DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 18, 2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 18, 2021

       DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 18, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 18, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன சார்ஜிங் நிலையம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன சார்ஜிங் நிலையம், மகாராஸ்டிரா மாநிலத்தின் நவிமும்பை நகரில் “மெஜண்டா”நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது / EV solutions provider Magenta will set up the country’s largest public EV charging station in Navi Mumbai, Maharashtra
  • இந்நிலையத்தில் 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் சார்ஜிங் செய்யப்படும்.

மலிவு விலை சென்சார் உருவாக்கிய நாசா விஞ்ஞானி:

  • இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் நாசா விஞ்ஞானியான “பரக் நர்வேகர்”, வேளாண் விவசாயிகளுக்காக மலிவு விலையில் சென்சார் உருவாக்கி உள்ளார் / With an aim to boost crops production in India, an ex-NASA scientist, Parag Narvekar has developed an affordable sensor in Nashik
  • புதிதாக உருவாக்கப்பட்ட சென்சார்கள் செயற்கைக்கோள் தரவுத் தொகுப்புகள் மூலம் வானிலை முன்னறிவிப்பிலும் பயன்படுத்தப்படலாம்

பாஸ்டில் தினம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • “பாஸ்டில் தினம்” அல்லது “பிரெஞ்ச் தேசிய தினம்” (Basteille Day or The National Day of France) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்படுகிறது.
  • பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையைப் புரட்சி மூலம் மக்கள் தகர்த்து 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதிபிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது

உலகின் மிகப்பெரிய உமிழ்வு-வர்த்தக திட்டம்:

  • உலகின் மிகப்பெரிய உமிழ்வு-வர்த்தக திட்டம், சீனாவால் துவங்கப்பட்டுள்ளது / China is set to launch its long-planned national emissions-trading program.
  • கார்பன் சந்தை, சீன நாட்டில் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க உதவுகிறது மற்றும் 2030 க்கு முன்னர் உச்ச உமிழ்வை எட்டும் இலக்கை அடைய உதவும்.
  • சீனா உலகின் மிகப்பெரிய கார்பன் உமிழ்ப்பான் / China is the world’s largest carbon emitter

விண்வெளி அரிசி:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • விண்வெளி அரிசியின் முதல் தொகுதியை சீனா அறுவடை செய்துள்ளது / China has harvested the first batch of space rice from seeds that went to a 23-day lunar voyage with China’s Chang’e-5
  • காஸ்மிக் கதிர்வீச்சு மற்றும் பூஜ்ஜிய ஈர்ப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பின்னர், சுமார் 40 கிராம் (After being exposed to cosmic radiation and zero gravity, these seeds weighing around 40 grams) எடையுள்ள இந்த விதைகள் திரும்பி குவாங்டாங் மாகாணத்தில் அறுவடை செய்யப்பட்டன.
  • விண்வெளியில் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படும் அரிசி விதைகள் பூமியில் விதைத்தவுடன் உருமாறி அதிக மகசூல் தரக்கூடும்.

5௦ ஆண்டுகளில் முதல்முறை – இந்தியாவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி:

  • 5௦ ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்கிறது.
  • இங்கிலாந்து. இங்கிலாந்து-இந்தியா மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மை செயல்பாட்டின் அடையாளமாக, 50 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இங்கிலாந்து ஏற்றுமதி செய்துள்ளது / UK has exported apples from England to India, for the first time in 50 years, as a sign of the UK-India Enhanced Trade Partnership in action

ஸ்கோச் விருது:

  • அசாமின் கச்சார் மாவட்டம் ‘புஷ்டி நிர்போர்’ (ஊட்டச்சத்து சார்ந்த) தேசிய வெள்ளி ஸ்கோச் விருதை வென்றுள்ளது / Cachar district of Assam has won the National Silver SKOCH Award for ‘Pushti Nirbhor’ (nutrition-dependent).
  • புஷ்டி நிர்போர் என்பது தினந்பூர் பாகிச்சா கிராமத்தில் உள்ள வீடுகளில் ஊட்டச்சத்து தோட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான மாற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும்.

கூகுல் நிறுவனத்தின் 2-வது “மேகப் பகுதி”:

  • கூகுல் நிறுவனத்தின் 2-வது “மேகப் பகுதி”, தேசிய தலைநகர் டெல்லியில் அமைக்கப்பட உள்ளது / Google has launched its second cloud region in Delhi NCR, India.
  • இதற்கு முன்னர் இந்தியாவில் முதல் முறையாக கூகுல் நிறுவனத்தின் “மேகப் பகுதி”, மும்பையில் துவங்கப்பட்டது / In India, the first cloud region was set up in Mumbai in 2017

ஒலிம்பிக் லாரல் கவுரவத்தை பெறும் 2-வது நபர்:

  • ஒலிம்பிக் லாரல் கவுரவத்தை பெறும் 2-வது நபர் என்ற சிறப்பை, நோபல் பரிசு பெற்ற வங்கதேசத்தின் “முகமது யுனஸ்” ஆவார். முதல் முதலில் இவ்விருதை 2௦16 ஆம் ஆண்டு பெற்றவர், கென்யா ஒலிம்பிக் சாம்பியனான “கிப் கேயனோ” ஆவர் / Bangladeshi Nobel Peace Prize winner Muhammad Yunus will receive the Olympic Laurel at the Tokyo Games.
  • ஒலிம்பிக் லாரல் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) வழங்கிய ஒரு வித்தியாசமாகும், இது “கல்வி, கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் அமைதி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை விளையாட்டு மூலம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.

