TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 01/08/2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 01/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
உலக வலை தினம்:
- உலக வலை தினம், ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது / World Wide Web Day is celebrated every August The commemoration aims to remember Sir Tim Berners-Lee for conceptualising WWW or the World Wide Web
- WWW அல்லது உலகளாவிய வலை கருத்தினை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீயை நினைவு கூறும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ஒரு வருடத்திற்கும் மேலாக ஆராய்ச்சிக்குப் பிறகு, அவரது WWW இறுதியாக முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 23, 1991 அன்று செயல்பாட்டிற்கு வந்தது.
உலக தாய்ப்பால் வாரம்:
- உலக தாய்பால் வாரம் (World Breastfeeding Week), உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
- குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று தாய்ப்பால் கொடுப்பது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
- இந்த ஆண்டு, தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் ‘தாய்ப்பால் பாதுகாத்தல்: ஒரு பகிரப்பட்ட பொறுப்பு / This year, the theme for breastfeeding week is ‘Protect Breastfeeding: A Shared Responsibility.
முஸ்லிம் பெண்கள் உரிமை தினம்:
- முஸ்லிம் பெண்கள் உரிமை தினம், இந்தியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு இரண்டாம் ஆண்டு நிறைவடைகிறது / Muslim Women Rights Day 2021: This year marks the second anniversary of the Muslim Women Act (Protection of Rights on Marriage) passed in the Rajya Sabha.
- 2019 ஆம் ஆண்டு இதே நாளில், பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதா நிறைவேறியது ஒரு பெரிய மைல்கல்லாக இருந்தது. ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட முஸ்லீம் பெண்கள் சட்டம் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் அந்த வரலாற்று மசோதாவின் இரண்டாவது ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது
உலக நுரையீரல் புற்றுநோய் தினம்:
- உலக நுரையீரல் புற்றுநோய் தினம், உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
- நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஆகஸ்ட் 1, 2012 ஆம் துவங்கப்பட்டது.
- நுரையீரல் நோய்க்கு, குறிப்பாக புகைபிடிப்பதற்கு வழிவகுக்கும் ஆபத்து காரணிகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க இது ஒரு அவசியமான வழியாகும்
௦.௦1 நொடியில் முந்தி ஒலிம்பிக் சாதனை படைத்த வீராங்கனை:
- டோக்கியோ ஒலிம்பிக்கின் 1௦௦ மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா அணியின் எலைன் தாம்சன்-ஹெரா 1௦.61 ஓடி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.
- செப்டம்பர் 24, 1988 இல் அமெரிக்காவின் ஃப்ளோரன்ஸ் கிரிஃபித் ஜாய்னர் 10.62 வினாடிகளில் ஓடியதே ஒலிம்பிக் 1௦௦ மீ ஓட்டப்பந்தயத்தின் சாதநியாக இருந்தது. இதனை தற்போது ஜமைக்கா வீராங்கனை ௦.௦1 நொடியில் முந்தி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.
“சண்டிகரின் அதிசயம்”, மன் கவுர் 105 வயதில் காலமானார்.
- சண்டிகரின் அதிசயம் எனப்படும் 1௦5 வயது ஓட்டப்பந்தய வீராங்கனையான மன் கவுர் தனது 105 வது வயதில் காலமானார் / Sprinter Man Kaur passes away due to heart attack at the age of 105
- 2௦19 ஆம் ஆண்டு தனது 1௦3 வயதில் போலந்தில் நடைபெற்ற உலக முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்கு தங்கம் வென்ற மன் கவுர், 2020 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றார்.
ஒலிம்பிக் போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய ஹாக்கி வீராங்கனை:
- ஒலிம்பிக் வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய பெண் ஹாக்கி வீராங்கனை என்ற சிறப்பை வந்தனா கட்டாரியா படைத்துள்ளார் / Vandana Katariya has become the first Indian woman hockey player to score a hat-trick in the history of Olympics
- டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் கடைசி குழு போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4, 17 மற்றும் 49 வது நிமிடங்களில் 29 வயதான வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்
ஜம்முவில் பாதுகாப்பு நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட “ராதே கிருஷ்ணா கோவில்”:
- ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் இங்குள்ள மீரான் சாஹிபில் உள்ள பழமையான ராதா கிருஷ்ணன் கோவிலை “பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக” அறிவித்துள்ளது.
உலகளாவிய வளர்ச்சிக்கான முக்கோண ஒத்துழைப்பு ஒப்பந்தம்:
- இந்தியா, அமெரிக்கா உலகளாவிய வளர்ச்சிக்கான முக்கோண ஒத்துழைப்பு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது / India, US extend their agreement on Triangular Cooperation for global development
- உலகளாவிய வளர்ச்சிக்கான முக்கோண ஒத்துழைப்பு குறித்த வழிகாட்டும் கொள்கைகளின் அறிக்கையில் (Statement of Guiding Principles (SGP)) இரண்டாவது திருத்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டன.
ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்:
- ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியில், பிரான்ஸ் நாட்டின் எஸ்டபன் ஓகன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- பெரிதும் எதிபார்க்கப்பட்ட செபாஸ்டியன் வேட்டல் 2-வது இடத்தையும், லூயிஸ் ஹாமில்டன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
புதிய தலைமை கணக்கு கட்டுப்பாடு அதிகாரி:
- புதிய தலைமை கணக்கு கட்டுப்பாடு அதிகாரியாக (சி.ஜி.ஏ) தீபக் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இவர் 25-வது தலைமை கணக்கு கட்டுப்பாடு அதிகாரி ஆவார்.
UNSC கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர் பிரதமர்:
- UNSC எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமையை இந்தியா ஏற்கிறது. 2021 ஆகஸ்ட் மாதத்திற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைவராக இந்தியா பிரான்சிலிருந்து பொறுப்பேற்றது.
- UNSC இன் நிரந்தரமற்ற உறுப்பினராக 2021-22 காலப்பகுதியில் இந்தியாவின் முதல் தலைமை பதவி இதுவாகும். UNSC கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார் / Prime Minister Narendra Modi will be the first Indian PM to preside over a meeting of the UNSC
ஈரானின் புதிய அதிபர்:
- ஈரான் நாட்டின் புதிய அதிபராக இப்ராகிம் ரைசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தற்போதைய அதிபரான ஹசன் ரூபாணி, ஏற்கனவே 2 முறை அதிபராக இருந்ததால், 3-வது முறையாக போட்டியிட அந்நாட்டு அரசியல் சட்டத்தில் இடமில்லாததால், போட்டியில் இருந்து விலகினார்.
வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து:
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
- இதன் மூலம் சுஷில் குமாருக்குப் பிறகு இரண்டு தனிப்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பிவி சிந்து பெற்றுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வெள்ளி பதக்கம் வென்றார்.
- 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பி.வி.சிந்து.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 31, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 30, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 29, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 25, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 24, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 23, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 22, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 19, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 18, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 17, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 16, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 15, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 14, 2021