11TH TAMIL மனோன்மணீயம்
11TH TAMIL மனோன்மணீயம்
- 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது.
- இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும்.
- நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த நாடக நூல் = மனோன்மணீயம்
- காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குவது = மனோன்மணியம்.
- இயற்கையில் ஈடுபாடுகொண்டு, அதனில் தோய்ந்து இணையில்லாத ஊக்கமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவதாக உள்ள நூல் = மனோன்மணியம்.
கதை மாந்தர்
- அரண்மனையில் உள்ள சுந்தர முனிவரின் அறையில் இருந்து ஆசிரமம் வரை ரகசிய அறை அமைக்க நினைக்கிறார்.
- இதற்கான பணியை நடராசனுக்கு அளிக்கிறார்.
அருஞ்சொற்பொருள்
- கடிநகர் – காவல் உடைய நகரம்
- காண்டி – காண்க
- பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்
- ஆசு இலா – குற்றம் இலாத
- தோட்டி – துறட்டி
- அயம் – ஆடு, குதிரை
- புக்க விட்டு – போகவிட்டு
- சீரியதூளி – நுண்ணிய மணல்
- சிறுகால் – வாய்க்கால்
- பரல்-கல்
- முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை
- அண்டயோனி – ஞாயிறு
- சாடு – பாய்
- ஈட்டியது – சேகரித்தது
- எழிலி – மேகம்
- நாங்கூழ்ப்புழு – மண்புழு
- ஓவா – ஓயாத
- பாடு – உழைப்பு
- வேதித்து – மாற்றி
இலக்கணக்குறிப்பு
- கடி நகர், சாலத் தகும் – உரிச்சொற்றொடர்கள்
- உருட்டி – வினையெச்சம்
- பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
- இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
- பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
- ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
- பார்த்துப் பார்த்து, நில் நில், உழுதுழுது – அடுக்குத் தொடர்கள்
- வாய்க்கால் – இலக்கணப் போலி (முன் பின் தொக்கியது)
- செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
- மலையலை, குகைமுகம் – உவமைத்தொகைகள்
- நெறுநெறு – இரட்டைக்கிளவி
- புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
- காலத்தச்சன் – உருவகம்
- ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
- புழுக்களும் பூச்சியும்-எண்ணும்மை
- தங்குதல் – தொழிற்பெயர்
பிரித்து எழுதுக
- காலத்தச்சன் = காலம் + தச்சன்
- உழுதுழுது = உழுது + உழுது
- பேரழகு = பெருமை + அழகு
தமிழ் நாடக இலக்கண நூல்கள்
- அகத்தியம்
- செயன்முறை
- செயிற்றியம்
- குணநூல்
- கூத்தநூல்
- முறுவல்
- சந்தம்
- மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்
- சயந்தம்
- நாடகவியல்
மனோன்மணியம் நூல் குறிப்பு
- தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் = மனோன்மணீயம்.
- லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார்.
- இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது.
- இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது களங்களையும் கொண்டது.
- நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
- மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை ‘சிவகாமியின் சரிதம்’.
பேராசிரியர் சுந்தரனார் குறிப்பு
- பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855 இல் பிறந்தார்.
- திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
- சென்னை – மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
- இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.