11TH TAMIL யானை டாக்டர்

11TH TAMIL யானை டாக்டர்

11TH TAMIL யானை டாக்டர்
11TH TAMIL யானை டாக்டர்

காட்டின் மூலவர்

  • காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளைக் “காட்டின் மூலவர்” என்போம்.

டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி

  • இவர் தமிழக அரசின் வனத்துரையில் விலங்குகள் மருத்துவராக பணியாற்றியவர்.
  • “டாக்டர் கே” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
  • இவர் யானைகளுக்கு உரிய “சிறப்பு மருத்துவராக” அறியப்பட்டார்.

இந்திய வனவியல் துறை

  • டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் “இந்திய வனவியல் துறையின்” கையேடாக இன்றும் உள்ளது.

யானைகளின் வேறு பெயர்கள்

11TH TAMIL யானை டாக்டர்
11TH TAMIL யானை டாக்டர்
  • கயம், அரசுவா, அல்லியன், அனுபமை, வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம்.

யானைகள்

  • மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளுள் யானைகள், அதிக நாள்கள் வாழும் தரைவாழ் விலங்குகள் ஆகும்.
  • வேட்டை விலங்குகளாகவும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவையாகவும் இருக்கின்ற சிங்கம், புலி முதலியனவும் நெருங்க அஞ்சும் வலிமை கொண்டவை யானைகள்.
  • இவை குடும்பமாக வாழும்; மிகுதியான நினைவாற்றல் கொண்டவை.
  • யானைகளுள் மூன்று வகைகள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.
  • அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகியனவாகும்.
  • பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றன.

11TH TAMIL யானை டாக்டர்

  • யானை டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர்.
  • யானைகளுக்காகத் தம் வாழ் நாளையே அர்ப்பணித்தவர்.
  • உலகப்புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.
  • வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருதினை 2000ஆம் ஆண்டில் பெற்றார்.
  • தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசின் மூலம் செயல்படுத்தியவர்.

எழுத்தாளர் ஜெயமோகன்

  • ஜெயமோகன், நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
  • விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு, சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
  • இயற்கை ஆர்வலர்.
  • யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார்.
  • யானை டாக்டர் என்னும் இந்தக் குறும் புதினம் ‘அறம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply