12TH TAMIL திரைமொழி
12TH TAMIL திரைமொழி
- கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மைச் சூழ்ந்த பெருங்கனவே திரைப்படம்
- மொழிக்கு இருப்பது போல் நிறுத்தற்குறிகள், அசைவுகள், அமைப்புகள், உத்திகள் என எல்லாமும் இதன் காட்சி மொழிக்கும் உண்டு.
லூமியர் சகோதரர்கள்
- 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் மாலை 5 மணி = பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள “கிராண்ட் கபே விடுதி” முன் “அதிசயம் பிறக்கிறது” என்ற தலைப்பில் விளம்பரம் செய்யப்பட்டு மக்கள் முன் முதன் முதலாக திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.
- அன்று கிராண்ட் கபே விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட திரைப்படங்களே பிற்பாடு உலகையே கட்டிப்போடும் பேராற்றலாக வளர்ந்துள்ளது.
தாமஸ் ஆல்வா எடிசன்
- அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டு பிடித்தவர் = தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்
- பிரான்சின் லூமியர் சகோதரர்கள் = படம் பிடிக்கும் கருவியோடு “திரையிடும் கருவியையும்” (PROJECTOR) சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகிற்கு அளித்தனர்.
- ஜார்ஜ் மிலி = திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்
காட்சி மாற்றம்
- காட்சி மறைவு = ஒரு காட்சியை சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக் காட்டுதல், காட்சி மறைவு (FADE OUT) ஆகும்
- காட்சி உதயம் = இருட்டாக இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறுதல், காட்சி உதயம் (FADE IN) எனப்படும்
- கலவை / கூட்டு = ஒரு காட்சி மறையும் போதே அடுத்த காட்சி தெரியத் தொடங்கும். இதனை கலவை / கூட்டு (MIX) என்பர்
காட்சிமொழி
- ஒரு மணிநேர நிகழ்வை 5 நொடிகளில் காட்சி தொகுப்புகளாக பார்வையாளர்களிடம் உணர்த்த முடிவதையே “காட்சி மொழி” என்கிறோம்
படத்தொகுப்பு
- தேவையற்ற காட்சிகளை நீக்கி, தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பதே படத்தொகுப்பு ஆகும்.
குலஷோவ் விளைவு
- “மாடர்ன் டைம்ஸ்” (1936) திரைப்படத்தில் மனிதர்கள் தொழிற்சாலைக்குள் முண்டியடித்து செல்வதை, செம்மறியாடுகள் முண்டியடித்து செல்லும் காட்சிகளை காட்டி, சமூகத்தில் மனிதர்கள் சில நேரங்களில் மந்தைகளாக மாறுவதை காட்டினர்.
- இதனை “குலஷோவ் விளைவு” (KULESHOV EFFECT) என்பர்
கர்நாடக மாநிலம் ஹெக்கோடு
- கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு என்னும் சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை.
- 1977 இல் ஒரு முயற்சியாக உலகில் முக்கிய விருது பெற்ற திரைப்படங்கள் அங்கு ஆறுநாள் திரையிடப்பட்டன.
நாடகம், திரைப்படம்
- திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தல் நாடகத்தின் குழந்தை எனலாம்
- நாடகம் = ஒற்றைக் கோணக்கலை (SINGLE DIMENSION ART)
- திரைப்படம் = முப்பரிமாணக் கலை (THREE DIMENSIONAL ART)
நேரேட்டர் / கதைசொல்லி
- மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து கதை சொல்லும் காலமும் இருந்தது.
- அவருக்கு “நேரேட்டர்” (கதைசொல்லி) என்று பெயர்
சார்லி சாப்ளின்
- இங்கிலாந்தின் இலண்டனில் பிறந்தவர்
- நாடக நடிகராக சேர்ந்து, அமேரிக்கா சென்று திரை வாய்ப்பை பெற்றார்
- லிட்டில் டிராம்ப் (LITTLE TRUMP) = அவருக்காக அவரே உருவாக்கிக்கொண்ட உருவம்
- அவரின் வறுமைக் காலங்களை “தி கிட்” (THE KID) என்ற பெயரில் படமாக்கினார்
- அவர் தொடங்கிய பட நிறுவனம் = யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
- அவரின் சிறந்த திரைப்படங்கள் = தி கோல்டு ரஷ் (THE GOLD RUSH), தி சர்க்கஸ் (THE CIRCUS)
- சாப்ளினின் முதல் பேசும் படம் = சிட்டி லைட்ஸ் (CITY LIGHTS)
- தொழில்மைய உலகை விமர்சிக்க “மாடர்ன் டைம்ஸ்” (MODERN TIMES) என்ற படத்தை எடுத்தார்
- தி கிரேட் டிக்டேட்டர் = அவரின் சாதனைப் படமான “தி கிரேட் டிக்டேட்டர்” (THE GREAT DICTATOR) 1940 இல் வெளிவந்தது. இதில் ஹிட்லரை விமர்சித்து வெளிவந்த முதல் படம். இதில் “மனித குலத்திற்கு தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும் தான்” என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது
- இப்படத்தில் ஹிட்லரை காட்சிபடுத்த “ஹென்கோல்” என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கினார்.
- 1952 இல் அமேரிக்கா அவரை நாடு கடத்தியதாக அறிவித்தது.
- அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற பிரிவில் “ஆஸ்கார் விருது” வழங்கப்பட்டது.
சாமிக்கண்ணு வின்சென்ட்
- தனது மனைவியின் வைரமாலையை விற்று, 2500 ரூபாய்க்கு “DUPONT’ என்ற பிரெஞ்ச்காரர் இடம் இருந்து ஒரு புரோஜெக்டரையும் சில துண்டுப் படங்களையும் வாங்கி, தமிழகம் முழுவதும் காட்சிகளை நடத்தினார்
- தமிழ் சினிமாவின் முன்னோடி (LEGEND OF TAMIL CINEMA) என அழைக்கப்பட்டார் = சாமிக்கண்ணு வின்சென்ட்
- இவர் சென்னையில் இருக்கும் பொழுது சினிமாத் தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கிய அடியாக “ப்ரொஜெக்டர்களை” இறக்குமதி செய்து விற்றார். இதனால் புதிய திரையரங்குகள் தமிழகத்தில் முளைத்தன.
அஜயன் பாலா
- திரைமொழி குறித்த இப்பாடம் “திரு. அஜயன் பாலா” வின் கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டு சுஜாதா, செழியன், அம்ஷன்குமார் முதலானோரின் திரைப்பார்வைகளை ஊடும்பாவுமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கலைச்சொற்கள்
காட்சி மறைவு |
FADE OUT |
காட்சி உதயம் |
FADE IN |
கதைசொல்லி |
NARRATOR |
மீ சேய்மைக் காட்சித்துணிப்பு |
EXTREME LONG SHOT |
சேய்மைக் காட்சித்துணிப்பு |
LONG SHOT |
நடுக் காட்சித் துணிப்பு |
MID SHOT |
மீ அண்மைக் காட்சித் துணிப்பு |
EXTREME CLOSE UP SHOT |
படங்காட்டுதல் |
EXHIBITION |
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- 12TH TAMIL திரைமொழி
- அகநானூறு