TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 13/08/2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 13/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 13/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

3 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய எச்.சி.எல்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • HCL டெக்னாலஜிஸின் சந்தை மூலதனம் (மார்க்கெட் கேப்) முதல் முறையாக 3 டிரில்லியன் ரூபாயைத் தொட்டது / HCL Technologies’ market capitalisation (market-cap) touched Rs 3 trillion for the first time. HCL becoming the fourth Indian information technology (IT) firm to achieve this milestone
  • டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக எச்.சி.எல் உயர்ந்துள்ளது
  • ஆனால் வருட வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 3-வது பெரிய நிறுவனம் எச்.சி.எல் ஆகும்

ராம்சார் சதுப்புநில பட்டியலில் சேர்க்கப்பட்ட 4 புதிய இடங்கள்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய சுற்றுச்சூலை துறை அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் மேலும் நான்கு இடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் சதுப்பு ஈர நில பட்டியலில் (Four more sites of India added to Ramsar list as wetlands) சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • தோல் – குஜராத்
    • வாத்வானா – குஜராத்
    • சுல்தான்பூர் – ஹரியானா
    • பிந்தவாஸ் – ஹரியானா

உலக உறுப்பு தான தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக உறுப்பு தான தினம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது / World Organ Donation Day is celebrated every year on August 13
  • உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச இடது கைக்காரர்கள் தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சர்வதேச இடது கைக்காரர்கள் தினம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது / The International Left-Handers Day is observed on August 13 every year to celebrate the uniqueness and differences of the left-handers
  • உலகில் உள்ள பெரும்பான்மையானோர் வலது கை பழக்கம் உள்ள நிலையில், இடது கை பழக்கம் உள்ளோரின் தனித்தன்மை மற்றும் அதன் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது

விவசாய எச்சங்களிலிருந்து நேரடியாக ஹைட்ரஜனை உருவாக்கும் உலகின் முதல் தொழில்நுட்பம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • புனேவைச் சேர்ந்த அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் (ARI) விவசாய எச்சங்களை ஹைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது / Pune-based Agharkar Research Institute (ARI) has developed a technology that converts agricultural residue into Hydrogen and Methane.
  • இது விவசாய எச்சத்தின் சிக்கலை சமாளிக்கும் மற்றும் அதை எரிப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட மாசுபாட்டைக் குறைக்கும்
  • எரிபொருள் செல் மூலம் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்த விவசாய எச்சங்களிலிருந்து நேரடியாக ஹைட்ரஜனை உருவாக்கும் உலகின் முதல் தொழில்நுட்பம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் / Researchers claim that it is the world’s first technology that generates hydrogen directly from agricultural residue for use in fuel cell-powered vehicles

இந்தியாவின் முதல் ட்ரோன் தடயவியல் ஆராய்ச்சி மையம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • கேரள காவல்துறை சார்பில், இந்தியாவின் முதல் டிரோன் தடயவியல் ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டுள்ளது / The Kerala police launched a first-of-its-kind drone forensic lab and research Centre
  • அங்கீகரிக்கப்படாத ட்ரோன்களைக் கண்டறிதல் மற்றும் காவல் துறையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வான்வழி வாகனங்கள் தயாரித்தல் ஆகியவை தினசரி காவல் பணியில் உதவுவதற்காக இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 100 ஜிகாவாட்ஸைத் தொட்டது

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா தற்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. சூரிய ஆற்றலில் இந்தியா ஐந்தாவது இடத்திலும், நிறுவப்பட்ட காற்றாலை ஆற்றலின் அடிப்படையில் நான்காவது இடத்திலும் உள்ளது.
  • 100 ஜிகாவாட்ஸ் நிறுவப்பட்ட நிலையில், 50 ஜிகாவாட்ஸ் நிறுவல் மற்றும் 27 ஜிகாவாட் டெண்டர் உள்ளதாக மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் கால்நடை மரபணு சிப் “இண்டிகாவ்”

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உள்நாட்டு கால்நடை இனங்களின் தூய வகைகளை பாதுகாப்பதற்காக இந்தியாவின் முதல் கால்நடை மரபணு சிப் “இண்டிகாவ்”, இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது / “IndiGau’, India’s first Cattle Genomic Chip for the conservation of pure varieties of indigenous cattle breeds
  • சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு பயோடெக்னாலஜி நிறுவனம் (NIAB) இண்டிகோ என்ற சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், சிறந்த குணாதிசயங்களுடன் நமது சொந்த இனங்களை பாதுகாக்கும் இலக்கை அடையவும், இந்த மரபணு மாற்றப்பட்ட சிப் உதவும்

முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட சோயா அவரையை இறக்குமதி செய்யும் இந்தியா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • முதன்முறையாக, 15 லட்சம் டன் மரபணு மாற்றப்பட்ட சோயாமீலை (சோயா அவரை) இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது / For the first time, India is set to import 15 lakh tonnes of genetically modified soymeal.
  • சோயாமீல் இறக்குமதி நாட்டில் தற்போது உள்ள தீவன பற்றாக்குறையை சமாளிக்க உள்ளது. கோழி தீவனத்தின் முக்கிய மூலப்பொருளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
  • உள்நாட்டு சோயாவின் விலை கிலோவுக்கு ரூ .40 லிருந்து ரூ .110 ஆக உயர்ந்துள்ளதால் கோழி வளர்ப்பாளர்கள் இறக்குமதியைக் கேட்கின்றனர்.

ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • வருகின்ற 2௦22 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது / Recently, the Centre notified ban on the use of ‘single-use plastic items from July by 2022
  • பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் உட்பட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு, 2022 ஜூலை 1 முதல் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும்.
  • 50 மைக்ரானுக்குக் குறைவான தடிமன் கொண்ட பாலிதீன் பைகள் ஏற்கனவே நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன இந்த ஆண்டு செப்டம்பர் 30 முதல், 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகள் தடை செய்யப்பட உள்ளன
  • டிசம்பர் 31, 2022 முதல், 120 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகள் தடை செய்யப்படும்.

சோன்சிரையா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சமீபத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) நகர்ப்புற சுய-உதவி குழு (SHG) தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக ‘சோன்சிரையா’ (ஒரு பிராண்ட் மற்றும் லோகோ) அறிமுகப்படுத்தியது.
  • கைவினைப் பொருட்கள், ஜவுளி, பொம்மைகள், உண்ணக்கூடிய பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த சுய உதவிக்குழுக்கள், தங்களது பொருட்களை இணையத்தளம் வாயிலாக சந்தைப்படுத்த இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply