11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
- பிறமொழிச் சொற்களுக்கு தகுத்த தமிழ்ச் சொற்களை உருவாக்கும் முறைமைக்கு கலைச்சொல்லாக்கம் என்று பெயர்.
கலைச்சொல்லாக்கம் என்றால் என்ன
- கலைச் சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்து புதிதாக சொற்களை உருவாக்கியும் தருவது ஆகும்.
கலைச்சொற்கள் என்றால் என்ன
- ஒரு மொழியில் காலத்திற்கேற்ப துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்பர்.
- ஒரு மொழி தன வேர்ச்சொற்களை கொண்டு புதிய கலைச்சொற்களை உருவாக்கி கொள்ள வேண்டும்
- கலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப்பெயராகவே அமையும்.
அகராதியின் நோக்கம்
- பொருள் தெரியாத சொற்களுக்கு பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம் ஆகும்.
கலைச்சொல்லாக்க பணிக்கு முன் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள்
- ஆக்கப்பெறும் சொல் தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
- பொருள் பொருத்தமுடையதாக, அதே நேரத்தில் செயலைக் குறிப்பதாக அமைதல் வேண்டும்.
- வடிவில் சிறியதாக, எளிமையாக இருத்தல் வேண்டும்.
- ஓசை நயமுடையதாக இருத்தல் வேண்டும்.
- தமிழிலக்கண மரபுக்கு உட்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
- நல்லவை அல்லாதவற்றைக் குறிக்கக்கூடாது.
அறிவியல் சொற்களை தமிழாக்குவதில் உள்ள முறைகள்
முறைகள் |
எடுத்துக்காட்டுகள் |
பழந்தமிழிலக்கியச் சொல்லைப் பயன் படுத்துதல் |
வலவன் (PILOT) |
பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் |
அம்மை (MEASLES) |
பிறமொழிச் சொல்லினைக் கடன்பெறல் |
தசம முறை (Decimal) |
புதுச்சொல் படைத்தல் |
மூலக்கூறு (Molecule) |
உலக வழக்கை ஏற்றுக் கொள்ளல் |
எக்ஸ் கதிர் (X-ray) |
பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல் |
ஒளிச்சேர்க்கை (Photosynthesis) |
ஒலிபெயர்த்துப் பயன்படுத்தும் சொற்கள் |
மீட்டர், ஓம் (Meter, Ohm) |
உலக அளவிலான குறியீடுகள், சூத்திரங்கள் |
∑ √A = πr2 H20, Ca |
ஒரு சொல்லில் இருந்து பல சொற்களை உருவாக்கல்
- ஒரு சொல்லை மொழிபெயர்க்கும்போதோ அல்லது புதிய சொல்லை உருவாக்கும்போதோ அச்சொல் அதே போன்ற வேறு பல சொற்களை உருவாக்க உதவ வேண்டும்.
- எடுத்துக்காட்டாக,
- Library என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நூலகம், நூல்நிலையம் ஆகிய சொற்கள் கையாளப்படுகின்றன.
- இச்சொற்களில் நூலகம் என்னும் சொல்லே மேலும் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டது.
- library – நூலகம்
- librarian – நூலகர்
- library science – நூலக இயல்
கலைச்சொற்களை தரப்படுத்தல் வேண்டும்
- அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும்போது பல்வேறு சொற்களை ஆள்கின்றனர்.
- எடுத்துக்காட்டாக, Antibiotics = எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லிகள், உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நச்சுயிர்க் கொல்லிகள் எனப் பல்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
- இக்கலைச்சொற்கள் தமிழில் சொல்லாக்க வளர்ச்சியினை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
- ஆனால், கலைச்சொற்களைக் கற்பதிலும் அவற்றைப் புரிந்துகொள்வதிலும் துறைசார்ந்த நிலையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- இவற்றைத் தவிர்க்க அச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். இதற்கென குழு ஒன்றை உருவாக்கலாம்.
தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை
- ‘தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கிய பாரதி, Member என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லொன்றை உருவாக்க முனைந்தார்.
- மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை .
- “அவயவி, அங்கத்தான், சபிகன், உறுப்பாளி” என்ற பல்வேறு சொற்களை பயன்படுத்தி பார்கிறார். ஆனால் அவருக்கு அந்த வார்த்தைகளில் திருப்தி ஏற்படவில்லை.
- “கடைசியாக மெம்பர் என்று எழுதி விட்டேன்” என்று கூறுகிறார் பாரதியார்
தொழில்நுட்ப கலைச்சொற்கள்
- Cellphone = கைப்பேசி, செல்லிடப்பேசி, அலைபேசி
- Website = இணையம்
- Blog = வலைப்பூ
- E-Mail = மின்னஞ்சல்
- Smartphone = திறன்பேசி
- Windows = பலகணி
மருத்துவ கலைச் சொற்கள்
- Clinic = மருத்துவமனை
- Blood Group = குருதிப் பிரிவு
- Pharmacist = மருந்தாளுநர்
- X-Ray = ஊடுகதிர்
- Typhoid = குடற்காய்ச்சல்
- Ointment = களிம்பு
கல்வி சார்ந்த கலைச் சொற்கள்
- Note Book = எழுதுசுவடி
- Answer Book = விடைச்சுவடி
- Rough Note Book = பொதுக் குறிப்புச் சுவடி
- Prospectus = விளக்கச்சுவடி
ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்கள்
- Touch Scrren = தொடுதிரை
- Bug = பிழை
- Gazette = அரசிதழ்
- Despatch = அனுப்புகை
- Subsidy = நல்கை
- Ceiling = உச்சவரம்பு
- Circular = சுற்றறிக்கை
- Sub Junior = மிக இளையோர்
- Super Senior = மீமூத்தோர்
- Carrom = நாலாங்குழி ஆட்டம்
- Sales Tax = விற்பனை வரி
- Customer = வாடிக்கையாளர்
- Consumer = நுகர்வோர்
- Account = பற்று வரவுக் கணக்கு
- Refree = நடுவர்
- சான்றோர் சித்திரம் – ஜி யு போப்
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- சீறாப்புராணம்
- அகநானூறு
- பிம்பம்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- 11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
- 11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
- 11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
- 11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
- 11TH TAMIL கலைச்சொல்லாக்கம்
- சான்றோர் சித்திரம் – இரசிகமணி தி கே சிதம்பரனார்
- காலத்தை வென்ற கலை
- ஆத்மாநாம் கவிதைகள்
- குற்றாலக் குறவஞ்சி
- திருச்சாழல்
- இசைத்தமிழர் இருவர்