11TH TAMIL மெய்ம்மயக்கம்

11TH TAMIL மெய்ம்மயக்கம்

11TH TAMIL மெய்ம்மயக்கம்

  • சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும்.

மெய்ம்மயக்கம் வகைகள்

  • இது உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என இரண்டு வகைப்படும்.

உடனிலை மெய்ம்மயக்கம்

  • சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலைமெய்ம்மயக்கம் எனப்படும்.

உடனிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள்

11TH TAMIL மெய்ம்மயக்கம்
11TH TAMIL மெய்ம்மயக்கம்
  • க், ச், த், ப்
  • தமிழில் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துகள் தம் எழுத்துகளுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்க எழுத்துகள் ஆகும்.
  • இந்த எழுத்துகளின் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும்.
  • பிற எழுத்துகள் வாரா.
  • அவ்வாறு வந்தால் அச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்காது.
  • எடுத்துக்காட்டாக, பக்கம் என்ற சொல்லில் (ப + க் + க் + அ + ம்) க் என்னும் மெய்யெழுத்து தொடர்ந்து இருமுறை வந்துள்ளதைப் பாருங்கள். இதுபோலவேச்,த்,ப் ஆகிய எழுத்துகளும் வரும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

  • சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள்

11TH TAMIL மெய்ம்மயக்கம்
11TH TAMIL மெய்ம்மயக்கம்
  • ர், ழ்
  • தமிழில் ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகள் தம் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்.
  • எனவே, இவ்விரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரியவையாகும்.

பிற மெய் எழுத்துக்கள்

11TH TAMIL மெய்ம்மயக்கம்
11TH TAMIL மெய்ம்மயக்கம்
  • க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறனையும் தவிர்த்த ஏனையபன்னிரண்டுமெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன.
  • இவற்றையும் மெய்ம்மயக்கம் என்றே கொள்ள வேண்டும்.

ஈரொற்று மெய்ம்மயக்கம்

  • தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும். (மூன்று மெய்களாக மயங்கி வரும்) இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.
  • ஈரொற்று மெய்ம்மயக்கம் எழுத்துக்கள் = ய், ர், ழ்

 

 

 

 

 

 

 

Leave a Reply