8TH TAMIL ஒன்றே குலம்

8TH TAMIL ஒன்றே குலம்

8TH TAMIL ஒன்றே குலம்

8TH TAMIL ஒன்றே குலம்

  • மனிதர்களிடையே பிறப்பால் உயர்வுதாழ்வு பாராட்டுவது தவறானது.
  • உலகமக்கள் அனைவரையும் உடன் பிறந்தவராக கருதி அன்பு காட்ட வேண்டும்.
  • பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைக் தமக்கு ஏற்பட்டதாக கருதி அவற்றை போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருமந்திரப் பாடல்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே

–    திருமூலர்

அருஞ்சொற்பொருள்

  • நமன் = எமன்
  • சித்தம் = உள்ளம்
  • நம்பர் = அடியார்
  • நாணமே = கூசாமல்
  • உய்ம்மின் = ஈடேறுங்கள்
  • ஈயில் = வழங்கினால்
  • படமாடக்கோயில் = படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

திருமூலர் ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL ஒன்றே குலம்
8TH TAMIL ஒன்றே குலம்
  • அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர்.
  • இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • எனவே, இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர்.
  • இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
  • “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருமூலரின் திருமந்திரம்.
  • “படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருமூலரின் திருமந்திரம்.

 

 

 

Leave a Reply