நீலகேசி
நீல கேசி நூல் அமைப்பு
- ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
- காலம் = 6ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 894
- சருக்கம் = 10
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
நீலகேசி வேறு பெயர்கள்
- நீல கேசி திரட்டு
- நீலம் (யாப்பருங்கல விருத்தியுரை)
பெயர் காரணம்
- நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
- கேசி = கூந்தலை உடையவள்
- நீல கேசி = கரிய கூந்தலை உடையவள்
பொதுவான குறிப்புகள்
- நீல கேசி என்றால் கருத்த கூந்தலை உடையவள் என்று பொருள்
- இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
- நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
- இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.
மேற்கோள்
- கோறல் பொய்த்தல் கொடுங்களவு
நீங்கிப் பிறர் மனைகண்மேல்
சேரல் இன்றிச் செலும் பொருள்மேல்
சென்ற சிந்தை வேட்கையினை
ஆறு கிற்பின் அமர் உலகம்
நுன்கண் கடியதாம் என்றாள்