புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி
முனைவர் பக்தவத்சல பாரதி இளம் அறிவியல் பட்டத்திற்காக விலங்கியலையும் முதுகலைப் பட்டத்திற்காக மானிடவியலையும் சமூக வியலையும் பயின்றவர்.
தமிழகத்தில் ஜாமக் கோடங்கிகள் என்றழைக்கப்படும் குடுகுடுப்பை நாயக்கர் நாடோடிச் சமூகத்தை ஆய்வு செய்து மானிடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1985 – ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தரை ஆண்டுகள் வாழ்வியல் களஞ்சிய மையத்தில் பணியாற்றினார்.
1990 – ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்நிறுவனத்தின் இயக்குநராகக் கடமையாற்றுகிறார்
தமிழர் மானுடவியல் (தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.)
பண்பாட்டு மானுடவியல்
பாணர் இனவரைவியல்
தமிழகப் பழங்குடிகள்
இலக்கிய மானிடவியல்
இலங்கை – இந்திய மானிடவியல்
இலங்கையில் சிங்களவர்
கிராவின் கரிசல் பயணம்
சாதியற்ற தமிழர் சாதித் தமிழர்
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
தமிழகத்தில் நாடோடிகள்
தமிழர் உணவு
தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு நவீன ஆய்வு முடிவுகள்