இந்திய கவுன்சில் சட்டம் 1892
- 1892ம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் என்பது இந்தியாவில் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இங்கிலாந்து பாராளுமன்றம் கொண்டுவந்த சட்டமாகும்
- அப்பொழுது இந்திய வைசிராயாக இருந்த டப்ரின் பிரபுவின் சிபாரிசின் அடிப்படையில் இச்சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
- இந்திய அரசு செயலராக (Secretary of State) இருந்தவர் = ஹாரிங்க்டன் பிரபு
இந்திய கவுன்சில் சட்டம் 1892 – சட்டத்தின் அவசியம்
- மேலைக் கல்வியும், விஞ்ஞானமும் படித்த இந்தியர்கள் இடையே தேசிய உணர்வும், ஜனநாயக உணர்வும் மேலோங்கியது
- இந்திய மக்களின் குறைகளை எடுத்துக் கூறும் வகையில் 1885-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கியது
- காங்கிரசில் இருந்த மிதவாதிகள் சட்டமியற்றும் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை வைத்தனர்
- ஐ.சி.எஸ். தேர்வுகளை இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு இடங்களிலும் நடத்த வேண்டும் எனவும், மேற்கு பர்மாவை கைப்பற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும், ராணுவ செலவினங்களை குறைக்க வேண்டும் எனவும் கொரஈகை வைக்கப்பட்டது
இந்திய கவுன்சில் சட்டம் 1892 – சட்டத்தின் சிறப்பியல்புகள்
மைய சட்டமன்றத்தின் விரிவாக்கம்
- இந்திய கவுன்சில் சட்டம் 1892 படி மைய சட்டமன்றத்தின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறையாமலும் பதினாறுக்கும் மேற்படாமலும் இருக்க வேண்டும்.
மாநில சட்டமன்றங்களின் விரிவாக்கம்
- மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. மதராஸ், பம்பாய் ஆகிய மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது எட்டு ஆகவும் அதிக அளவு இருபது ஆகவும் இருக்க வேண்டும்.
உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள்
- பொது நலன்கள் பற்றிக் கேள்விக் கேட்பது போன்ற சில உரிமைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் சபைத் தலைவருக்கு 6 நாட்களுக்கு முன்பே கேள்வி கேட்பது பற்றிய செய்தியை தெரிவிக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அவசியம் இல்லை
- வரவு செலவு திட்டத்தை (Budget) விவாதிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அதன் மீது வாக்களிக்கும் உரிமை இல்லை (1860ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் முறையாக வரவுசெலவு திட்டமான பட்ஜெட் அறிமுகம் செய்யப்பட்டது)
சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம்
- சட்டமன்ற உறுபினர்கள் அனைவரும் வைசிராய், மானில் கவர்னர்கள், துணை நிலை கவர்னர்கள் ஆகியோரால் நியமனம் செய்யப்படுவர்.
உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படும் முறை
- இந்திய கவுன்சில் சட்டம் 1892 வருட சட்டப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படும் முறை (Elective Elements) முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்தச்சட்டத்தில் “தேர்தல்” (Election) என்ற வார்த்தை நேரடியாக பயன்படுத்தப்படவில்லை.
- மறைமுக தேர்தல் நடைபெற்றது (Indirect Elections)
- மாநில சட்டமன்றங்களில் முனுசிபாலிட்டிகள், மாவட்டக் குழுக்கள், வர்த்தக சபைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்து பட்டியலை கவர்னருக்கு அனுப்பப்பட்டு, அவர் இவர்களை நியமனம் செய்வார்
உறுப்பினர்களின் எண்ணிக்கை
- சட்டமன்றத்தில் இந்திய அளவில் அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களின் (Non Official Members) எண்ணிக்கை அதிகரித்தது.
- மத்திய சட்ட மன்றத்தில் 1௦-16 பேரும், வங்கத்தில் 2௦ பேரும், மதராஸ் மாகாணத்தில் 2௦ பேரும், பம்பாய் மாகாணத்திற்கு 8 பேரும், அயோத்தி மற்றும் வடமேற்கு மாநிலங்களுக்கு 15 பேரும் இருக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது
சிவில் பணி
- சிவில் பணி மூன்றாக பிரிக்கப்பட்டது
- மத்திய அரசுப் பணி (Imperial)
- மாகாணப் பணி (Provincial)
- சார்நிலைப் பணி (Subordinate)
இந்திய கவுன்சில் சட்டம் 1892 – குறிப்பு
- வைசிராயின் நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினரை மறைமுக தேர்தல்கள் மூலம் தேர்வு செய்ய இச்சட்டம் வழிவகை செய்தது
- இந்திய தேசிய காங்கிரசின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன
- நேரடி தேர்தல் முறை இல்லாதது இச்சட்டதின் குறையாகும்
- இச்சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” குறைபாடாக இருந்தது
- 24 அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களில் “5 இந்தியர்கள்” மட்டுமே இருந்தனர்
- துணைக் கேள்விகளை கேட்க்கும அதிகாரம் இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை
- காங்கிரஸ் கட்சி மனு அளித்தல், வேண்டுதல் போன்றவற்றால் நிறைவேற்றி விடலாம் என நினைத்தது.
- ஆனால் பாலகங்காதர திலகர் = “நாம் அரசியல் உரிமைகளுக்காக போராட வேண்டும். தூண்டுதல்களால் இதனை எல்லாம் அடையமுடியும் என மிதவாதிகள் (Moderates) நினைக்கிறார்கள். மிக வலுவான அழுத்தத்தால் மட்டுமே அவற்றைப் பெற முடியம் என நாங்கள் நினைக்கிறோம்” (political rights will have to be fought for. The moderates think that these can be won by persuasion. We Think that they can only be obtained by strong Pressure)
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)
-
CHARTER ACT OF 1793 (பட்டயச் சட்டம் 1793)
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)