இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர்.
இவருடைய கவிதைகள் “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தம் எழுத்துக்கள் எளிய மக்களுக்கு ஆனவை என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் என்ற மூவகையிலும் நின்று வாழ்ந்தவர் = இன்குலாப்
மரணத்திற்கு பிறகு அவருடைய உடல், அவர் விருப்பப்படி செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.
இன்குலாப் – தகவல்கள்
தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர்.
இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.