TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 14/08/2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 14/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
ஆகஸ்ட் 14 = பிரிவினை கொடுமைகள் (அதிர்ச்சி) நினைவு தினம்
- ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள், பிரிவினை கொடுமைகள் (அதிர்ச்சி) நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
- பிரிவினையின் பொது உயிரிழந்த மக்களை நினைவு கூறும் தினமாக அனுசரிக்க இத்தினம் கடைபிடிக்கப்படும்
செயற்கைக்கோள் தொலைபேசிகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா
- செயற்கைக்கோள் தொலைபேசிகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா என்ற சிறப்பை அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா பெற்றுள்ளது / Kaziranga becomes India’s first National Park with satellite phones worth Rs. 16 lakh
- வேட்டையாடுவதைத் தடுப்பதற்கும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் உதவுவதற்கான நடவடிக்கையில், காசிரங்கா தேசிய பூங்காவின் அதிகாரிகளுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டன.
130-வது துராந்த் கோப்பை
- உலகின் மூன்றாவது பழமையான மற்றும் ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியான டுராண்ட் கோப்பை, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, வருகின்ற செப்டம்பர் மாதம் மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற உள்ளது / Durand Cup, the world’s third oldest and Asia’s oldest football tournament is poised to make a comeback after a year’s hiatus due to the Covid-19 With the dynamic support of All India Football Federation (AIFF), IFA (West Bengal) and the Government of West Bengal, the 130th Edition of Durand Cup is set to become a landmark event.
- மதிப்புமிக்க போட்டி முதன்முதலில் 1888 இல் தக்ஷாயில் (இமாச்சலப் பிரதேசம்) நடைபெற்றது, அப்போது இந்தியாவின் பொறுப்பு வெளியுறவு செயலாளராக இருந்த மோர்டிமர் துராண்டின் பெயர் இப்போட்டிக்கு வைக்கப்பட்டது
தேசிய நூலக (நூலகர்) தினம்
- இந்தியாவில் தேசிய நூலக (நூலகர்) தினம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது / August 12th is being celebrated as National Librarian’s Day in India, in remembrance of national professor of library science, Dr S R Ranganathan
- இந்தியாவில் நூலக வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்த நூலக அறிவியல் தேசிய பேராசிரியர் டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் (1892-1972) நினைவாக ஆகஸ்ட் 12 இந்தியாவில் தேசிய நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இவர் தமிழகத்தின் சீர்காழியில் பிறந்தவர்
வாகனக் கழிவு கொள்கையை துவக்கி வைத்த பிரதமர்
- இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் “வாகனக் கழிவு கொள்கை” ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் / Prime Minister Narendra Modi on 13 August 2021 launched the vehicle scrappage policy.
- வாகனத்தை அகற்றுவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பொருத்தமற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை வெளியேற்ற உதவும். சாத்தியமான சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழல் பொறுப்புடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை ஏற்படுத்துவதுதான் நமது இலக்காகும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டிக்கு மிகப்பெரிய அணியை அனுப்பிய இந்தியா
- ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணி, புறப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக மிகப்பெரிய அணியை இந்தியா அனுப்பி உள்ளது
- 54 விளையாட்டு வீரர்கள் 9 விளையாட்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.
- ரியோவில் கடந்த பதிப்பில் தங்கம் வென்ற மாரியப்பன், 24 ஆகஸ்ட் 2021 அன்று தொடக்க விழாவின் போது இந்திய கொடியை ஏந்தி செல்வார்
மருத்துவ கழிவு நீரை சுத்தப்படுத்த, எலெக்ட்ரான் பீம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆசியாவின் முதல் ஆலை
- மருத்துவ கழிவு நீரை சுத்தப்படுத்த, எலெக்ட்ரான் பீம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆசியாவின் முதல் ஆலை என்ற சிறப்பை, சீனாவின் ஹுபெய் மாகாணம் பெற்றுள்ளது / Asia’s first demonstration facility for medical wastewater treatment using electron beam (EB) technology commenced operation in China.
- இந்த எலெக்ட்ரான் பீம் தொழில்நுட்பம், மருத்துவ கழிவு நீரை கிருமி நீக்கம் செய்கிறது மற்றும் கூடுதல் கிருமிநாசினி அல்லது இரண்டாம் நிலை மாசுபாடு இல்லாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சிதைக்கிறது.
உலகின் 2-வது மாசுபட்ட நகரம் – காசியாபாத்
- இங்கிலாந்தை சேர்ந்த பிரபல “ஹவுஸ்ஃப்ரெஷ்” நிறுவனம் சார்பில் உலகில் மிகவும் மாசுபட்ட நாடுகள் மற்றும் நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
- உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகள் = 1. வங்கதேசம், 2. பாகிஸ்தான் மற்றும் 3. இந்தியா
- உலகின் மிகம மாசுபட்ட நகரங்கள் = 1. ஹோடான் மாகாணம் (சீனா), 2. காசியாபாத் (உத்திரப்பிரதேசம், இந்தியா)
இந்தியாவின் முதல் பெரிய அளவிலான பேட்டரி சேமிப்பு மையம்
- இந்தியாவின் முதல் பெரிய அளவிலான பேட்டரி சேமிப்பு மையம், ஜம்மு காஸ்மீரின் “லே” பகுதியில் டாடா நிறுவனம் சார்பில் அமைக்கப்பட உள்ளது / Tata Power Solar will set up India’s first large-scale battery storage of 50 megawatt-hours (MWh) along with a 50 MW solar plant at Leh.
- டாடா பவர் சோலார் இந்தியாவின் முதல் பெரிய அளவிலான பேட்டரி சேமிப்பை 50 மெகாவாட்-மணிநேரம் (மெகாவாட்) மற்றும் 50 மெகாவாட் சோலார் தொழிற்சாலையை லேவில் அமைக்கும்.
சீகேட் கடற்பயிற்சியில் இந்தியா
- சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க கடற்படை தலைமையிலான தென்கிழக்கு ஆசிய ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி (சீகாட்) இராணுவப் பயிற்சியில் இந்திய கடற்படை தனது வலிமையை நிகழ்த்தி காட்டியது / The Indian Navy demonstrated its maritime maneuvers in U.S. Navy-led Southeast Asia Cooperation and Training (SEACAT) military exercise in Singapore, in August
- ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மாலத்தீவு, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் சீகாட்டில் பங்கேற்றன
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 12, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 11, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 09, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 08, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 07, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 06, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 05, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 04, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 03, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 02, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 01, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 31, 2021