TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 16/08/2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 16/08/2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 16/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

மாசு கட்டுப்பாட்டு வாரிய வெளிப்படைத்தன்மை அறிக்கை

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தில் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது
  • முதல் இடம் = தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (67 புள்ளிகள்)
  • 2-வது இடம் = தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (65.5 புள்ளிகள்)
  • 3-வது இடம் = மத்தியப்பிரதேசம் மாசு கட்டுப்பாட்டு வாரியம்

இந்தியாவில் முதல் முறையாக காணப்படும் புதிய வகை மந்தாரை தாவர இனம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உத்திரக்கான்ட் மாநில வனத்துறையின் சார்பில் சமிபத்தில் இந்தியாவில் இதுவரை காணப்படாத புதிய வகை மந்தாரை (ஆர்ச்சிட்) இனத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  • இதன் அறிவியல் பெயர் = Cephalanthera erecta var. oblanceolate
  • இது உத்திரக்கான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 16 = பார்சி புத்தாண்டு (நவ்ரோஸ் விழா)

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ஆகஸ்ட் 16 ஆம் தேதி, பார்சி இன மக்களின் 2௦21 ஆம் ஆண்டின் புத்தாண்டு விழாவான “பார்சி புதுவருடம் 2௦21” கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை “நவ்ரோஸ் 2௦21” என்றும் அழைப்பர்
  • பார்சி புத்தாண்டு என்பது பிராந்திய விழாவாகும், இது ஜோராஸ்ட்ரியன் நாட்காட்டியின் முதல் மாதமான ஃபார்வர்டின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பெண் சத்யாகிரகி – சுபத்ரா குமாரி சவுகான்

  • இந்தியாவின் முதல் பெண் சத்யாகிரகியான “சுபத்ரா குமாரி சவுகானின்” 117 பிறந்த தினம், ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்பட்டது
  • இவரை கவுரவிக்கும் விதமாக கூகுல் நிறுவனம், தனது தேடுதள பக்கத்தில் டூடுல் பதிவிட்டது

ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்

  • ஹைதி நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 13௦௦ க்கும் மேற்பட்ட மக்கள் மரணம் அடைந்தனர்
  • ரிக்டர் அளவில் சுமார் 7.2 பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாட்டின் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்தன

TAPAS இணையதள போர்ட்டல்

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில், “TAPAS” என்ற இணையதள போர்டல் துவக்கி வைக்கப்பட்டது
  • TAPAS = Training for Augmenting Productivity and Services
  • கொரோனோ பெருந்தொற்று காலத்தில் வணிகத்தின் உற்பத்திதிறன் மற்றும் சேவைகளை மேம்படுத்த இப்பயிற்சி அளிக்கப்படுகிறது

சிஎஸ்ஐஆர் அரோமா மிஷன்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • “சிஎஸ்ஐஆர் அரோமா மிஷன் : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் வாழ்கையை மாற்றுதல்” (CSIR Aroma Mission: Transforming Lives Through S&T”) என்ற பெயரில் இணையதள வாயிலான கருத்தரங்கம் 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மத்திய அரசால் நடத்தப்பட்டது
  • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் “ஊதா புரட்சி” துவங்கப்பட்டு சிறப்பாகப் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது / Jammu & Kashmir Heralds ‘Purple Revolution’ in the Country, taking a lead in the Lavender Cultivation
  • ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் லாவெண்டர் சாகுபடியில் முன்னிலை வகிப்பதன் மூலம் இந்தியாவின் ‘ஊதா புரட்சியை’ சிறப்பாக செயல்படுத்துகிறது

தேசிய ஹைட்ரஜன் இயக்கம்

  • சமீபத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தன்று தேசிய ஹைட்ரஜன் மிஷன் துவக்கம் பற்றி பிரதமர் அறிவித்தார் / Union Miniser of Youth Affairs and Sports, Anurag Thakur, launched a nationwide programme of Fit India Freedom Run 0
  • இது மத்திய பட்ஜெட் 2021 இல் முன்மொழியப்பட்டது
  • பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே அரசின் நோக்கம்.
  • இது ஒரு சுத்தமான எரியும் மூலக்கூறு ஆகும், இது இரும்பு மற்றும் எஃகு, இரசாயனங்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் டீ-கார்பனைஸ் செய்யலாம்.

சைனிக் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா உரையில் பொழுது, பிரதமர் “சைனிக் பள்ளிகளில் இனி பெண்களும் படிக்கலாம்” என அறிவித்தார்
  • மிசோராம் மாநில சைனிக் பள்ளியில் முதல் முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

 

 

Leave a Reply