11TH TAMIL தொடரியல்
11TH TAMIL தொடரியல்
- சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது = தொடர் எனப்படும்.
- தொடர், தொடரமைப்பு ஆகியவற்றை ஆராய்வது = தொடரியல்.
- நெகிழ்வுத்தன்மை கொண்ட அமைப்பு = தொடரியல் ஆகும்.
தொடரியல் என்றால் என்ன
- தொடர், தொடரமைப்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றை ஆரய்வது “தொடரியல்” எனப்படும்.
- தொடரியலின் சிறப்பு, ஒரு மொழியின் வளத்தைக் காண உதவுகிறது.
தொல்காப்பியம் காட்டும் தொடரமைப்புகள்
- தொல்காப்பியம், தொடரமைப்புகள் பற்றி சில நூற்பாக்களில் கூறியுள்ளது. அவை, பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை,
- தொடரில் சொற்கள் அமைந்துவரும் நிலை
- திணை – பால் – எண் – தொடர்ப்பொருத்தம்
- ஒரு சொல் அல்லது தொடர் அடுக்கி வருதல்
- ஒரு தொடரை அடிப்படையாகக் கொண்டு செருகலும் விரித்தலும்
- தொடரில் முன் பின் மாற்றம்
- ஒரு தொடரை இரு வகையாக விளக்குதல்
- இலக்கணக்கூறு நோக்கில் மாற்றம் – தோன்றா எழுவாய்
- தொடரமைப்பில் ஆகுபெயர்
தொடரில் சொற்கள் அமைந்து வரும் நிலை
- (எ.கா) = கண்ணன் வந்தான்; அவன் கடிதம் கொண்டு வந்தான்,
- இங்கு கண்ணன் = இயற்பெயர்; அவன் = சுட்டுப்பெயர்.
- இயற்பெயர் உடைய தொடரும், சுட்டுப்பெயர் கொண்ட மற்றொரு தொடரும் அடுத்தடுத்து வர வேண்டும்.
- 11TH TAMIL தொடரியல்
திணை – பால் – எண் – தொடர்ப்பொருத்தம்
- ஒரு தொடரில் உள்ள எழுவாய், அதன் பயனிலையோடு திணை, பால், எண் ஆகியவற்றில் ஒத்திருத்தல் வேண்டும்.
தொடர்கள் |
திணை | பால் | எண் |
மாறன் சிரித்தான் | உயர்திணை | ஆண்பால் |
ஒருமை |
மணிமொழி பாடினாள் |
உயர்திணை | பெண்பால் | ஒருமை |
மக்கள் மகிழ்ந்தனர் | உயர்திணை | பலர்பால் |
பன்மை |
மான் துள்ளியோடியது |
அஃறிணை | ஒன்றன்பால் | ஒருமை |
மலர்கள் மலர்ந்தன | அஃறிணை | பலவின்பால் |
பன்மை |
வழுநிலை என்றால் என்ன
- வழு என்றால் = குற்றம், பிழை
- வழுநிலை = இலக்கண குற்றம் உடைய நிலை
- ஒரு தொடரில் திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று மாறுபட்டு, முன்நின்ற சொல்லுக்கு ஏற்றவாறு அமையாமல் இலக்கணக் குற்றம் தோன்ற வருவது வழுநிலை.
- வினா, விடை, மரபு ஆகியன இடம்பெறும் தொடரிலும் வழு தோன்றும்.
- வழு வரும் இடங்கள் = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய தொடர்களில் வழு வரும்.
