சூளாமணி
சூளாமணி ஆசிரியர்
- ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
- காலம் = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
- பாடல்கள் = 2330
- சருக்கம் = 12
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
சூளா மணி பெயர்க்காரணம்
- மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளா மணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்
- நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
- இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
- சூளா மணியின் கதை நாயகன் திவிட்டன்
- நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
- “விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
- “சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளா மணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
- “சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை” என்கிறார் தெ.பொ.மீ
மேற்கோள்
- ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