10TH TAMIL பரிபாடல்

10TH TAMIL பரிபாடல்

10TH TAMIL பரிபாடல்
10TH TAMIL பரிபாடல்

10TH TAMIL பரிபாடல்

  • பெருவெளியில் அண்டத் தோற்றத்திற்கு காரணமான “கரு” தோன்றியது.
  • பிறகு “வானம்” என்னும் முதல் பூதம் உருவாகியது.
  • பிறகு நெருப்புப் பந்து போல புவி உருவாகியது.
  • பூமி குளிரும்படி மழை பெய்தது.
  • புவியில் உயிர்வாழ சூழல் உருவாகி, உயிர்கள் தோன்றின.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பரிபாடல் நூல் குறிப்பு

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று = பரிபாடல்
  • பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்
  • “ஓங்கு பரிபாடல்” என்று சிறப்பிக்கப்படும் நூல் = பரிபாடல்
  • சங்க நூல்களுள் பண்ணோடு (இசையோடு) பாடப்பட்ட நூல் = பரிபாடல் ஆகும்.
  • உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.
10TH TAMIL பரிபாடல்
10TH TAMIL பரிபாடல்

பரிபாடலில் புவி உருவாக்கம் தொடர்பான அறிவியல்

  • புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகிற கருத்தை கூறும் பழம்பாடல் இடம்பெற்றுள்ள நூல் = பரிபாடல்.

அருஞ்சொற்பொருள்

  • விசும்பு = வானம்
  • ஊழி = யுகம்
  • ஊழ் = முறை
  • தண்பெயல் = குளிர்ந்த மழை
  • ஆர்தருபு = வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
  • பீடு = சிறப்பு
  • ஈண்டி = செறிந்து திரண்ட

இலக்கணக்குறிப்பு

  • ஊழ்ஊழ் = அடுக்குத் தொடர்
  • வளர்வானம் = வினைத்தொகை
  • செந்தீ = பண்புத்தொகை
  • வாரா (ஒன்றன்) = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள்

  • அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
  • வெளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும்.
  • நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தவர் = அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள்.
  • எந்த ஆண்டு அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் பால்வீதிகள் உள்ளதை நிரூபித்தார் = 1924.

மாணிக்கவாசகரின் திருஅண்டப் பகுதி

  • 1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”

  • திருஅண்டப் பகுதி = திருவாசகத்தின் மூன்றாம் பகுதி
  • பாடலின் பொருள் = அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல அவை நுண்மையாக இருக்கின்றன.

 

 

 

Leave a Reply