TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 10/08/2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 10/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஜானி டெப்
- உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான “ஜானி டெப்பிற்கு”, சேன் செபாஸ்டியன் திரைப்பட திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
- இவர் ஏற்கனவே கோல்டன் கிளோப் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவர்.
செயற்கை நுண்ணறிவு சாதனத்திற்கு காப்புரிமை பெற்ற தென்னாப்ரிக்கா
- உலகில் முதன்முதலாக, ஃப்ராக்டல் வடிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு கொள்கலனுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
- இந்த உணவு கொள்கலன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படியில் உருவாக்கப்பட்டது. இச்சாதனத்தின் பெயர் DABUS. இதனை உருவாக்கியவர், ஸ்டீபன் தாலர் ஆவார்.
- DABUS = Device for the autonomous bootstrapping of unified sentience
உலக உயிரி எரிபொருள் தினம்
- உலக உயிரி எரிபொருள் தினம், ஆண்டு தோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது / Every year, August 10 is marked as World Biofuel Day.
- பாரம்பரிய புதைபடிவ எரிபொருட்களின் மாற்றுகள் மற்றும் உயிரி எரிபொருள் துறையை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்த சர் ருடால்ப் டீசலின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது / The day is observed in honour of Sir Rudolf Diesel, inventor of the diesel engine
- 2021 உலக உயிரி எரிபொருள் தினத்தின் கருப்பொருள் “சிறந்த சூழலுக்காக உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பது / The theme for World Biofuel Day 2021 is “the promotion of biofuels for a better environment”
உலக சிங்க தினம்
- சிங்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஆதரவைத் திரட்டவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்க தினம் கொண்டாடப்படுகிறது / World Lion Day is celebrated on August 10 of every year to raise awareness about lions and to mobilise support for their protection and conservation.
- ஐயுசிஎன் சிவப்பு பட்டியலில் சிங்கம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது
- முதல் உலக சிங்க தினம் 2013 இல் கொண்டாடப்பட்டது.
பூமியின் அழகு பற்றி சுதா மூர்த்தியின் புதிய புத்தகம்
- பிரபல குழந்தைகள் எழுத்தாளர் சுதா மூர்த்தி, பூமியைப் பற்றி குழந்தைகள் விரும்பும் வண்ணப்படங்களுடன் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார் / Popular children’s author Sudha Murty has come out with a beginner’s guide on the extraordinary stories about the earth.
- “பூமிக்கு எப்படி அழகு கிடைத்தது” (How the Earth Got Its Beauty’) என்ற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், பிரியங்கா பச்பாண்டேவின் அழகிய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன
அனுராதா ராயின் “தி எர்த்ஸ்பின்னர்” புத்தகம்
- சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளை பெற்ற இந்தியாவின் பிரபல நாவலாசிரியரான, “அனுராதா ராய் “தி எர்த்ஸ்பின்னர்” என்ற புதிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் / A book titled “The Earthspinner” authored by award-winning novelist Anuradha Roy
- இப்புத்தகத்தில் இளங்கோ என்பவற்றின் வாழ்க்கை, அவரின் மனநிலை, அவர் சந்திக்கும் பிரச்சனைகள போன்றவற்றை, நாவலில் அழகாக கூறியுள்ளார்
நீரஜ் சோப்ராவை கவுரவிக்க ஆகஸ்ட் 7 ஆம் தேதி “ஈட்டி எறிதல் நாள்” ஆக அறிவிப்பு
- ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஈட்டி எறிதல் நாள் என்று இந்திய தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது / 7th August to be named “Javelin Throw Day” to honour Neeraj Chopra
- ஒலிம்பிக் தனிநபர் பிரிவில், தங்கம் வென்ற 2-வது நபர் நீரஜ் சோப்ரா ஆவார். முதன் முதலில் தனிநபர் தங்கம் வாங்கியவர், அபினவ் பிந்த்ரா
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 ஆம் தேதி ஆகஸ்ட் 2021 அன்று ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் தங்கப் பதக்கத்தை வென்றார் / Neeraj bagged the gold medal in men’s javelin throw at the 2020 Tokyo Olympics on 7th August
127 வது அரசியலமைப்பு திருத்த மசோதா
- மத்திய அரசு “127 வது அரசியலமைப்பு (திருத்த) மசோதா, 2021” லோக்சபாவில் ஆகஸ்ட் 9, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் சொந்த OBC பட்டியல்களை உருவாக்க மீட்டெடுக்க உதவுகிறது / Central Government introduced the 127th Constitution (amendment) bill, 2021 in Lok Sabha on August 9, 2021
- அந்தந்த மாநிலங்களே, அம்மாநிலத்தின் பின்தங்கிய பிரிவினரை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் 1௦2-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த சட்டத்தில் சில பிரிவுகளின் குறிப்புகளை தெளிவாக விளக்கி உள்ளது.
என் லைன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹுண்டாய் நிறுவனம்
- ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில், என் லைன் கார்களை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது / Hyundai Motor India Ltd. (HMIL) announced its debut first N Line of cars for India in 2021
- என் லைன் கார்கள் என்பது, மோட்டார் ஸ்போர்ட் வகை கார்கள் ஆகும்.
இந்தியாவின் முதல் இணைய நிர்வாக மன்றம்
- இந்தியாவின் முதல் இணைய நிர்வாக மன்ற கூட்டம், வருகின்ற அக்டோபார் மாதம் நடைபெற உள்ளது.
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வருகின்ற அக்டோபர் மாதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்தியாவின் “புது தில்லியில்” முதல் இணைய நிர்வாக மன்றத்தை இந்தியா நடத்தும் என்று அறிவித்துள்ளது / India’s first Internet Governance Forum to be held in October
- அக்டோபரில் நடக்கும் முக்கிய நிகழ்வில் பங்கேற்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்துவதே முன் நிகழ்வுகள் எனவும் கூறியுள்ளது
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முயற்சிக்கும் ஐ.சி.சி:
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது / The International Cricket Council (ICC) has confirmed that it is planning to push for cricket’s inclusion in the Olympic Games.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கு இலக்கு வைத்துள்ளது.
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 09, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 08, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 07, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 06, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 05, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 04, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 03, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 02, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 01, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 31, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 30, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 29, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2021