7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி.
- தமிழ்மொழி பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டு கூறுகளைக் கொண்டது.
- இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு. வேற்றுமையும் உண்டு
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மொழி என்பது யாது
- தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும்.
- மொழியின் மூலமாகவே மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒலிக் குறியீடுகள்
- மொழிகள் பல தோன்றக் காரணமாக இருந்தது = ஒலிக் குறியீடுகள்.
- ஒலியின் வரிவடிவம் “எழுத்து” ஆகும்.
பேச்சுமொழி
- வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும்.
- மொழியின் முதல் நிலை எனப்படுவது = பேசுவதும் கேட்பதும்.
எழுத்துமொழி
- கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்து மொழியாகும்.
- மொழியின் இரண்டாம் நிலை எனப்படுவது = எழுதப்படுவதும் படிக்கப்படுவதும்.
பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி = உடனடி பயன்பாட்டிற்கு உரியது.
- வரி வடிவில் அமையும் எழுத்து மொழியானது = நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரியது.
தமிழ்மொழி
- தமிழ் மொழியில் பேச்சு, எழுத்து ஆகிய இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.
பேச்சுமொழி
- மொழியின் உயிர்நாடியாக விளங்குவது = பேச்சுமொழி.
- உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தவது = பேச்சுமொழி.
- கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டது = பேச்சுமொழி.
- பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள் = பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம்.
பேச்சுமொழியில் பொருள் வேறுபாடு
- பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சு மொழியின் பொருள் வேறுபடும்.
- “கவனி” என்னும் சொல்லின் பொருள்கள் = பேணுதல், கவனித்துச் செல்.
- ஒரு தொடரில் எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்பப் பேச்சுமொழியில் பொருளும் வேறுபடும்.
- சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை, நன்னூல் நூற்பா விளக்குகிறது.
“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” – நன்னூல் |
- “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நன்னூல்.
வட்டார மொழி என்றால் என்ன
- பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
- மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடுவது = வட்டாரமொழி.
- இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை “வட்டார மொழி” என்பர்.
கிளைமொழி என்றால் என்ன
- ஒரே மொழியை பேசும் மக்களில், வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் ஆகியவற்றின் காரணமாக பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும்.
- மக்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது, மாற்றங்கள் ஏற்பட்டு புதிய மொழிகள் உருவாகும்.
- இவ்வாறு உருவாகும் புதிய மொழிகளை “கிளை மொழி” என்பர்.
எழுத்துமொழி
- பேச்சுமொழியின் வரிவடிவமே = எழுத்துமொழி.
- ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு இன்றியமையாதது = எழுத்துமொழி.
- காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப எழுத்துமொழி சிதைவதில்லை. ஆனால் வரிவடிவம் மாறுபடும்.
பேச்சுமொழி எழுத்துமொழி வேறுபாடுகள்
பேச்சுமொழி |
எழுத்துமொழி |
பேச்சுமொழி “உலக வழக்கு” எனப்படும் |
எழுத்துமொழி “இலக்கிய வழக்கு” எனப்படும் |
சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும் |
சொற்கள் முழுமையாக எழுதப்படும் |
உணர்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும் |
உணர்சிக் கூறுகள் குறைவாக இருக்கும் |
உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் காரணமாக கருத்தை எளிமையாக உணர்த்த முடியும் |
உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு இடமில்லை. |
சிந்தித்தலுக்கு நேரம் குறைவு |
சிந்தித்து எழுத முடியும் |
பிழைகளை திருத்திக்கொள்ள வைப்பு இல்லை |
திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு |
இலக்கிய நடையில் அமைவதில்லை |
இலக்கிய நடையில் அமையும் |
விரைந்து மாற்றமடையும் மொழி |
பெரும்பாலும் மாறுவதில்லை |
பிறமொழிச் சொற்கள் கலப்பு அதிகம் |
பிறமொழிச் சொற்கள் கலப்பு குறைவு |
மொழித் தூய்மை குறைவு |
மொழித் தூய்மை அதிகம் |
இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன
- பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.
- தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது.
- தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.
இரட்டை வழக்கு மொழி
- தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.
- தமிழ் மொழியை “இரட்டை வழக்கு மொழி” என்பர்.
மொழி பற்றி மு.வ கூற்று
- மு.வ = ‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு.
- மு.வ = எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’.
குழந்தைகளுக்குத் தாய்மொழி
- கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.
- மொழியின் முதல்நிலை = கேட்டல், பேசுதல்.
- படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.
- மொழியின் இரண்டாம் நிலை = படித்தல், எழுதுதல்.
- விடுதலைத் திருநாள்
- பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- அறிவுசால் ஔவையார்
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
- 7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- 7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- 7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- 7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- 7TH TAMIL பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- ஒன்றே குலம்
- மெய்ஞ்ஞான ஒளி
- அயோத்திதாசர் சிந்தனைகள்
- மனித யந்திரம்
- யாப்பு இலக்கணம்
- திருக்குறள்
- உயர்க்குணங்கள்
- இளைய தோழனுக்கு
- சட்டமேதை அம்பேத்கர்
- பால் மனம்
- அணி இலக்கணம்