தானியங்கி ரயில் கழிப்பறை கழிவுநீர் அகற்றும் அமைப்பு:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • தானியங்கி ரயில் கழிப்பறை கழிவுநீர் அகற்றும் அமைப்பை உருவாக்கி இந்தியாவை சேர்ந்த இளம் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். இவர் உருவாக்கிய பயோ-கழிவறைகள் சாதார கழிவறைகளை விட 7 மடங்கு மலிவானது ஆகும் / is an automated system for the collection of toilet waste from running trains.
  • பொறியியல் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வரும் ஹைதராபாத் நகரி சேர்ந்த ஆர்.வி.கிருஷ்ணையா இதனை உருவாக்கி உள்ளார். இது தற்போது இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்பட உள்ளது.

அருணா ஆசப் அலி:

  • இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான “அருணா ஆசப் அலியின்” பிறந்த தினம் ஜூலை 16 ஆம் தேதியாகும்.
  • 1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை ஏற்றியதற்காக பரவலாக அறியப்பட்டவர் தான்  அருணா ஆசஃப் அலி.
  • “Grand Old Lady of Independence Movement”, “Golden Old Lady” என்றெல்லாம் சிறப்பிக்கப்படுபவர் இவர்.

“விஜய் திவாஸ்” 5௦ ஆம் ஆண்டு விழா:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய இராணுவம் சார்பில் 2021 ஜூலை 16 அன்று விஜய் திவாஸின் (Vijay Diwas) 50 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
  • 50 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 16 அன்று, லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாஜியின் தலைமையில் 93,000 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் துருப்புக்கள் வெள்ளைக் கொடிகளை உயர்த்தி, இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் முன்னிலையில் டாக்காவில் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
  • 2021 ஆம் ஆண்டை இந்திய அரசு “ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்” (Swarnim Vijay Varsh) என்று பெயரிட்டுள்ளது.

கடற்பயிற்சி “கேடயம்”:

  • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் கடற்படை அதிகாரிகள் அளவிலான “போதைப்பொருள் தடுப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி” (anti-narcotics and maritime search and rescue exercise) தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
  • “கேடயம்” (Exercise Shield) எனப்பெயரிடப்பட்ட இந்த பயிற்சி நிகழ்ச்சியை, மும்பையில் உள்ள கடல்சார் போர்பயிற்சி மையம் (Maritime Warfare Centre) ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் இரண்டாவது வட மண்டல கலாச்சார மையம்:

  • நாட்டின் இரண்டாவது வட மண்டல கலாச்சார மையம் (country’s second North Zone Cultural Centre), ஹரியானா மாநிலத்தின் குருக்ராம் பகுதியில் அமிக்க் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாட்டின் முதல் வட மண்டல கலாச்சார மையம், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ளது.

திருச்சி ஆயுத தொழிற்சாலை:

  • தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட “ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கி”, இந்தியப் கடற்படை மற்றும் இந்திய கடலோர காவர் படையிடமும் ஒப்படைக்கப்பட்டன / Ordnance Factory Tiruchirappalli has handed over Fifteen 12.7 mm M2 NATO Stabilized Remote Control Gun
  • இஸ்ரேல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், திருச்சி ஆயுத தொளிசாலியாயில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சுதேசி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • எல்லை பாதுகாப்பு படையின் 17ஆவது வருடாந்திர விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார் / Anti Drone Swadeshi System to be deployed
  • அப்போது அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒரு சுதேசி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹரேலா: உத்தரகண்ட் நாட்டுப்புற விழா:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்து கடவுளான சிவன் மற்றும் பார்வதி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகையான ஹரேலாவை கொண்டாட, பல்வேறு சமூகங்கள், சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தால் மரக்கன்றுகள் நடப்படுகின்றன / Harela: Uttarakhand’s folk festival.
  • உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற கலை விழாவான “ஹரேலா”, அங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்:

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று மண்டேலா தினம் என்றும் அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு = ONE HAND CAN FEED ANOTHER. இது நெல்சன் மண்டேலாவின் 1௦3-வது பிறந்ததினம் ஆகும்.
  • நவம்பர் 2009 இல் ஐக்கிய நாடுகள் சபை நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர், இந்த நாள் முதன்முதலில் ஜூலை 18, 2010 அன்று கொண்டாடப்பட்டது.
  • நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் என்பது சமூக சேவைகள் மற்றும் தன்னார்வத் தொண்டு மூலம் மண்டேலாவின் பெரிய மரபு மற்றும் அவரது மதிப்புகளை மதிக்க வேண்டும். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதலில் தொடங்கப்பட்ட அவரது ராபன் தீவு சிறை எண் ‘46664’ (Prison Number 46664 in Robben Island) என்ற பிரச்சாரத்தையும் இந்த நாள் கொண்டாடுகிறது.
  • 27 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். சுதந்திர தென்னாப்ரிக்காவின் முதன் முறையாக ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஆவார்.
  • அவர் எழுதிய புத்தகங்கள்,
    1. LONG WALK TO FREEDOM – THE AUTOBIOGRAPHY OF NELSON MANDELA
    2. CONVERSATIONS WITH MYSELF
    3. FAVOURITE AFRICAN FOLKTALES
    4. NELSON MANDELA ; IN HIS OWN WORDS

நிலைமாறும் அமேசான் காடுகள்:

  • உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள், அமேசான் காடுகள் கார்பன் உமிழ்வை உறிஞ்சுவதற்கு பதிலாக கார்பன் டை ஆக்சைடை (CO2) வெளியேற்றத் தொடங்கியுள்ளன / The biggest rainforest in the world, Amazon forests have started emitting carbon dioxide (CO2) instead of absorbing carbon emissions.
  • கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிரேசிலில் கணிசமான அளவு காடழிப்பு காடுகளை CO2 இன் ஆதாரமாக மாற்றியுள்ளது, இது கிரகத்தை சூடாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply