10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
10TH TAMIL முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
- ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கும் தமிழ் = நாட்டுப்புறத்தமிழ்.
- குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தரும் தமிழ் = பிள்ளைத்தமிழ்.
- முத்துகுமாரசாமி பிள்ளைதமிழ் நூலின் பாட்டுடைத் தலைவன் = வைதியநாதபுரியில் எழுந்தருளியுள்ள முருகன்.
அருஞ்சொற்பொருள்
- பண்டி = வயிறு
- அசும்பிய = ஒளிவீசுகிற
- முச்சி = தலையுச்சிக் கொண்டை
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கணக்குறிப்பு
- குண்டலமும் குழைகாதும் = எண்ணும்மை
- ஆடுக = வியங்கோள் வினைமுற்று
செங்கீரைப் பருவம் என்றால் என்ன
- செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்.
- இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.
- இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
குழந்தைகள் அணியும் அணிகலன்கள்
- சிலம்பு, கிண்கிணி = காலில் அணிவது
- அரைநாண் = இடையில் அணிவது
- சுட்டி = நெற்றியில் அணிவது
- குண்டலம், குழை = காதில் அணிவது
- சூழி = தலையில் அணிவது
பிள்ளைத்தமிழ் குறிப்பு
- “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்” இயற்றியவர் = குமரகுருபரர்.
- 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
- இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
- பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ்.
- பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
- இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.
பிள்ளைதமிழ் பருவங்கள்
- பிள்ளைத்தமிழ் பருவங்கள் = பத்து
- ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
- பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்
- இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
- ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்
- பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங்கு, அம்மானை, ஊசல்
குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு
- குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
- இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.
- கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
- காசிக்காண்டம்
- மலைபடுகடாம்
- கோபல்லபுரத்து மக்கள்
- பெருமாள் திருமொழி
- விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
- இலக்கணம் – பொது
- மொழிபெயர்ப்புக் கல்வி
- நீதிவெண்பா
- திருவிளையாடல் புராணம்