11TH TAMIL ஆக்கப்பெயர்கள்

11TH TAMIL ஆக்கப்பெயர்கள்

11TH TAMIL ஆக்கப்பெயர்கள்
11TH TAMIL ஆக்கப்பெயர்கள்

11TH TAMIL ஆக்கப்பெயர்கள்

  • நமது முன்னோர்கள் சில பொருள்களுக்கு காரணம் கருதியும், சில பொருள்களுக்கு காரணம் இன்றியும் பெயர் வைத்தனர்.
  • காலப்போக்கில் பொருளின் மாற்றத்தால் “காரணப் பெயர்கள் இடுகுறிப்பெயர்களாக” மாற்றம் அடைந்துள்ளன.
  • நாற்காலி = காரணப்பெயர்.
    • ஆனால், இன்று நான்கு கால் இல்லாத இருக்கைக்கும் நாற்காலி என்று பெயர் வைத்து அழைக்கிறோம்.
    • காரணம் கருதி வைக்கப்பட்ட பெயர்கள் தற்பொழுது இடுகுறிப்பெயராக மாறியுள்ளன.

ஆக்கப்பெயர் என்றால் என்ன

  • காரணப்பெயராகவோ, இடுகுறிப்பெயராகவோ அமைய நாம் உருவாக்கும் புதிய சொற்கள் ஆக்கப்பெயர் எனப்படும்.
  • பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச் சொற்கள் ஆக்கப் பெயர்கள் (Derivative Noun) என்பர்.

ஆக்கப்பெயர் விகுதிகள் என்றால் என்ன

  • பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ஆக்கப்பெயர் விகுதிகள் என்பர்.
  • ஆக்கப்பெயர்களில் தனிச்சிறப்பு உடையவை = விகுதிகளே ஆகும்.

ஆக்கப்பெயர் விகுதிகள்

  • ஆக்கப்பெயர் விகுதிகள் = காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம், இயல், சாலி, தனம், துவம், ஐயம், ஆளன், மதி

ஆக்கப்பெயர்கள்

  • தமிழ் மொழியில் ஆக்கப்பெயர்கள் பேச்சு வழக்கிலேயே மிகுதியாக உள்ளன.
  • எ.கா = பூக்காரி, நெசவாளி / நெசவாளர், உழைப்பாளி / உழைப்பாளர், வண்டிக்காரன், சினிமாக்காரன், மாட்டுக்காரன், வீட்டுக்காரன், ஆட்டோக்காரன்
  • “அறிவியல், திறமைசாலி, கோழைத்தனம், சமத்துவம், பெண்ணியம், பேச்சாளன், ஏற்றுமதி” ஆகியவை = ஆக்கப் பெயர்ச்சொற்கள் ஆகும்.

ஆக்கப்பெயர் வகைகள்

  • ஆக்கப்பெயர்ச்சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு மூவகையாகப் பிரிக்கலாம். அவை,
    1. பெயருடன் சேரும் விகுதிகள்
    2. வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்
    3. பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்

பெயருடன் சேரும் விகுதிகள்

  • பெயருடன் சேரும் விகுதிகள் = காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர்

11TH TAMIL ஆக்கப்பெயர்கள்

  • காரன், காரி, காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு, தொழில் அல்லது ஆளுதல் என்னும் நான்கு பொருள்களில் வரும்.
  • தொழிற்பெயர் விகுதிகளுடன் ‘ஆளர்’ என்னும் ஆக்கப்பெயர் விகுதி சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.
  • ‘ஆளர்’ ‘ஆளி’ முதலான விகுதிகள் இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்கத் துணை நிற்கின்றன.

11TH TAMIL ஆக்கப்பெயர்கள்

வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்

  • வினையடியுடன் ‘மானம்’ என்னும் விகுதி சேர்ந்து புதிய சொற்கள் உருவாகின்றன.

11TH TAMIL ஆக்கப்பெயர்கள்

பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்

  • பெயருடன், வினையுடன் சேரும் விகுதி = அகம்.

 

 

 

 

Leave a Reply