வழு எத்தனை வகைப்படும்
- வழு 8 வகைப்படும். அவை,
- திணை வழு
- பால் வழு
- எண் வழு
- இட வழு
- கால வழு
- வினா வழு
- மரபு வழு
- விடை வழு
வழாநிலை என்றால் என்ன
- வழாநிலை = இழக்க குற்றம் இல்லாத நிலை
- நம் முன்னோர் எச்சொல்லை எப்பொருளால் குறித்தனரோ, அச்சொல்லை அப்பொருளிலேயே தொன்றுதொட்டு வழு இல்லாமல் கூறுவதே வழாநிலை. (இலக்கணக் குற்றமில்லாத நிலை)
வழாநிலை எத்தனை வகைப்படும்
- வழாநிலை 8 வகைப்படும். அவை,
- திணை வழாநிலை
- பால்வழாநிலை
- எண் வழாநிலை
- இடவழாநிலை
- காலவழாநிலை
- வினாவழாநிலை
- விடைவழாநிலை
- மரபுவழாநிலை
வழுவமைதி என்றால் என்ன
- பசுவைப் பார்த்து, ”என் அம்மை வந்தாள்” எனக் கூறுவது உண்டு. பசு என்பது, அஃறிணையாயினும், அன்பு மிகுதியால் உயர்திணைக்குரிய பெயரைப் பெற்றுள்ளது.
- இத்தொடர், இலக்கணக் குற்றமுடையதாயினும் சான்றோரால் ஏற்றுக்கொள்ளப் பெற்றமையால் வழுவமைதி ஆயிற்று.
- இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணம் உடையதைப் போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.
- 11TH TAMIL தொடரியல்
வழுவமைதி எத்தனை வகைப்படும்
- வழுவமைதி 5 வகைப்படும். அவை,
- திணை வழுவமைதி
- பால் வழுவமைதி
- இட வழுவமைதி
- கால வழுவமைதி
- மரபு வழுவமைதி
வழு வரும் இடங்கள்
- வழு வருமிடங்கள் = 5.
- வழு வருமிடங்கள் = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய தொடர்களில் வழு வரும்
ஒரு சொல் அல்லது தொடர் அடுக்கி வரும் முறை
- அடுக்கு என்பது மீண்டும் மீண்டும் வருவதை அடிப்படையாகக் கொண்டது.
- அடுக்குமுறை 2 வகைப்படும். அவை,
- சொல் நிலை அடுக்குமுறை
- தொடர்நிலை அடுக்குமுறை
சொல்நிலையில் அடுக்குமுறை
- ஒரு சொல் அடுக்கி வருதல், சொல்நிலை அடுக்குமுறை எனப்படும்.
- எ.கா
- போ போ என் கண் முன்னே நிற்காதே
தொடர் நிலையில் அடுக்குமுறை
- தொடர் நிலை அடுக்குமுறை 3 வகைப்படும். அவை,
- வினை எச்சங்கள் அடுக்கு வருதல்
- வீணை முற்றுகள் அடுக்கி வருதல்
- வேற்றுமை உருபுகள் அடுக்கி வருதல்
வண்ணச் சினைச் சொல் என்றால் என்ன
- செங்கால் நாரை = செம்மை + கால் + நாரை
- இதில்,
- செம்மை = அடை (பண்பு)
- கால் = சினை (உறுப்பு)
- நாரை = எழுவாய்
- இவ்வாறு தொடரில், அடையைக் (பண்பைக்) குறிக்கும் செம்மை என்னும் சொல் முதலிலும், சினையைக் (உறுப்பைக்) குறிக்கும் சொல் இரண்டாவதாகவும், முதலைக் (எழுவாயைக்) குறிக்கும் சொல் மூன்றாவதாகவும் வருவதனை வண்ணச் சினைச் சொல் என்பர்.
- அடை, சினை, முதல் ஆகியன மயங்காது முறையாக அடுக்கி வருவது = வண்ணச் சினைச் சொல் என்பர்.
- வண்ணச் சினைச் சொல் எடுத்துக்காட்டுகள் = செங்கால்நாரை, கரிகால் வளவன், செங்கண் செழியன், மைவிழி மாதவி, அழுமூஞ்சிப் பாப்பா, சுருட்டைத்தலப் பையன்.
