TNPSC TAMIL ONE LINE NOTES – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
கிரவுஞ்சம் என்பது – பறவை 302. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750 303. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி 304. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள் 305. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம் 306. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல் 307. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72 308. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி 309. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் – குதிரை மறம் 310. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம் 311. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன் 312. குறிஞ்சிக் கிழவன் – முருகன் 313. குறிஞ்சித் தேன் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி 314. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் – கபிலர் 315. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார் 316. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர் 317. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400 318. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது – உரிப்பொருள் 319. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309 320. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர் 321. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள் -குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார் 322. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர் 323. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள் 324. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440 325. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ 326. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205 327. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் – அடியார்க்கு நல்லார் 328. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல் 329. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார் 330. கைவல்ய நவ நீதம் எழுதியவர் – தாண்டவராயர் 331. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார் 332. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை 333. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன் 334. கொற்ற வள்ளை – உலக்கைப் பாட்டு 335. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள் 336. கோவூர்கிழார் நூலாசிரியர் – கு.திருமேனி 337. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் – நா.காமராசன் 338. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர் 339. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள் 340. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை 341. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368 342. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை. 343. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள் 344. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல் 345. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார் 346. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார் 347. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் 348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் – 30 349. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள் 350. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று 351. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார் 352. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம் 353. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் – நம்மாழ்வார் 354. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் – செய்குத் தம்பிப் பாவலர் 355. சதுரகராதி ஆசிரியர் – வீரமாமுனிவர் 356. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் – கவிஞர் தமிழழகன் 357. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா 358. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் – வச்சிர நந்தி சங்கம் 359. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914 360. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம் 361. சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர் 362. சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் – மாயூரம் வேத நாயகர் 363. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம் 364. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள் 365. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர் 366. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார் 367. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் – வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் 368. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி 369. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர் 370. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர் 371. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் – படிக்காசுப் புலவர் 372. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் – தாழை நகர் 373. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன் 374. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64 375. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர் 376. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல் 377. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள் 378. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர் 379. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் – எஸ்.வையாபுரிப் பிள்ளை 380. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான் 381. சிறுமுதுக்குறைவி – கண்ணகி 382. சின்ன சங்கரன் கதையாசிரியர் – பாரதியார் 383. சின்னூல் எனப்படுவது – நேமி நாதம் 384. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு – 1705 385. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர் 386. சீதக்காதி என அழைக்கப்படுபவர் – செய்யது காதர் மரைக்காயர் 387. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க 388. சீறாப்புராணம் ஆசிரியர் – உமறுப்புலவர் 389. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975 390. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் – மு.கதிரேசன் செட்டியார் 391. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர் 392. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன் 393. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன் 394. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி 395. சுரதாவின் இயற்பெயர் – இராசகோபாலன் 396. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர் 397. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர் 398. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன் 399. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் – மண்டல புருடர் 400. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் – மறக்கள வழி – வாகைத்திணை