12TH TAMIL சிலப்பதிகாரம்
12TH TAMIL சிலப்பதிகாரம்
- பிற உயிரினங்களில் இருந்து மனிதனித் தனித்து காட்டுவது கலை.
- அது நுட்பமான தன்மையையும் திறனையும் உள்ளடக்கியது.
- கலைகளில் நடனக்கலை தமிழர்களால் போற்றப்பட்டு கற்கப்பட்டது.
அருஞ்சொற்பொருள்
- புரிகுழல் = சுருண்ட கூந்தல்
- கழை = மூங்கில்
- கண் = கணு
- விரல் = ஆடவர் கைப் பெருவிரல்
- உத்தரப் பலகை = மேல் இடும் பலகை
- பூதர் = ஐம்பூதங்கள்
- ஓவிய விதானம் = ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
- நித்திலம் = முத்து
- விருந்து = புதுமை
- மண்ணிய = கழுவிய
- நாவலம்பொலம் = சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
- தலைக்கோல் = நாடக கணிகையர் பெறும் பட்டம்
- ஓடை = முக படாம்
- அரசு உவா = பட்டது யானை
- பரசினர் = வாழ்த்தினர்
- பல்இயம் = இன்னிசைக் கருவி
- குயிலுவ மாக்கள் = இசைக் கருவிகள் வாசிப்போர்
- தோரிய மகளிர் = ஆடலில் தேர்ந்த பெண்கள்
- வாரம் = தெய்வப்பாடல்
- ஆமந்திரிகை = இடக்கை வாத்தியம்
- இலைப்பூங்கோதை = அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
- கழஞ்சு = ஒரு வகை எடை அளவு
பாடலில் முக்கிய கருத்து
- சுருண்ட கூந்தலை உடையவள் மாதவி
- ஐந்தாவது வயதில் ஆடல் கற்பதற்கான சடங்குகளை செய்து, 7 ஆண்டுகள் வரை நாட்டியம் கற்றவள்
- 12-வது வயதில் நாட்டியம் அரங்கேற்ற சோழன் அவைக்கு வந்தாள்.
- மூங்கிலால் ஆன ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமும் உடைய அரங்கை அமைத்தனர்
- அரங்கில் தூணிற்கு மேல் வாய்த்த உத்திரப்பலகைக்கும் தளத்தில் உள்ள பலகைக்கும் இடையே இடைவெளி = நான்கு கோல்
- ஒருமுக எழினி = நாடக மேடையில் ஒரே பக்கத்தில் திரை இழுக்கப்படுகின்ற வகையில் அமைக்கப்படும் திரைச்சீலை ஒருமுக எழினி எனப்படும்.
- பொருமுகத்திரை = மேடையின் இரு புறத்தில் இருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் திரை
- கரந்துவரல் திரை = மேடையின் மேல் இருந்து வேண்டும் போது கீழே இறக்கும் திரை
- அரங்கேற்றத்தை சிறப்பாக முடிக்கும் ஆடல் மகள்களுக்கு வழங்கப்படுவது = தலைக்கோல் (நாடக கணிகையர் பெறும் பட்டம்)
- தலைக்கோல் = பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புரன்காட்டிய அவனிடம் இருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்பட்டது.
- இந்திரனின் மகன் = சயந்தன்
- நாடக கணிகையர்க்கு வழங்கப்பட்ட பரிசு = ஆயிரெத்தெட்டுக் கழஞ்சுப் போன் மாலை
இலக்கனக்குறிப்பு
- தொல்நெறி = பண்புத்தொகை
- ஆடலும் பாடலும் = எண்ணும்மை
யாழின் வகைகள்
21 நரம்புகள் கொண்டது |
பேரியாழ் |
17 நரம்புகள் கொண்டது |
மகரயாழ் |
16 நரம்புகளை கொண்டது |
சகோடயாழ் |
7 நரம்புகளை கொண்டது |
செங்கோட்டியாழ் |
சிலப்பதிகாரம்
- நம் பாடல் பகுதியில் அமைந்துள்ளது = சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில் உள்ள அரங்கேற்று காதை
- சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள் = குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், புரட்சிக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.
- இரட்டை காப்பியங்கள் = சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் = இளங்கோவடிகள்
- பாரதியார் = “சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்கிறார்
- இளங்கோவடிகள் தன்னை, “தான் சேரன் செங்குட்டுவனின் தம்பி” எனக் கூறுவது = வரந்தரு காதையில் குறிப்பிடப்பட்டுள்ளது
-
சிலப்பதிகாரம் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- 12TH TAMIL சிலப்பதிகாரம்