TAMIL ONE LINE NOTES FOR TNPSC

TAMIL ONE LINE NOTES FOR TNPSC

TAMIL ONE LINE NOTES FOR TNPSC

TAMIL ONE LINE NOTES FOR TNPSC – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
  1. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
    602.  தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
    603.  தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது–திரணதூமாக்கினியார்
    604.  தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை-   சமதக்கினி
    605.  தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
    606.  தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
    607.  தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
    608.  தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
    609.  தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
    610.  தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
    611.  நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
    612.  நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
    613.  நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
    614.  நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880
    615.  நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் – அரு.இராம நாதன்
    616.  நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
    617.  நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
    618.  நம்பியகப் பொருள் எழுதியவர் –         நாற்கவிராச நம்பி
    619.  நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் – மாறனலங்காரம்
    620.  நமர்  – ஒற்றர்
    621.  நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
    622.  நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
    623.  நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
    624.  நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
    625.  நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
    626.  நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
    627.  நளவெண்பா காண்டங்கள் – 3
    628.  நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
    629.  நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
    630.  நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
    631.  நற்றிணை அடி வரையறை – 9 – 12
    632.  நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
    633.  நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3   { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
    634.   நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
    635.  வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
    636.  நற்றிணையில் அமைந்த பாடல்கள்  – 400
    637.  நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
    638.   நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
    639.  நற்றிணையின் பாவகை – அகவற்பா
    640.  நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
    641.  நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
    642.  நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
    643.  நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
    644.  நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை – 192
    645.  நறுந்தொகை எனும் நூல் – வெற்றி வேட்கை
    646.  நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
    647.  நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
    648.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
    649.  நன்னூல் காலம் – 13-ஆம் நூற்றாண்டு
    650.  நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
    651.  நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
    652.  நன்னூலாசிரியர் – பவணந்தி முனிவர்
    653.  நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
    654.  நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
    655.  நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
    656.  நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
    657.   நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
    658.  நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
    659.  நாடகக் காப்பியம் –                 சிலப்பதிகாரம்
    660.  நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் – 40 நாடகங்கள்
    661.  நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
    662.  நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
    663.  நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
    664.  நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
    665.  நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
    666.  நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
    667.  நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
    668.   நாமக்கல் கவிஞரின் சுயசரிதை – என் கதை -வே.இராமலிங்கம் பிள்ளை
    669.  நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
    670.  நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
    671.  நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
    672.  நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
    673.  நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
    674.  நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் – நம்பி நாயனார்
    675.   நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
    676.  நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
    677.  நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
    678.   நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் – அறிஞர் அண்ணா
    679.   நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
    680.   நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
    681.  நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை  எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
    682.   நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
    683.   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் – முல்லைப்பாட்டு
    684.  நெஞ்சில் ஒரு முள்  நாவலாசிரியர் – மு.வரதராசன்
    685. நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
    686.  நெடு நல்வாடை ஆசிரியர் – நக்கீரர்
    687.  நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
    688.  நெடுங்கடை  – வீட்டின் முன்
    689.  நெடுந்தொகை  – அகநானூறு
    690.  நெடுநல்வாடை ஆராய்ச்சி  நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
    691.  நெடுமொழி – தற்புகழ்ச்சி
    692. நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
    693.  நேமி நாத இலக்கண நூலாசிரியர் – குணவீர பண்டிதர்
    694.  நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
    695. பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
    696.  பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி                            
    697.   பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் – பதிற்றுப் பத்து
    698.   பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் — பாரதி
    699.  பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
    700.  பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்

 

 

 

 

Leave a Reply