon fruit have been exported for the first time to London and Bahrain.
  • லண்டன் நகருக்கு குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்தும், பக்ரைன் பகுதிக்கு மேற்குவங்காளத்தின் மிட்னாபூர் பகுதியில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

வேளாண் தானியங்கி வானிலை நிலையம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு சரியான வானிலை முன்னறிவிப்பை வழங்குவதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம் வேளாண் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவ முடிவு செய்துள்ளது / The Indian Meteorological Department has undertaken the installation of Agro-Automatic Weather Stations to provide exact weather forecast to the people, especially the farmers.
  • இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள கிரிஷி விக்யான் மையங்களில் அமைந்துள்ள மாவட்ட அக்ரோமெட் அலகுகளில் இவ்வகை வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

கோபால்பூர் துறைமுகத்திற்கு சென்ற முதல் இந்திய போர்க்கப்பல்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • கோபால்பூர் துறைமுகத்திற்கு சென்ற முதல் இந்திய போர்க்கப்பல் என்ற சிறப்பை “ஐ.என்.எஸ் கஞ்சர்” கப்பல் பெற்றுள்ளது
  • ஐடிஎஸ் கஞ்சர் ஒடிசாவில் உள்ள பாரம்பரிய கடற்கரை துறைமுகமான கோபால்பூருக்கு அழைப்பு விடுத்த முதல் இந்திய கடற்படை கப்பலாகும் / INS Khanjar has become the first Indian Navy ship to call at the heritage coastal port of Gopalpur in Odisha.
  • கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடல்சார் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் மக்களுடன் உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டது இந்த வருகை.

‘indianidc2021.mod.gov.in’ இணையதளம் தொடங்கப்பட்டது:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் https://indianidc2021.mod.gov.in என்ற இணையத்தளம் துவங்கப்பட்டுள்ளது / ‘indianidc2021.mod.gov.in’ website launched
  • இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் 2021 ஆம் ஆண்டு 75-வது தேசிய சுதந்திர தின விழாவினை மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் விழாவில் பங்கேற்க முடியும்.
  • ஆகஸ்ட் 15, 2021 அன்று, மெய்நிகர் ரியாலிட்டி (VR) 360 டிகிரி வடிவத்தில் கம்பீரமான செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின கொண்டாட்டங்களை முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஹார்பூன் ஏவுகணை:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய திறன் கொண்ட “ஹார்பூன்” ஏவுகணையையும் அதன் உதிரி பாகங்களையும் சுமார் ரூ.6௦௦ கோடி மதிப்பில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.
  • ஹார்பூன், முதன்முதலில் 1977 இல் பயன்படுத்தப்பட்டது, இது அனைத்து வானிலை, அடிவானம், கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு.

“ஏஜென்சி வங்கியாக” செயல்பட அனுமதி பெற்றுள்ள இந்தஸ்இந்த் வங்கி:

  • இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான “இந்தஸ்இந்த் வங்கிக்கு”, மத்திய ரிசர்வ வங்கி, “ஏஜென்சி வங்கி” என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • அரசாங்க வணிகங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக “ஏஜென்சி வங்கி” ஆக செயல்பட, ரிசர்வ் வங்கி இவ்வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது.

சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட இந்திய ஒலிம்பிக் குழு:

  • வருகின்ற ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ள பிரதமரின் சுதந்திர தின உரை நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள வருமாறு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற இந்தியக் குழு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் / Indian Olympics contingent to be Guests at Independence Day
  • இந்த ஆண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் 120 தடகள வீரர்களை உள்ளடக்கிய 228 பேர் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியது.

சோலார்பங்க்:

  • சோலார்பங்க் என்பது ஒரு கலை இயக்கமாகும். இது காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு போன்ற நிலைத்தன்மை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் பெரிய சமகால சவால்களை தீர்ப்பதில் மனிதகுலம் வெற்றி பெற்றால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறது
  • நுண்கலைகள், இலக்கியம், கட்டிடக்கலை, இசை, ஃபேஷன், டாட்டூஸ் மற்றும் வீடியோ கேம்கள் உள்ளிட்ட ஏராளமான ஊடகங்களை சோலர்பங்க் அருகிலுள்ள இயக்கங்களைப் போன்றே விவரிக்கிறது.

மாநில ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ஆகஸ்ட் 3, 2021 அன்று இந்திய உச்ச நீதிமன்றம், மரண தண்டனை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளின் கைதிகளை மன்னிக்கும் அதிகாரம் மாநில ஆளுநர்களுக்கு உள்ளது என தெளிவு படுத்தியது
  • குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறைவடைவதற்கு முன்பே ஆளுநர் கைதிகளை மன்னிக்க முடியும்.
  • ஆனால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 433 ஏ -ன் கீழ் வழங்கப்பட்ட விதிமுறையை மன்னிக்கும் ஆளுநரின் அதிகாரம் மீறப்படுவதாகவும் பெஞ்ச் கூறியது.
  • பிரிவு 433A படி, 14 வருட சிறைவாசத்திற்குப் பிறகுதான் கைதியின் தண்டனையை ரத்து செய்ய முடியும்.
  • அரசியலமைப்பின் பிரிவு 72 அல்லது 161 ன் கீழ் மன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதி அல்லது ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரத்தை கோட் பிரிவு 433-ஏ பாதிக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

இந்தியாவில் மீண்டு உயரும் வறுமை நிலை:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் நுகர்வு செலவு கணக்கெடுப்பு (CES) ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது.
  • ஆனால், 2011-2012 முதல் CES தரவு வெளியிடப்படவில்லை. ஆனால் இந்தியாவில் வறுமை மீண்டும் அதிகரித்து வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன / there are clear indications that, Poverty in India is on rise again
  • லக்டவாலா வறுமைக் கோட்டு குழுவின் படி, வறுமை 1973-74 இல் 54.9%, 1983-84 இல் 44.5%, 1993-94 இல் 36% மற்றும் 2004-05 இல் 27.5% ஐ எட்டியது.

