11TH TAMIL படைப்பாக்க உத்திகள்

11TH TAMIL படைப்பாக்க உத்திகள்

11TH TAMIL படைப்பாக்க உத்திகள்
11TH TAMIL படைப்பாக்க உத்திகள்

11TH TAMIL படைப்பாக்க உத்திகள்

  • உவமை வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும் என்றார் தொல்காப்பியர்.

வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்

–     (தொல்காப்பியம் – 1222)

  • எடுத்துக்காட்டு
    1. புலி போலப் பாய்ந்தான் – வினை (தொழில்)
    2. மழை போலக் கொடுக்கும் கை – பயன்
    3. துடி போலும் இடை – வடிவம் (மெய்)
    4. தளிர் போலும் மேனி – உரு (நிறம்)

உவமையின் உறுப்புகள்

  • கண்ணன் புலி போலப் பாய்ந்தான், என்பதில்,
    • கண்ணன் – உவமேயம் (பொருள்)
    • புலி – உவமானம் (உவமை)
    • போல – உவம உருபு
    • பாய்தல் – பொதுத்தண்மை
  • இந்த நான்கு உறுப்புகள் உவமையை அமைக்கின்றன.
11TH TAMIL படைப்பாக்க உத்திகள்
11TH TAMIL படைப்பாக்க உத்திகள்

உருவகம் என்றால் என்ன

  • ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் பொழுது அது உருவகம் எனப்படுகிறது.
  • உவமை, உவமைத் தொகையாகி உருவகமாக ஆயிற்று.
  • உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது ‘உருவகம்’ ஆகும்.
  • உருவகத்தொடரில் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும்.
  • உவமையின் செறிவார்ந்த வடிவமே உருவகம்.
  • தாமரை போலும் முகம் என்ற உவமை செறிவூட்டப்பட்டு முகத்தாமரை என உருவகத்தை உருவாக்குகிறது.

உருவகம் – எடுத்துக்காட்டுகள்

  • முகத்தாமரை
  • சினத்தீ
  • தீயின் குழம்புகள்
  • செழும்பொன் காய்ச்சிவிட்ட ஓடைகள்
  • தங்கத்தீவுகள்
  • நீலப்பொய்கைகள்
  • தங்கத்தோணிகள்
  • கருஞ்சிகரங்கள்
  • தங்கத்திமிலங்கள்
  • நீலவயலின் நட்சத்திர மணிகள்
  • மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்

உருவகத்தின் வகைகள்

  • உருவகம் நான்கு வகைகள். அவை,
    • வினை உருவகம்
    • பயன் உருவகம்
    • வடிவ (மெய்) உருவகம்
    • உரு (நிறம்) உருவகம்

உள்ளுறை உவமம்

  • கவிஞர் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை உள்ளுறை உவமம் (உவமை) என்பர்.
  • உள்ளுறை உவமம் என்பது தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி.
  • அன்பிற்கு ஆட்படும் தலைவன் தலைவியரின் எண்ணங்களைச் சொற்களால் வெளிப்படுத்தாமல் நாகரிகமாக மறைத்துக் கூறுவதற்காக அமைத்துக்கொள்ளும் வடிவமாகவும் இதைக் கருதுகின்றனர்.
  • இலக்கியங்களில் காணப்படும் கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக மட்டும் நின்றுவிடாமல், பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களின் உள்ளத்தெழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் உள்ளுறை அமையும்.
  • கவிதைகளில் உள்ள குறிப்புப்பொருள் காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உடையது.
  • எனவே கருப்பொருள் கொண்டு விளக்கப்படும் குறிப்புப் பொருளாகிய உள்ளுறை உவமம் தமிழிலக்கியத்தின் நேரிய, இனிய, நாகரிக வழியாகும்.
  • வினை, பயன் போன்ற அடிப்படையில் தோன்றுபவை = உள்ளுறை
  • குறியீடுகளை கொண்டு உருவாக்கப்படுபவை = உள்ளுறை

உள்ளுறை உவமும், இறைச்சியும்

  • கவிஞர், தெரியாத பொருள் ஒன்றைத் தெளிவாக விளக்குவதற்குத் தெரிந்த பொருளை உவமையாகப் பயன்படுத்துவர்.
  • வெளிப்படையாகப் பொருள் கூறினால் உவமை.
  • உவமைக்குள் மற்றொரு பொருளைக் குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை.
  • குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருக்குமானால் அதற்கு இறைச்சி என்று பெயர்.
  • உள்ளுறை உவமம் கவிதைப் பொருளோடு சேர்ந்து காணப்படுகிறது.
  • இறைச்சிப் பொருள் கவிதைப்பொருளின் புறத்தே குறிப்புப் பொருளாய் வெளிப்படுகிறது.

இறைச்சி என்றால் என்ன

11TH TAMIL படைப்பாக்க உத்திகள்
11TH TAMIL படைப்பாக்க உத்திகள்
  • உள்ளுறை போன்றே இறைச்சி என்பதும் அகப்பாடலில் வருகின்ற மற்றொரு உத்தி ஆகும்.
  • இதுவும் குறிப்புப் பொருளில்தான் வரும்.
  • இறுத்தல் என்றால் தங்குதல் எனப் பொருள்படும்.
  • உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும்.
  • இது வடமொழியினர் குறிப்பிடுகிற தொனிக்கு இணையானது.
  • தொனி அகப்பாடலிலும் புறப்பாடலிலும் வரும்.
  • ஆனால், இறைச்சி அகப்பாடலில் மட்டுமே வரும்.

 

 

 

 

Leave a Reply