- 11TH TAMIL தொடரியல்
ஒரு தொடரை அடிப்படையாகக் கொண்டு செருகலும் விரித்தலும்
- ஒரு தொடரில் பெயரெச்ச, வினை எச்சங்கள், தாம் முடிக்கும் சொல்லுக்கு முன் இடையில் வேறு சொற்களும் வரலாம்.
இடைச்செருகல் என்றால் என்ன
- ஒரு தொடரில் பெயரெச்ச, வினை எச்சங்கள், தாம் முடிக்கும் சொல்லுக்கு முன் இடையில் வேறு சொற்களும் வரலாம்.
- இதனை தொல்காப்பியர் “இடைநிலை” என்பார்.
- “இடைநிலையை” மொழி அறிஞர்கள் “இடைச்செருகல்” என்று கூறுவர்.
பெயரெச்ச தொடரில் இடைச்செருகல் வருதல்
- ஆடிய மயில் = ஆடிய அழகான மயில் (அழகான = இடைநிலை / இடைச்செருகல்)
- கிடைத்த நூல் = கிடைத்த அரிய நூல் (அரிய = இடைநிலை / இடைச்செருகல்)
வினை எச்ச தொடரில் இடைச்செருகல் வருதல்
- படித்துக் கூறினான் = படித்து பொருள் கூறினான் (பொருள் = இடைநிலை / இடைச்செருகல்)
- உழுது வந்தான் = உழுது ஏரோடு வந்தான் (ஏரோடு = இடைநிலை / இடைச்செருகல்)
இடைப்பிறவரல் என்றால் என்ன
- ‘அறத்தை அரசன் விரும்பினான்’ எனவும் ‘உண்டது பசித்த யானை’ எனவும் வரும் தொடர்களில், முறையே வேற்றுமையுருபும் முற்றுவினையும் அமைந்துள்ளன.
- அரசன், பசித்த என்னும் பிற சொற்கள் அவற்றோடு பொருந்தி வந்துள்ளன.
- இவ்வாறு பிற சொற்கள் நிற்றலை ‘இடைப்பிறவரல்’ என்பர்.
அடைமொழி என்றால் என்ன
- அடைமொழி 2 வகைப்படும். அவை,
- பெயரடை
- வினையடை
- பெயரடை என்பது = பெயரை சிறப்பித்து வருவது ஆகும்
- வினையடை என்பது = வினையை சிறப்பித்து வருவது ஆகும்.
- எ.கா
- வெள்ளைக் குதிரை விரைவாக ஓடியது
- வெள்ளைக் = பெயரடை
- குதிரை = பெயர்
- விரைவாக = வினையடை
- ஓடியது = வினை
- வெள்ளைக் குதிரை விரைவாக ஓடியது
ஒரு தொடரை இருவகையாக விளக்குதல்
- குறிப்பிட்ட ஒரு தொடரை இருவகையாக விளக்குவது பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.
- எ.கா
- புலி கொல் யானை
- புலியை கொன்ற யானை
- புலியால் கொல்லப்பட்ட யானை
- புலி கொல் யானை
தொடரில் முன்பின் மாற்றம்
- ஒரு தொடரும் முன்பின் மாற்றம் அடைந்து வருவது = வேற்றுமை உருபு ஆகும்.
- வேற்றுமை உருபு வரும் இடங்கள் = 2 இடங்கள் (தொடரின் இடையிலும், தொடரின் இறுதியிலும்)
- எ.கா
- உழுதான் வயலை (தொடரின் இறுதியில் ஐ உருபு வந்துள்ளது)
- கணினியை இயக்கினான் (தொடரின் இடையில் ஐ உருபு வந்துள்ளது)
- தமிழில் தொடரியலை விட கட்டமைப்புடன் விளங்குவது = உருபனியல்
- நெகிழ்வுத்தன்மை கொண்ட அமைப்பு = தொடரியல் ஆகும்.
