TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 09/08/2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 09/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 09/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றது. இதில் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • பதக்கப்பட்டியலில் பட்டியலிடப்பட்ட 86 நாடுகளில், இந்தியா 48-வது இடத்தை பிடித்தது.
  • தங்கப் பதக்கம்
    • நீரஜ் சோப்ரா – ஈட்டி எறிதல் (தடகளம்)
  • வெள்ளிப் பதக்கம்
    • மீராபாய் சானு – பெண்கள் 49 கிலோ பிரிவு பளுதூக்குதல்
    • ரவி தாகியா – ஆண்கள் மல்யுத்தம் 57 கிலோ பிரிவு
  • வெண்கலப் பதக்கம்
    • லோவ்லினா போர்கோஹெய்ன் – பெண்கள் குத்துச்சண்டை
    • பி.வி.சிந்து – பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன்
    • பஜ்ரங் பூனியா – ஆண்கள் 65 கிலோ பிரிவு மல்யுத்தம்
    • இந்தியா ஆண்கள் ஹாக்கி அணி
  • ஒலிம்பிக் போட்டியில் தொடக்க நாள் நிகழ்வில், இந்தியக் கொடியை ஏந்தி சென்றவர்கள் = மேரி கோம் மற்றும் மன்ப்ரீத் சிங்
  • ஒலிம்பிக் போட்டியில் இறுதி நாள் நிகழ்வில், இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்றவர் = பஜ்ரங் பூனியா

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியல்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தனிநபராக அதிக தங்கப் பதக்கம் வென்றவர் = அமெரிக்காவை சேர்ந்த கேளப் டிரெஸ்ஸல் (நீச்சல் வீரர்)

வரிசை

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 அமெரிக்கா 39 41 33

113

2

சீனா 38 32 18 88
3 ஜப்பான் 27 14 17

58

4

இங்கிலாந்து 22 21 22 65
5 ரஷ்யா ஒலிம்பிக் குழு 20 28 23

71

48

இந்தியா 1 2 4

7

உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக பழங்குடி மக்களின் சர்வதேச தினம் அல்லது உலக பழங்குடி தினம், உலகம் முழுவதும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது / International Day of the World’s Indigenous Peoples (World Tribal Day) is observed on 9 August annually
  • உலக பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்த பழங்குடி மக்கள் செய்யும் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காகவும் ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு (theme) = “யாரையும் விட்டுவிடாதே: பழங்குடி மக்கள் மற்றும் ஒரு புதிய சமூக ஒப்பந்தத்திற்கான அழைப்பு” / Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract

நாகசாகி தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • நாகசாகி தினம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அமைதி அரசியலை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி தினம் அனுசரிக்கப்படுகிறது
  • ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஜப்பான் மீது, அமெரிக்க்காயவ்ன் 2-வது அணுகுண்டு “குண்டு மனிதன்” எனப்பொருள் படும் “பேட் மேன்” என்ற அணுகுண்டு வீசப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் நிபந்தனையற்ற சரணாகதிக்கு வழிவகுத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர்:

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் என்ற சிறப்பை, இங்கிலாந்து நாட்டின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் அணில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்), தற்போது முறியடித்து 3-வது இடத்தை பிடித்துள்ளார் / James Anderson surpassed Anil Kumble (619) to become the thirdhighest wicket-taker in Test cricket
  • முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஷேன் வார்னர் (708) ஆகியோருக்குப் பின்னால் அவர் 620 விக்கெட்டுகளுடன் அவர் 3-வது இடத்தில உள்ளார்.

சர்வதேச இராணுவ விளையாட்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளன:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சர்வதேச இராணுவ விளையாட்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. சர்வதேச இராணுவ விளையாட்டுக்கள் – 2021 இல் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4, 2021 வரை நடைபெற உள்ளன / A 101 member contingent of the Indian Army will proceed to Russia to participate in International Army Games – 2021 from 22 August to 4 Sept 2021
  • இந்திய இராணுவம் இங்கு இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (Army Scout Masters Competition (ASMC)), எல்ப்ரஸ் மோதிரம், துருவ நட்சத்திரம், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது.

முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலுகத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி:

  • மேற்கு வாங்க மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலுகத்தில் முதன் முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது / For the first time in its history, the Communist Party of India (Marxist) (CPI-M), in West Bengal, will hoist the national flag in its headquarters Alimuddin
  • “அலிமுதீன் எனப்படும் அதன் தலைமையகம் மற்றும் மாவட்ட தலைமை அலுவலுகத்தில், இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தேசிய கொடியை ஏற்ற உள்ளது

கைவினைத் திட்டம் ‘உஜ்வால் அபஹான்’:

  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ராமேஸ்வர் தெலி 3 வது ஓஎன்ஜிசி கைவினைத் திட்டத்தை ‘உஜ்வால் அபஹான்’ திட்டத்தை அஸ்ஸாமின் சிவசாகர் என்னுமிடத்தில் உள்ள பட்டியாபார் என்னுமிடத்தில் துவக்கி வைத்தார் / Minister of Petroleum and Natural Gas Rameswar Teli has launched the 3rd ONGC handicraft project ‘Ujjwal Abahan
  • இது ஹத்கர்கா கைவினைப்பொருள் உருவாக்கும் அசாமின் 1௦௦க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமாகும்
  • இத்திட்டம், “ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்” அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டது

