தமிழ்த் திரைப்பட வரலாறு

தமிழ்த் திரைப்பட வரலாறு

தமிழ்த் திரைப்பட வரலாறு
தமிழ்த் திரைப்பட வரலாறு

தமிழ்த் திரைப்பட வரலாறு

  • 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் = திரைப்படம
  • 1895 இல் லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்தியாவில் 1896ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.
  • சென்னையில் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் இக்காட்சி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன.

திரையரங்கு

  • 1900இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர்.
  • 1905இல் திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமாட்டோ கிராப்’ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனத் தைத் தொடங்கினார்.
  • தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்’ இதுவே.
  • அதன் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸைக் கட்டிப் பல படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.
  • 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இதுவே.

மௌனப்படம்

  • டுபாண்ட் என்பவர் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றைவிளக்கும் கதைப்படத்தைக் கொண்டு வந்து பம்பாயில் காட்டினார். அந்தப் படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை ‘ என்பதாகும்.
  • இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் = ‘ஏசுவின் வாழ்க்கை’
  • தாதாசாகேப் பால்கே தயாரித்து வெளியிட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்னும் மௌனப்படமே இந்தியர் ஒருவர் தயாரித்து வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.
  • நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவி, 1916இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

தமிழ்த் திரைப்பட வரலாறு

பேசும் படங்கள்

  • 1926இல் ‘வார்னர்’ சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு முதன் முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு வெளிவந்த படம் ‘டோன்ஜுன்’.
  • அதன்பின் உரையாடலையும் பாடல்களையும் கொண்டு உலகில் முதல் பேசும்படான ‘தி ஜாஸ் சிங்கர் (The Jazz Singer) வெளிவந்தது.
  • இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931 இல் அர்தேஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸும்’ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது.
  • அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது.
  • இதுவே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.
  • 1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது. இதில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும்படம் “சீனிவாசக் கல்யாணம்” ஆகும்.

சீர்திருத்த படங்கள்

  • 1935 ஆம் ஆண்டு முதல் சீர்திருத்த கதைகளை கொண்ட படங்கள் வெளிவந்தன.
  • “கௌசல்யா” என்ற திரைப்படம் இக்கதையமைப்பில் வெளிவந்த முதல் படமாக அறியப்படுகிறது.
  • அடுத்து வடுவூர் துரைசாமியின் மேனகா, காசி விஸ்வநாதரின் டம்பாச்சாரி விலாசம் ஆகிய படங்கள் இவ்வகையில் வெளிவந்தன.

 

 

 

Leave a Reply