- 11TH TAMIL தொடரியல்
உருபனியல் என்றால் என்ன
- தமிழில் தொடரியலை விட கட்டமைப்புடன் விளங்குவது = உருபனியல்
- ஒரு மொழியில் பொருள் உணர்த்தும் மிகச்சிறிய கூறு உருபன்.
- இதனைப் பகுக்க முடியாது.
- ஒலியனை அடையாளம் காண்பதற்கு இரு ஒலிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடும் தன்மை மட்டும் போதுமானது.
- உருபன்களை அடையாளம் காண வேண்டுமானால், அதன் வடிவமும் அது உணர்த்தும் பொருளும் தேவை.
ஒலியனியல் என்றால் என்ன
- ஒலியனியல் குறிப்பிட்ட ஒருமொழியில் உள்ள பேச்சு ஒலிகளைக் குறிப்பது ஒலியனியல்.
- ஒரு மொழியில் பொருள் வேறுபாட்டை உணர்த்தக்கூடிய மிகச்சிறிய ஒலிக்கூறே ஒலியன்.
- எ.கா. பட்டம் – சட்டம்
- இச்சொற்களில் முதலில் அமைந்துள்ள பகரமும் சகரமும் (ப், ச்) பொருளை வேறுபடுத்துகின்றன.
- இவை ஒலியன்கள் ஆகும்.
தோன்றா எழுவாய் என்றால் என்ன
- எழுவாய் வெளிப்படையாக இல்லாமல் தொடர் அமைந்து வருவது ஆகும்.
- எ.கா.
- திண்ணை மெழுகிற்று
தோன்றாச் செயப்படுபொருள் என்றால் என்ன
- ஒரு தொடரில் செயப்படுபொருள் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வருவது தோன்றாச் செயப்படுபொருள் எனப்படும்.
- எ.கா
- நான் படித்தேன் (பாடம் – தோன்றாச் செயப்படுபொருள்)
- நான் ஆடினேன் (நடனம் – தோன்றாச் செயப்படுபொருள்)
தோன்றாப் பயனிலை என்றால் என்ன
- ஒரு தொடரில் பயனிலை வரவில்லை எனில், அதனை தோன்றாப் பயனிலை என்பர்.
- எ.கா
- எனக்குப் பசி (இருக்கிறது – தோன்றாப் பயனிலை)
முக்காலத்துக்கும் பொருத்தமுடைய வினைமுற்று
- முக்காலத்துக்கும் பொருத்தமுடையது = வினைமுற்று
- முக்காலத்தும் இருக்கும் ஒரு பொருளை விளக்கும்போது, அத்தொடரின் வினைமுற்று, செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைதல் வேண்டும் என வினையியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
- எடுத்துக்காட்டாக,
- நீர் குளிரும்
- மலை நிற்கும்
- ஞாயிறு தோன்றும்
- ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும்
- நூலகம் காலை ஒன்பது மணிக்குத் திறக்கும்
- ஆகிய தொடர்களைக் கூறலாம்.
- இவையனைத்தும் செய்யும் என்னும் வாய்பாட்டால் அமைந்துள்ளன.
வினைமுற்று எத்தனை வகைப்படும்
- வினைமுற்று 2 வகைப்படும். அவை,
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன
- ஒரு செயலைத் தெளிவாகத் தெரிவிக்கும் வினைமுற்று = தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
- இவ்வினைமுற்றின் விகுதியானது திணை, பால், எண், இடம் ஆகியவற்றையும் உணர்த்துகிறது.
- எடுத்துக்காட்டாக
- நடந்தான் என்னும் வினைமுற்றில் உயர்திணை திணை), ஆண்பால்(பால்), ஒருமை (எண்), படர்க்கை (இடம்) ஆகியன உள்ளன.
- இஃது, இறந்தகாலத்தையும் குறிக்கிறது.
- செய்பவன், கருவி, காலம், நிலம், செயல், செய்பொருள் ஆகிய ஆறனையும் வெளிப்படையாக உணர்த்துகிறது.
