7TH TAMIL ஒன்றல்ல இரண்டல்ல

7TH TAMIL ஒன்றல்ல இரண்டல்ல

7TH TAMIL ஒன்றல்ல இரண்டல்ல

7TH TAMIL ஒன்றல்ல இரண்டல்ல

  • தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது
  • அதே போல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது.
  • தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • ஒப்புமை = இணை
  • அற்புதம் = வியப்பு
  • முகில் = மேகம்
  • உபகாரி = வள்ளல்

பாடலின் பொருள்

  • பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்.
  • அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
  • முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி.
  • புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்.
  • இவர்கள்போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.
7TH TAMIL ஒன்றல்ல இரண்டல்ல
7TH TAMIL ஒன்றல்ல இரண்டல்ல

உடுமலை நாராயணகவி ஆசிரியர் குறிப்பு

  • பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
  • இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
  • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

 

 

 

Leave a Reply