தேசிய இருதய மாற்று அறுவைசிகிச்சை தினம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • தேசிய இருதய மாற்று அறுவைசிகிச்சை தினம், இந்தியாவில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது / August 03 would be observed every year as the National Heart Transplantation Day
  • நாட்டில் செய்யப்பட்ட முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 03 தேசிய இதய மாற்று தினமாக கடைபிடிக்கப்படும்.
  • ஆகஸ்ட் 3, 1994 அன்று, இந்தியாவில் முதல் வெற்றிகரமான மனிதனுக்கு மனித இதய மாற்று அறுவை சிகிச்சை புதுதில்லியின் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் (எய்ம்ஸ்) நடத்தப்பட்டது. இந்த மாற்று அறுவை சிகிச்சை “பனங்கிப்பள்ளி வேணுகோபால்” தலைமையில் செய்யப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – வங்கதேசம் இடையே சரக்கு ரயில் இயக்கம்:

  • இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான ஹால்டிபாரி-சிலஹாட்டி ரயில்வே இணைப்பில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயலிழந்திருந்த வணிகச் சேவைகள் அண்மையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
  • ஹால்டிபாரி-சிலஹாட்டி ரயில் இணைப்பு 1965 வரை செயல்பாட்டில் இருந்தது.
  • இருப்பினும், 1965 ஆம் ஆண்டு (இந்தோ-பாக்) போர் இந்தியாவிற்கும் பின்னர் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து ரயில்வே இணைப்புகளையும் துண்டிக்கப்பட்டு விட்டது
  • மேற்கு வங்கத்தில் உள்ள ஹல்டிபாரி மற்றும் வங்காளதேசத்தின் சிலஹாட்டியை இணைக்கும் 10.5 கிமீ நீளமுள்ள ரயில் இணைப்பு இரு அண்டை நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம்:

  • நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த நிலையில், கோணக்கரையில் (தமிழ்நாடு) விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் செயல்படத் தொடங்கியது / Animal Birth Control (ABC) Centre at Konakkarai (Tamil Nadu) has become operational.
  • இந்த ஏபிசி மையத்தில் அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஐந்து மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஐந்து வார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இது ஒரு நாளைக்கு சுமார் 30 நாய்களை கருத்தடை செய்ய முடியும்

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற 3-வது இந்திய வீரர்:

  • லோவ்லினா போர்கோஹெய்ன் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் வெண்கலத்தையும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் மேரி கோம் வெண்கலத்தையும் வென்ற பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை இவராவார்
  • மேரி கோமிற்கு பிறகு ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வெல்லும் 2-வது இந்திய பெண் வீராங்கனை இவராவார்.

இந்தியாவின் முதல் பூகம்ப எச்சரிக்கை மொபைல் செயலி:

  • இந்தியாவின் முதல் பூகம்ப எச்சரிக்கை மொபைல் செயலி, ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது / The Indian Institute of Technology (IIT) Roorkee informed that it has launched the ‘Uttarakhand Bhookamp alert’ app. It is India’s first Earthquake Early Warning (EEW) mobile app.
  • “Uttarakhand Bhookamp alert” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் செயலி, நிலநடுக்க எச்சரிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவிக்கும்.

சமக்ரா சிக்க்ஷா திட்டம்:

  • ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2026 வரை ஐந்து ஆண்டுகளுக்கு பள்ளி கல்விக்கான சமக்ரா ஷிக்ஷா திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / Union Cabinet has approved the continuation of Samagra Shiksha Scheme for School Education for five years upto March 31,
  • இந்த திட்டம் 1.16 மில்லியன் பள்ளிகள், 156 மில்லியன் மாணவர்கள் மற்றும் 5.7 தொடக்க, நடுநிலைப் மற்றும் உயர், மேல்நிலைப் பள்ளிகள் வரை இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர்
  • சமக்ரா ஷிக்ஷா திட்டம் ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும், இது தொடக்கப் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை முழு பள்ளிக் கல்வியையும் உள்ளடக்கியதாகும்

விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட “ஐ.என்.எஸ் விக்ராந்த்” விமானந்தாங்கி போர்க்கப்பலின் சோதனை ஓட்டம் துவங்கியது
  • இந்தியாவிடம் ஒரே விமானந்தாங்கி போர்க்கப்பலாக ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய “ஐ.என்.எஸ் விக்ரமாத்தியா” மட்டுமே உள்ள நிலையில், 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், உள்நாட்டிலேயே முதல் முறையாக விமானந்தாங்கி போர்க்கப்பல் “ஐ.என்.எஸ் விக்ராந்த்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது.

12பி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு, பலகலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) “12-பி” அந்தஸ்து வழங்கியுள்ளது
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின் படி, 12பி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி, கல்வி சார்ந்த புதிய திட்டங்களை செயல்படுத்த அனுமதி கிடைக்கும்.

Leave a Reply