- 11TH TAMIL தொடரியல்
குறிப்பு வினைமுற்று என்றால் என்ன
- செயல் செய்பவரை வெளிப்படையாகக் காட்டிச் செயலையும் காலத்தையும் குறிப்பாகத் தெரிவித்து நிற்கும் வினைச்சொல்லே குறிப்பு வினைமுற்று.
- பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப் பெயரின் அடியாகக் குறிப்புவினை தோன்றும்.
- இவன் பொன்னன் என்பது, பொன்னை உடையவனாக இருந்தான், இருக்கிறான், இருப்பான் எனப் பொருளுணர்த்திச் செயலையும் காலத்தையும் குறிப்பாகவும் செயல் செய்பவனை வெளிப்படையாகவும் கூறுகிறது
தொடர் வகைகள் எத்தனை வகைப்படும்
- தொடர் வகைகள் நான்கு வகைப்படும். அவை,
- செய்தித் தொடர்
- வினாத் தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
தொடரமைப்புகள் எத்தனை வகைப்படும்
- தொடரமைப்புகள் 3 வகைப்படும். அவை,
- தனிநிலை தொடரமைப்பு
- தொடர்நிலை தொடரமைப்பு
- கலவைதொடர் தொடரமைப்பு
மணிப்பிரவாள நடை என்றால் என்ன
- மணிப்பிரவாள நடை என்பது மணியும் பவளமும் கலந்தது போல் வடசொற்களையும் தமிழ்ச்சொற்களையும் கலந்து எழுதும் நடை ஆகும்.
- மணிப்பிரவாள நடை செல்வாக்குப் பெற்றிருந்த காலம் = இடைக்காலம்.
- பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம், சத்திய சிந்தாமணி முதலிய நூல்கள் இந்நடையில் அமைந்திருந்தன.
தொகைநிலை தொடர் என்றால் என்ன
- சொற்கள் தொடர்ந்து நின்று, பொருள் தருவது தொடர்.
- இருசொல்லுக்கு இடையே ஏதேனும் ஓர் உருபு மறைந்து வருவது, தொகைநிலைத் தொடர் எனப்படும்.
- தொகை = தொக்கி வருதல்/ மறைந்து வருதல்
தொகைநிலை தொடர் எத்தனை வகைப்படும்
- தொகைநிலை தொடர் 6 வகைப்படும். அவை,
- வேற்றுமை தொகை
- வினை தொகை
- பண்பு தொகை
- உவமை தொகை
- உம்மை தொகை
- அன்மொழி தொகை
- எ.கா
- “பழம்பால்” என்பதன் இலக்கணக்குறிப்பு = பண்புத்தொகை (பழைமை + பால், பழைய பால்)
- “பழம் பால்” என்பதன் இலக்கணக்குறிப்பு = உம்மைத்தொகை (பழமும் பாலும்)
தொகாநிலை தொடர் என்றால் என்ன
- தொகைநிலைக்கு எதிர்மறை தொகாநிலை.
- இரு சொல்லுக்கிடையே உருபு/ சொல் மறையாது வருவது தொகாநிலைத் தொடர்கள் என்பர்.
தொகாநிலை தொடர்கள் எத்தனை வகைப்படும்
- தொகாநிலை தொடர்கள் 9 வகைப்படும். அவை,
- எழுவாய்த்தொடர்
- வினைமுற்றுத்தொடர்
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
- விளித்தொடர்
- வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத் தொடர்
- கவிதையியல்
- புதுக்கவிதை
- நாட்டுப்புறப்பாடல்கள்
- தனிப்பாடல்கள்
- சித்தர் பாடல்கள்
- சிற்றிலக்கியங்கள்
- ஓவியப்பா
- ரவீந்த்ரநாத் தாகூர்
- தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
- உலக சிறுகதை ஆசிரியர்கள்
- நாடகக்கலை
- தெருக்கூத்தில் கட்டியக்காரன்
- நாடகவியல் ஆளுமைகள்