11TH TAMIL திருமலை முருகன் பள்ளு

11TH TAMIL திருமலை முருகன் பள்ளு

11TH TAMIL திருமலை முருகன் பள்ளு
11TH TAMIL திருமலை முருகன் பள்ளு

பள்ளு இலக்கியம்

  • உழவர், உழத்தியரின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும்.
  • ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது என்பர்.
  • வேளாண்மை இலக்கியமான பள்ளு, அரிய பல செய்திகளின் கருவூலமாக விளங்குகிறது.

அருஞ்சொற்பொருள்

  • ஆரளி – மொய்க்கின்ற வண்டு
  • இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
  • இடங்கணி – சங்கிலி
  • உளம் – உள்ளான் என்ற பறவை
  • சலச வாவி – தாமரைத் தடாகம்
  • தரளம் – முத்து
  • வட ஆரிநாடு – திருமலை
  • கா – சோலை
  • முகில்தொகை – மேகக் கூட்டம்
  • மஞ்ஞை – மயில்
  • கொண்டல் – கார்கால மேகம்
  • மண்டலம் – உலகம்
  • வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
  • அளியுலாம் – வண்டு மொய்க்கின்ற
  • தென் ஆரிநாடு – குற்றாலம்

இலக்கணக்குறிப்பு

  • செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்
  • அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை
  • கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத்தொகை

உழத்திப்பாட்டு

11TH TAMIL திருமலை முருகன் பள்ளு
11TH TAMIL திருமலை முருகன் பள்ளு
  • பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • இது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படும்.
  • தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும்.

திருமலை முறுகன் பள்ளு கூறும் நெல் வகைகள்

  • சீரகச்சம்பா
  • சீதாபோகம்
  • ரங்கஞ்சம்பா
  • மணல்வாரி
  • அதிக்கிராதி
  • முத்துவெள்ளை
  • புழுகுச்சம்பா
  • சொரிகுரும்பை
  • புத்தன்வாரி
  • சிறைமீட்டான்
  • கார்நெல்
  • அரியநாயகன்
  • கருங்சூரை
  • பூம்பாளை
  • குற்றாலன்
  • பாற்கடுக்கன்
  • கற்பூரப்பாளை
  • காடைக் கழுத்தன்
  • மிளகுச் சம்பா
  • பனைமுகத்தன்
  • மலைமுண்டன்
  • திருவரங்கன்
  • குருவைக் கிள்ளை
  • முத்துவெள்ளை
11TH TAMIL திருமலை முருகன் பள்ளு
11TH TAMIL திருமலை முருகன் பள்ளு

திருமலை முறுகன் பள்ளு கூறும் மாடு வகைகள்

  • காரி
  • தொந்திக்காளை
  • மால்காளை
  • மறைகாளை
  • மயிலைக்காளை
  • மேழைக்காளை
  • செம்மறையான்
  • கருமறையான்

திருமலை முறுகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள்

  • கலப்பை
  • நுகம்
  • பூட்டு
  • வள்ளைக்கை
  • உழக்கோல்
  • கொழு கயமரம்
  • மண்வெட்டி
  • வடம்

கண்காணி, கங்காணி

  • கண்காணி என்பது, பேச்சு வழக்கில் கங்காணி என்று பயன்படுத்தப்படுகிறது.
  • கண்காணம் என்பது பயிர்த்தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்.
  • கங்காணம் என்றும் வழங்கப்படுகிறது.
  • இதன் பொருள், நாள் தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும்.
  • கண்காணி என்பது இந்த ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும்.

11TH TAMIL திருமலை முருகன் பள்ளு

  • திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டணம்.
  • இவ்வூர் ‘பண்பை ‘ – என்றும் பண்பொழில்’ என்றும் அழைக்கப்படும்.
  • இங்குள்ள சிறு குன்றின் பெயர் திருமலை. குன்றின் – மேலுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது.
  • இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன.
  • இந்நூல் ‘பள்ளிசை’ என்றும் ‘திருமலை அதிபர் பள்ளு‘ எனவும் வழங்கப்படுகிறது.
  • திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர்.
  • இவர் காலம் 18ஆம் நூற்றாண்டு.

 

 

 

 

 

Leave a Reply