11TH TAMIL இதழாளர் பாரதி
11TH TAMIL இதழாளர் பாரதி
- கல்வி என்பது பள்ளியில் அல்லது கல்லூரியில் மட்டும் பெறப்படுவதன்று.
- கல்வி கற்பவர், இதழ்களிலும் நடைமுறை அறிவைப் பெறுவதுடன் அதற்கேற்ப வாழவும் முனைகின்றனர்.
- இவ்விதழ்களின் ஆசிரியர்கள் சமூகத்திற்குத் தேவையான பாடங்களை முன்வைக்கின்றனர்.
- சிறந்த பத்திரிகையாளன் ‘நல்ல ஆசான்’ என்பதில் ஐயமில்லை.
- பாரதியும் இதற்கு விலக்கன்று.
தமிழ்ச்சிற்பி பாரதி
- செம்மொழியாகத் திகழும் நம் மொழி புதிய நடையும் புதிய உடையும் புதிய பொருளும் கொண்டு எழுச்சியுடன் திகழக் காரணமாக அமைந்த தமிழ்ச்சிற்பி பாரதியின் மற்றொரு பரிமாணம் இதழியல் பணி.
- தமிழ்ச்சிற்பி எனப்படுபவர் = பாரதியார்
பாரதியின் இதழியல் பணி
- பாரதி கவிஞர் மட்டுமல்ல; சிறந்த பேச்சாளர்; பாடகர்; கட்டுரையாளர்; கதை ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் அறிஞர்; ஆன்மிகவாதி;
- அனைத்திற்கும் மேலே மிகச்சிறந்த இதழாளர் ஆவார்.
தமிழாசிரியர் பணி
- எட்டயபுர சமஸ்தானத்தில் பணியாற்றிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
- மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
-
பாரதியார் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இதழாளர் பாரதி
- பள்ளிப் பணியில் இருந்து வெளியேறி, சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியர் பணிக்கு சேர்ந்தார்.
- பாரதி பணியாற்றிய இதழ்கள் = சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி (யங் இந்தியா), விஜயா, சூர்யோதயம், கர்மயோகி
- மேற்கண்ட இதழ்களில் ஆசிரியராகவும், துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பாரதி படைப்புகள்
- சர்வ ஜன மித்திரன், ஞானபாநு, காமன் வீல், கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரம் போன்ற இதழ்களிலும் பாரதி தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
பாரதியாரின் புனைப்பெயர்கள்
- தம் பெயரையும் தம்மையும் முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் “தான்” என்ற ஒன்றை ஒழித்தவர் பாரதி.
- பாரதியாரின் புனைப் பெயர்கள் = இளசை சுப்ரமணியன், சாவித்திரி, சி.சு. பாரதி, வேதாந்தி, நித்திய தீரர், உத்தமத் தேசாபிமானி, ஷெல்லிதாசன், காளிதாசன், சக்திதாசன், ரிஷிகுமாரன், காசி, சரஸ்வதி, பிஞ்சுக்காளிதாசன், கிருஷ்ணன்.
- பாரதி, தம் மனைவி செல்லம்மாவையும் கண்ணம்மா, வள்ளி என்ற புனைபெயர்களிலேயே குறிப்பிட்டிருப்பார்.
முதன் முதலில் கருத்துப்படங்களை வெளியிட்டவர்
- கருத்துடன் காட்சியும் இடம்பெறுவது வாசகர்களைக் கவரும்தானே அப்பா.
- பாரதி அன்றே தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துப்படங்களையும் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டுள்ளார்.
- பாரதியார் “கேலிச்சித்திரத்தை”, “விகடச்சித்திரம்” என்று குறிப்பார்.
- தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி.
- தமிழில் ‘சித்திராவளி’ என்ற பெயரில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றையும் நடத்த விரும்பினார்.
- அதைச் செயல்படுத்த முடியாவிட்டாலும் இந்தியா, விஜயா ஆகிய இரு இதழ்களிலும் கருத்துப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சியில் பாரதியின் பங்கு
- தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதி.
பெண்களுக்காக குரள் வெண்பா எழுதிய பாரதி
- பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி பெண்களுக்காகத் தமது ‘சக்ரவர்த்தினி’ இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்.
பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு |
சிவப்பு வண்ண “இந்தியா” இதழ்
- பாரதியார் தனது “இந்தியா” இதழை சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்.
- சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின் இந்தியா இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது.
-
பாரதியார் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மகுடமிடல்
- தமிழ் இதழ்களில் முதன் முதலில் தமிழில் தலைப்பிடுவதற்கும் முன்னோடி பாரதியே ஆவார்.
- தலைப்பிடலை “மகுடமிடல்” என்று பாரதி கூறுகிறார்.
பாரதியார் கட்டுரைகள்
- எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.
அமானுல்லா கான்
- இதழாளராகவே இறந்தார். இறந்து போவதற்கு முதல்நாள் இரவு, தூங்கச் செல்லும் முன்பு, நாளைக்கு,”அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போகவேண்டும்” என்று இறுதியாகப் பாரதியார் கூறியுள்ளார்.
- பாரதியார் இறப்பதற்கு முன்னர் இறுதியாக எழுத நினைத்தது = அமானுல்லா கான் பற்றியது
- ‘பாரதியைப் பற்றி நண்பர்கள்’ என்ற நூலை படைத்தவர் = ரா. அ. பத்மநாபன்.
-
பாரதியார் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மரபு கவிதைகள்
புதுக்கவிதை
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- 11TH TAMIL இதழாளர் பாரதி
- 11TH TAMIL இதழாளர் பாரதி
- 11TH TAMIL இதழாளர் பாரதி
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்
கடித இலக்கியம்
கலைகள்
உரைநடை
- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க
- வையாபுரிப்பிள்ளை
- தி.சு.நடராசன்
- ஆறுமுக நாவலர்
- இராசமாணிக்கனார்