காஞ்சீபுரத்தில் வடிவமைப்பு வள மையம்:

  • 7-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தையும், சத்தீஸ்கரின் ராய்காரில் நெசவாளர் சேவை மைய கட்டிடத்தையும், காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் / Union Minister of Textiles Piyush Goyal inaugurated Design Resource Centre at Kancheepuram, TamilNadu
  • 7 வது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் விதமாக, தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், புது தில்லியில் உள்ள டில்லி ஹாத்தில் “என் கைத்தறி என் பெருமையான கண்காட்சி” (My Handloom My Pride Expo) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிறந்த சுற்றுச்சூழலுக்கான தேசிய விருதை பெற்ற ஆந்திர லயோலா கல்லூரி:

  • மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற கல்வி கவுன்சில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஆந்திர லயோலா கல்லூரிக்கு சுற்றுச்சூழல் சிறந்த நடைமுறைகள் மற்றும் ஸ்வாச் திட்டங்களை நடத்துவதற்காக தேசிய விருது அறிவித்துள்ளது / Mahatma Gandhi National Council of Rural Education has announced a national award for Andhra Loyola College, Vijayawada for environmental best practices and conducting Swachh programmes.
  • ஸ்வச்ச்தா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுகாதாரம், சுகாதாரம், பசுமை, நீர் மேலாண்மை மற்றும் ஆற்றல் மேலாண்மை ஆகியவற்றை சிறப்பாக கையாண்டதால் இவ்விருது இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

2021 ஃபிடே செஸ் உலகக் கோப்பை:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • 2021 ஃபிடே செஸ் உலகக் கோப்பை போட்டிகளில் இறுதி ஆட்டத்தில், 23 வயதான போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடா சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் இறுதி ஆட்டத்தில், ரஷ்யாவின் ஜிஎம் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தினார் / 2021 FIDE World Cup : Poland’s Jan-Krzysztof Duda beats GM Sergey Karjakin
  • இக்கோப்பையை வென்ற முதல் போலந்து நாட்டு வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

“இந்தியாவில் முதியோர் 2021”  அறிக்கை:

  • இந்தியாவின் முதியோர் தொகை அடுத்த பத்தாண்டுகளில் 41% உயர்ந்து 2031 இல் 194 மில்லியனை எட்டும் என “இந்தியாவில் முதியோர் 2021” அறிக்கை தெரிவித்துள்ளது / India’s elderly population to rise 41% over next decade to touch 194 mn in 2031: Govt report
  • இந்தியாவில் அதிக முதியோர் உள்ள மாநிலம் = 1. கேரளா (16.5%), 2. தமிழ்நாடு (13.6%), 3. ஹிமாச்சலப் பிரதேசம் (13.1%) / Kerala has the current highest elderly population (5%) followed by Tamil Nadu, Himachal Pradesh
  • இந்தியாவில் குறைவான முதியோர் உள்ள மாநிலம் = 1. பீகார் (7.7%), 2. உத்திரப் பிரதேசம் (8.1%), 3. அஸ்ஸாம் (8.2%) / Bihar, Uttar Pradesh and Assam have the least, according to National Statistical Office report.
  • 2021 இல் 67 மில்லியன் ஆண்கள் மற்றும் 71 மில்லியன் பெண்கள் கொண்ட முதியோர்கள் மக்கள் தொகை, 2031 ஆம் ஆண்டில் 93 மில்லியன் ஆண்களும் 101 மில்லியன் பெண்களும் கொண்ட முதியோர் நாடா இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, அறிக்கையின் படி அதிக முதியோர் உலா மாநிலங்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் = கேரளா (20.9 சதவீதம்) மற்றும் தமிழ்நாடு (18.2 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (17.1 சதவீதம்), ஆந்திரா ( 16.4 சதவீதம்) மற்றும் பஞ்சாப் (16.2 சதவீதம்) /
  • அடுத்த 1௦ ஆண்டுகளில் அதிகளவு சராசரி (average) முதியோர்கள் எண்ணிக்கை உயரும் என கணிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் = டெல்லி (6.60 சதவீதம்), குஜராத் (4.88 சதவீதம்) மற்றும் மேற்கு வங்கம் (4.27 சதவீதம்) / Over the last decade, the highest average rise was observed in Delhi (60 per cent), Gujarat (4.88 per cent) and West Bengal (4.27 per cent)
  • அடுத்த 1௦ ஆண்டுகளில் குறைவான சராசரி (average) அளவு முதியோர் எண்ணிக்கை உயரும் மாநிலங்கள் = உத்தரபிரதேசத்தில் (2.16 சதவீதம்), பீகார் (2.28 சதவீதம்) மற்றும் மத்திய பிரதேசத்தில் (2.53 சதவீதம்) / The least average increase has been seen in Uttar Pradesh (16 per cent) followed by Bihar (2.28 per cent) and Madhya Pradesh (2.53 per cent)

 

Leave a Reply