11TH TAMIL இதழாளர் பாரதி

11TH TAMIL இதழாளர் பாரதி

11TH TAMIL இதழாளர் பாரதி
11TH TAMIL இதழாளர் பாரதி

11TH TAMIL இதழாளர் பாரதி

  • கல்வி என்பது பள்ளியில் அல்லது கல்லூரியில் மட்டும் பெறப்படுவதன்று.
  • கல்வி கற்பவர், இதழ்களிலும் நடைமுறை அறிவைப் பெறுவதுடன் அதற்கேற்ப வாழவும் முனைகின்றனர்.
  • இவ்விதழ்களின் ஆசிரியர்கள் சமூகத்திற்குத் தேவையான பாடங்களை முன்வைக்கின்றனர்.
  • சிறந்த பத்திரிகையாளன் ‘நல்ல ஆசான்’ என்பதில் ஐயமில்லை.
  • பாரதியும் இதற்கு விலக்கன்று.

தமிழ்ச்சிற்பி பாரதி

  • செம்மொழியாகத் திகழும் நம் மொழி புதிய நடையும் புதிய உடையும் புதிய பொருளும் கொண்டு எழுச்சியுடன் திகழக் காரணமாக அமைந்த தமிழ்ச்சிற்பி பாரதியின் மற்றொரு பரிமாணம் இதழியல் பணி.
  • தமிழ்ச்சிற்பி எனப்படுபவர் = பாரதியார்

பாரதியின் இதழியல் பணி

  • பாரதி கவிஞர் மட்டுமல்ல; சிறந்த பேச்சாளர்; பாடகர்; கட்டுரையாளர்; கதை ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் அறிஞர்; ஆன்மிகவாதி;
  • அனைத்திற்கும் மேலே மிகச்சிறந்த இதழாளர் ஆவார்.

தமிழாசிரியர் பணி

இதழாளர் பாரதி

  • பள்ளிப் பணியில் இருந்து வெளியேறி, சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியர் பணிக்கு சேர்ந்தார்.
  • பாரதி பணியாற்றிய இதழ்கள் = சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி (யங் இந்தியா), விஜயா, சூர்யோதயம், கர்மயோகி
  • மேற்கண்ட இதழ்களில் ஆசிரியராகவும், துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி படைப்புகள்

  • சர்வ ஜன மித்திரன், ஞானபாநு, காமன் வீல், கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரம் போன்ற இதழ்களிலும் பாரதி தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
11TH TAMIL இதழாளர் பாரதி
11TH TAMIL இதழாளர் பாரதி

பாரதியாரின் புனைப்பெயர்கள்

முதன் முதலில் கருத்துப்படங்களை வெளியிட்டவர்

  • கருத்துடன் காட்சியும் இடம்பெறுவது வாசகர்களைக் கவரும்தானே அப்பா.
  • பாரதி அன்றே தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துப்படங்களையும் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டுள்ளார்.
  • பாரதியார் “கேலிச்சித்திரத்தை”, “விகடச்சித்திரம்” என்று குறிப்பார்.
  • தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி.
  • தமிழில் ‘சித்திராவளி’ என்ற பெயரில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றையும் நடத்த விரும்பினார்.
  • அதைச் செயல்படுத்த முடியாவிட்டாலும் இந்தியா, விஜயா ஆகிய இரு இதழ்களிலும் கருத்துப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் வளர்ச்சியில் பாரதியின் பங்கு

  • தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதி.

பெண்களுக்காக குரள் வெண்பா எழுதிய பாரதி

  • பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி பெண்களுக்காகத் தமது ‘சக்ரவர்த்தினி’ இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்.

பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்

ஒண்மை யுறஓங்கும் உலகு

சிவப்பு வண்ண “இந்தியா” இதழ்

மகுடமிடல்

  • தமிழ் இதழ்களில் முதன் முதலில் தமிழில் தலைப்பிடுவதற்கும் முன்னோடி பாரதியே ஆவார்.
  • தலைப்பிடலை “மகுடமிடல்” என்று பாரதி கூறுகிறார்.
11TH TAMIL இதழாளர் பாரதி
11TH TAMIL இதழாளர் பாரதி

பாரதியார் கட்டுரைகள்

  • எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.

அமானுல்லா கான்

  • இதழாளராகவே இறந்தார். இறந்து போவதற்கு முதல்நாள் இரவு, தூங்கச் செல்லும் முன்பு, நாளைக்கு,”அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போகவேண்டும்” என்று இறுதியாகப் பாரதியார் கூறியுள்ளார்.
  • பாரதியார் இறப்பதற்கு முன்னர் இறுதியாக எழுத நினைத்தது = அமானுல்லா கான் பற்றியது
  • ‘பாரதியைப் பற்றி நண்பர்கள்’ என்ற நூலை படைத்தவர் = ரா. அ. பத்மநாபன்.
  • பாரதியார் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

மரபு கவிதைகள்

புதுக்கவிதை

கடித இலக்கியம்

கலைகள்

 

 

உரைநடை

Leave a Reply