10TH TAMIL பூத்தொடுத்தல்

10TH TAMIL பூத்தொடுத்தல்

10TH TAMIL பூத்தொடுத்தல்

10TH TAMIL பூத்தொடுத்தல்

  • மனித வாழ்விற்கு அழகூட்டுபவை = கலைகள்.
  • தத்தித் தாவும் குழந்தை முதல் தள்ளாடும் முதியவர் வரை யாவரும் அழகுணர்ச்சி மிக்கவர்களே!
  • நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவிலும் அழகு சிரிப்பதை அடையாளம் காணுகிறார் கவிஞர் ஒருவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பாடல்

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?

சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.

இறுக்கி முடிச்சிட்டால்

காம்புகளின் கழுத்து முறியும்.

தளரப் பிணைத்தால்

மலர்கள் தரையில் நழுவும்.

வாசலில் மரணம் நிற்பதறிந்தும்

வருந்தாமல் சிரிக்கும்

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான்-

ஒருவேளை,

என் மனமே நூலாகும்

நுண்மையுற்றாலொழிய.

10TH TAMIL பூத்தொடுத்தல்
10TH TAMIL பூத்தொடுத்தல்

கவிஞர் உமா மகேஸ்வரி ஆசிரியர் குறிப்பு

  • கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
  • கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதை தொகுதி நூல்கள் = நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை.
  • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

 

 

Leave a Reply